December 5, 2025, 1:10 PM
26.9 C
Chennai

குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): சிம்மம்

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


5 simmam

சிம்மம் :
மகம் 4 பாதம்,
பூரம் 4 பாதம்,
உத்திரம் 1ம் பாதம் முடிய


சிம்ம ராசி அன்பர்களே குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழில் வருகிறார் மேலும் லாபம் மற்றும் தைரிய   ஸ்தானங்களை  பார்ப்பது நன்மை தருவதாக அமைகிறது தடைபட்டு வந்த திருமணம் ஏற்பாடுகள் கைகூடிவரும் பிள்ளை பெண்ணுக்கு முயற்சித்து வந்த திருமண ஏற்பாடுகள் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு கைகூடிவரும் வரன் தேடி அமையும் அதேபோல் பொருளாதாரம் நன்றாக இருக்கும் பத்தில் இருக்கும் ராகு  ஒன்பதாம் இடம் நோக்கி நகர்வதால் சில வைத்திய செலவுகள் பெற்றோர்கள் மூலமாக உண்டாகும் மன அழுத்தமும் இருக்கும்.

இருந்தாலும் 8க்குடைய குரு பார்வையால்  கடந்த காலங்களில் ஏற்பட்ட வழக்குகள் அவதூறுகள் இவைகள் பூரணமாக விலகி சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வேலை இழந்தவர்கள் மீண்டும் பழைய பதவியை பெறுவார்கள் உத்யோகத்தில் இடமாற்றம் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் குறைவாக இருக்கும் திட்டமிடல் சரியாக இருப்பதால் பெரும்பாலும் நன்மையாக அமையும்.

அதேநேரம் தைரிய ஸ்தானத்தில் புதன் அமர்ந்து சில முடிவுகளால் கசப்பு  நிலை ஏற்படும் சில செலவுகள் வீணாக ஏற்படும் அதேபோல் பயணத்தினாலும்,பெண்களாலும் சில பாதிப்புகள் ஏற்படும் 6ல் சுக்ரன் வரும்போது கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்வோர்கள் சிறப்பாக முன்னேற்றம் இருந்தாலும் கவனம் தேவை கடந்தகால வழக்குகள் சிக்கல்கள் தீர்ந்து விட்டது போல் தெரிந்தாலும் அது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் அதனால் வார்த்தைகளை விடுவதிலும்  யோசித்து செயல்படுவதிலும் கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும்

அனைத்து பிரிவினருக்குமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக இந்த குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது துன்பங்களும் ஓரளவு இருக்கும். கவனம் தேவை.  தனிப்பட்ட ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு இப்போது இல்லை

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் சில சமயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது வார்த்தைகள்  தடித்தால் அதனால் சிரமம் உண்டாகும் பொறுமை அவசியம் குடும்ப அங்கத்தினர்கள் இடையே பேதம் இல்லாமல் இருந்தால மகிழ்ச்சி அதிகரிக்கும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் குழந்தை பாக்கியம் போன்றவை  மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்

ஆரோக்கியம் :  6-க்குடையவர் ஆட்சியாக ஆறாம் இடத்தில் அமர்ந்து நன்மை செய்தாலும் சுக்ரன் 6ல் வரும்போது வயறு, நெஞ்சு சம்பந்தப்பட்ட வியாதிகள் செலவை உண்டாக்கும். வாழ்க்கை துணைவர் மற்றும் பெற்றோர்கள் வழியிலும் சிலருக்கு புத்திரர்கள் வகையில் எதிர்பாரா மருத்துவ செலவுகளை தரும். கவனம் தேவை உணவுப்பழக்கங்கள் சரியாக வைத்திருப்பது நல்லது. ரொம்ப இல்லை என்றாலும் ஓரளவு ஆரோக்கிய பாதிப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அய்யனார் எல்லை தேவதைகள் மற்றும் குலதெய்வம் வழிபாடுகள் நன்மை செய்வதாக அமையும் கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவது மற்றும் பழைய புராதன கோயில்களில் ஒருவேளை பூஜைக்கு உதவி செய்வது விளக்கேற்றி வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தல் இயலாதவர்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவை சிரமங்களை குறைத்து நன்மையாக மாற்றிவிடும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories