சமூகத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக., ‘கொத்தடிமைப் பத்திரம்’!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

kothadimai pathiram1 - 2026

திமுக., என்ன சங்கரமடமா என்று கேள்வி கேட்ட திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் திருமகனார் தி.மு.க.ஸ்டாலினின் குமாரர் உதயநிதி தற்போது திமுக.,வின்  இளைஞர் அணி செயலராக நியமிக்கப் பட்டுள்ளார். இதை அடுத்து, சமூக வலைத் தளங்களில் கிண்டலும் கேலியும் அதிகம் பகிரப் பட்டு வருகின்றன.

அவற்றில், மிக உச்ச பட்சமாக, வாரிசு அரசியல் குறித்து வெட்ட வெளிச்சமாக்கும் வகையில், பரம்பரை அடிமை சாசனம் என்றும், கொத்தடிமை பத்திரம் என்றும் ஒரு பகிர்வு அதிகம் வைரலாகியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டா என பல தளங்களிலும் வைரலாகப் பரவி வரும் இதன் வாசகங்கள்…

கொத்தடிமை பத்திரம்: திராவிட நாடு கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை மூன்று புறம் எல்லையாகவும் வங்காள விரிகுடா கடலை ஒருபுறம் எல்லையாகவும் கொண்டு அமையப்பெற்ற தமிழ் நாட்டில் வாழுகின்ற பெரியாரின் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் வாரிசுகள் ஆகிய நாங்கள் திமுக தலைவர் மு கருணாநிதி அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும் கொத்தடிமை பத்திரம் பின்வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு கோடி உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் உயிர் உள்ள வரையிலும் எங்கள் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்குப் பிறகு மு க ஸ்டாலின் அவருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கும் அவருக்கு பிறகு இன்ப உதயநிதி ஸ்டாலினுக்கும் அவருக்குப் பிறகு அவருடைய பிள்ளைகளுக்கும் கொத்தடிமையாக இருந்து சோம்பு அடித்து அசிங்கப்படுவோமே தவிர ஒருபோதும் திமுகவிலிருந்து விலகி செல்லமாட்டோம் என்று சுயநினைவுடன் எழுதிக் கொடுக்கும் கொத்தடிமை பத்திரம்!

இப்போது நீங்கள் கொடுக்கும் ரூபாய் 200 என்பதை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்து தொகையை சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்!

கடமை கண்ணியம் கட்டுப்பாடு

இப்படிக்கு
பரம்பரை கொத்தடிமைகள்..

  • என்று கிண்டல் செய்து பகிரப் படுகிறது.

kothadimai pathiram - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.