திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது: ஹெச்.ராஜா!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

raja h interview - 2026

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது! திமுக.,வை துடைத்தெறிய வேண்டும்; அதற்கு மக்கள் தயாராக வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார்!

மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது அவர், ஹேமாவதி, ஹேரங்கி அணைகளை கர்நாடகா கட்டியபோது, ஆட்சேபனை ஏதும் இல்லை என்று சட்டமன்றத்தில் 1970 மார்ச் மாதம் ஆறாம் தேதி கருணாநிதி கூறினார். இதைவிட தமிழகத்திற்குச் செய்யும் பாவச் செயல் உண்டா?

கருணாநிதி சென்னைக்குச் செய்த புண்ணியம், ஏரியை அழித்து வள்ளுவர் கோட்டம் கட்டியது தான்!

திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது! இதற்கு எடுத்துக்காட்டு, திமுக பொருளாளர் துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என்பது! உள்ளூரில் உள்ள தமிழருக்கு தண்ணீர் தர மறுத்தால் வேறு எங்கு இருந்துதான் பெற முடியும்?

எனவே, திமுக.,வை துடைத்தெறிய வேண்டும்; அதற்கு மக்கள் தயாராக வேண்டும்! தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றார் ஹெச்.ராஜா.

1 thought on “திமுக இருக்கும் வரை தமிழகத்தில் நல்லதே நடக்காது: ஹெச்.ராஜா!”

  1. தி.மு.க. என்ற ஒரு கட்சி தமிழகத்தை அழித்தது போதும் என்று மக்களே சொல்கிறார்கள், திரு ராஜா சொன்னதுபோல தி.மு.க. தமிழகத்திலிருந்தால் மக்களுக்கு ஒரு நன்மையையும் கிடைக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.