பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை கட்டுரைகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
thuglaq cho - 2026

நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். * தமிழ் சமூகத்திற்காக 95 ஆண்டுகள் போராடிய பெரியார் பற்றி பேசும் போது நடிகர் ரஜினி கவனமுடன் யோசித்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ….. திமுக தலைவர் ஸ்டாலின்.

???? துக்ளக் மேடையில் ரஜினி காந்த் பேசியதன் மையப் பொருள், தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எங்கள் ஆசிரியருக்கும், துக்ளக் பத்ரிக்கைக்கும் இலவச விளம்பர ஏஜென்டுகளாக செயல்பட்டு பிரபலப்படுத்தினார்கள் என்பது தான்.

கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் கருத்துரிமையை பாதுகாப்பதிலும், பத்திரிகைச் சுதந்திரத்தை காப்பதிலும் மாவீரராக திகழ்ந்தார்.

ஹிந்து கடவுள்களை நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக கொண்டு செல்ல விரும்பிய திராவிடர் கழகத்தவரின் கருத்துச் சுதந்திரத்திற்கு தடை விதிக்க விரும்பாத பரந்த மனம் கொண்ட முதலமைச்சராக இருந்தார். * அந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் இதழ்களை அச்சத்தில் நுழைந்து பறிமுதல் செய்ய உத்தரவிடும் அளவுக்கு பத்ரிகை சுதந்திரத்தின் மீது தீராத தாகம் கொண்ட தலைவராக திமுக தலைவராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதி திகழ்ந்தார் .

கருணாநிதியின் இந்த கருத்துச் சுதந்திர, பத்ரிகைச் சுதந்திர வேட்கை எங்கள் ஆசிரியரையும், துக்ளக்கையும் மாநிலம் தழுவிய அளவில் பிரபலப்படுத்தியது என்பது தான் ரஜினி பேச்சின் மையக் கருத்து.

????முதலமைச்சராக இருந்த கருணாநிதி துக்ளக் இதழ்களை பறிமுதல் செய்து பத்ரிகை சுதந்திரத்தைக் கட்டிக்காத்து ஆசிரியரையும், துக்ளக்கையும் தமிழ் கூறும் நல்லுகில் பிரபலப் படுத்தினார். பிரதமராக இருந்த இந்திரா காந்தியோ செய்தி ஊடகங்கள் முழுமைக்கும் முன் தணிக்கை விதித்து அகில இந்திய அளவில் பத்ரிகைச் சுதந்திரத்தைப் போற்றி வளர்த்தார். பல வருடங்களுக்கு முன்பே வெளியான சர்வாதிகாரி திரைப்படத்தின் விமர்சனத்தை துக்ளக்கில் வெளியிட்டு நெருக்கடி நிலை கால சூழலை மக்களுக்கு புரிய வைத்து ஆசிரியர் பரபரப்பை உண்டாக்கினார்.

தமிழக அளவில் பிரபலமாக இருந்த ஆசிரியரையும், துக்ளக்கையும் அகில இந்திய அளவில் பிரபலமடைய வைத்த விளம்பர மேலாளர் இந்திரா காந்தி.

கருணாநிதியின் பத்ரிகைச் சுதந்திர பற்றைக் குறித்து விளக்க வேண்டும் என்றால் பெரியார் விட்ட ஊர்வலத்தை சொல்லாமல் எப்படி விளக்க முடியும்? இந்திரா காந்தியின் ஜனநாயகப் பற்றை விளக்க வேண்டுமென்றால் அவர் பதவியில் நீடிக்க முடியாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சொல்லிவிட்டு தானே அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை பிரகடனத்திற்கான காரணத்தை விளக்க முடியும்.

இரண்டையும் சொல்லி தானே ஆசிரியரின் துணிச்சலையும், துக்ளக்கின் வரலாற்றையும் சொல்ல முடியும்?

???? துக்ளக் மேடையில் ரஜினி சொன்னது போல ஆசிரியரின் புகழுக்கும் க்ளக்கின் பெருமைக்கும் உழைத்த இருபெரும் தலைவர்கள், கருணாநிதி மற்றும் இந்திரா காந்தி என்பது உண்மை.

இரண்டு பேரிடமும் காணப்படும் அரிய குணாதிசயம் ஜனநாயகம் மற்றும் பத்ரிகை சுதந்திரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த தீராத காதல் என்றால் அது மிகையல்ல.

கருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடும்,ஜனநாயகமும், பத்ரிகை சுதந்திரமும் நிச்சயம் காக்கப்படும்!

  • வசந்தன் பெருமாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.