கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு!

சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் வணிகம்

car insurance - 2026

கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 16 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறிய கார்களுக்கு 12 சதவீதமும், பெரிய கார்களுக்கு 12.5 சதவீதமும் மூன்றாம் நபர் காப்பீடு பிரிமிய கட்டணம் உயர்கிறது. இது, குறைந்தபட்ச கட்டணமாக 2,072 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணமாக 7,890 ரூபாயாகவும் இருக்கும்.

இருசக்கர வாகனங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 482 ரூபாயாகவும், 150 முதல் 350 சி.சி. எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் ரூ.1,193 ஆக உயர்வதாகவும், அதற்கு மேற்பட்ட திறன்கொண்ட வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது போல், அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.