
தமிழகத்தில் இன்று 2115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3ஆவது நாளாக கொரோனா தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 54,000ஐ கடந்தது.
சென்னையில் மட்டும் இன்று 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 41 பேர் உயிரிழந்துள்ளனர்; அதேநேரம் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 38,000ஐ கடந்துள்ளது. இதை அடுத்து சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,327ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 666ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,271ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர், மாலத்தீவிலிருந்து கப்பல் மூலம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தில்லியிலிருந்து வந்த 15 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.

இதுவரை இல்லாத வகையில் வேலூரில் 103 பேருக்கு கொரோனாதோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னையை அடுத்து அதிகபட்சமாக சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 95 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. அடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் 86 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39 பேர் இன்று உறுதி செய்யப்பட்டது