சோகம் ! மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு !

இந்தியா சற்றுமுன்

bihar minnal - 2026
பீகார் மாநிலத்தில் பருவமழை தீவிரத்தால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் மின்னலின் தாக்கமும் அதிகமாக இருந்தது.

அந்தப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன.அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 8 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.