அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

doyton ohio gun shoot - 2026

அமெரிக்காவின் ஒஹியோவில் டாய்டனில் உள்ள மதுபான பாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் ஒஹியோவில், டாய்டனில் செயல்பட்டு வரும் மதுபான பாரில் புகுந்த மர்மநபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்தத் திடீர் தாக்குதலில் பாரில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து டாய்டன் போலீஸார் டிவிட்டரில் பதிவு செய்த போது, ஒரேகான் மாவட்டத்தில் அதிகாலை 1 மணி அளவில் துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் கிடைத்ததும் உடனே பாதுகாப்புக்கு காவலர்கள் விரைந்து சென்று, இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தனர்.. என்று குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கியுடன் நு‌ழைந்த நபர்கள் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சராமாரியாகச் சுட்டனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.