இந்தியாவின் உயர் கல்வியை உலக தரத்துக்கு மேம்படுத்த… புதிய கல்விக் கொள்கை: நிர்மலா சீதாராமன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

nirmalaseetharaman1 - 2026

வரும் 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை 11 மணி முதல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசி வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முழு நேர முதல் மத்திய பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுகிறார்.

#BudgetDay2019  17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வரும் பட்ஜெட் உரையில் .. சில முக்கிய அம்சங்கள்…

nirmalaseetharaman budget - 2026மழைநீர் சேமிப்பு மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை

2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்

5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறை நிலையில் ஒழிக்கப்பட்டுள்ளன

நகரங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்

இந்தியாவின் 95% நகரங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாதவையாக மாறியுள்ளன

ஒவ்வொரு கிராமத்திலும் இணைய வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்

காந்தி இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்காக தேசிய அளவில் காந்திபீடியா உருவாக்கப்பட்டு வருகிறது

இந்தியாவின் உயர் கல்வியை உலகத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.