பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து தண்ணீரை வீணாக்காதீர்: சல்மான் கான் அறிவுரை!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் சினிமா லைஃப் ஸ்டைல்

abigail sunil divya bottle cap cover - 2026இணையத்தில் வைரலாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். இங்கிலாந்து நடிகர் ஜேசன் ஸ்டாதமின் ‘பாட்டில் மூடி ’சேலஞ்சை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அந்த சவாலை செய்து காட்டியிருந்தார்.

நில்லு நில்லு சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் என இணையதளத்தில் நாளுக்கு ஒரு சவால்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பலரும் ஆர்வமுடன் செய்து வரும் நிலையில், அண்மையில் ‘பாட்டில் மூடி சேலஞ்ச்’ என்ற புதிய சவால் ஒன்று வைரலாகி வருகிறது.

அதன்படி கண்ணாடி பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க, மற்றொருவர் அதன் மூடியை லாவகமாக ‘ஸ்பின் கிக் ’ முறையில் கால்களை சுழற்றி திறக்க வேண்டும். அந்த சவாலை ஏற்று, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது வலது காலை ஒரே முறை சுழற்றி சாமர்த்தியமாக மூடியை பெருவிரல் உதவியுடன் திறந்து காட்டினார்.sushmithasen bottlechallenge - 2026

இதை அடுத்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது காலை கிக் முறையில் செய்து பாட்டில் மூடியை திறந்து காட்டி வீடியோ எடுத்து பகிர்ந்து வந்தனர். நடிகை சுஷ்மிதா சென் உள்ளிட்டோரும் இது போல் பாட்டில் சேலஞ்ச் என்ற பெயரில் பாட்டில் மூடியை கால்களால் உதைத்துத் திறந்து படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்தப் படங்களால் பலரும் தாங்களும் அவ்வாறு செய்ய ஆர்வம் கொண்டு, படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சமூக வலைத்தளங்களில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக இந்த வீடியோக்களே குவிந்தன.

குறிப்பாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு கூட தன் பங்குக்கு அவ்வாறு பாட்டில் மூடி திறப்பு சேலஞ்ச் எடுத்துக் கொண்டு செய்து காட்டினார்.

bottle challenge kiranrijuju - 2026

இந்நிலையில், இவ்வாறு தண்ணீர் பாட்டில்களைத் திறக்க முயற்சி செய்யும் போது, தண்ணீர் அதிகம் கீழே கொட்டி, வீணாக்கப் படுகிறது என்பதை வலியுறுத்திய வண்ணம், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தண்ணீர் கஷ்டம் இருக்கும் சூழலில் இவ்வாறு தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று கூறும் வகையில் அவரது வீடியோ இப்போது டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.