மாநிலங்களவை தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சற்றுமுன் சென்னை

admk office royapet - 2026

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக..!

மாநிலங்களவைக்கு தமிழகத்தின் சார்பில் காலியாகும் 6 இடங்களில் அதிமுக தரப்பில் மூன்று இடங்களுக்கு வேட்பாளர்களை நிறுத்தும் வாய்ப்பு உள்ளது இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து இன்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது

முன்னாள் அமைச்சர் முகமது ஜான் மற்றும் மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுவார்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக மக்களவைத் தேர்தலின் போது அதிமுக பாமக இரு கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டபோது ஒரு மாநிலங்களவைத் தொகுதி பாமக விற்கு ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது இந்நிலையில்  மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவைக்கு பாமக தரப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியினர் முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியானது மக்களவை தேர்தல் முடிவுகளில் அதிமுக பாமக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் ஒப்பந்தம் செய்துகொண்ட படி பாமக மற்றும் மாநிலங்களவையில் ஒரு தொகுதியை அதிமுக பொதுக் குமார் என்ற கேள்விக்குறி தற்போது ஏற்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.