மொகலாயர் படையெடுப்பின் அவலத்தை நினைவுகூர்ந்து… ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற பட்டு வஸ்திர மரியாதை!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்

srirangam vasthram - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலிலிருந்து, திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு மரியாதை செய்யும் வண்ணம், பட்டு வஸ்திர மரியாதைகள் அனுப்பி வைக்கப் பட்டன.

கி.பி. 14ம் நூற்றாண்டில், இஸ்லாமிய படையெடுப்பால் கோயில்கள் பல கொள்ளை அடிக்கப் பட்டன. தில்லியில் இருந்து வந்த முகம்மதிய படையெடுப்பின் போது, 1320ஆம் ஆண்டு முதல் 1360ஆம் ஆண்டு வரை, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் உற்ஸவப் பெருமாளான நம்பெருமாள் பல்வேறு இடங்கள் கோயிலை விட்டு பாதுகாப்பாக வெளியில் கொண்டு செல்லப் பட்டு, வெகு காலம் திருப்பதி திருமலை இருந்த சந்திரகிரி மன்னர் பாதுகாப்பில் இருந்ததை நினைவு கூரும் வகையில் இந்த வைபவம் ஆண்டாண்டு காலமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த வருடமும் ஆடி மாதம் முதல் நாள் திருப்பதி திருவேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த வைபவத்தில் பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் வைத்து பூஜை செய்யப் பட்டது. பின்னர் பட்டுப் புடவைகள், மாலைகள், மங்கலப் பொருட்கள் யானை மீது ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து, வஸ்திர மரியாதை திருப்பதிக்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு, திருவேங்கட முடையானுக்கு இவை சாத்தப் படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.