Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): கன்னி

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : [email protected]


6 kanni

கன்னி
உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதம்,
சித்திரை 1,2 பாதங்கள் முடிய)


கன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 6ல் குருபகவான் சஞ்சாரம் அவர் 4,    7க்கு உடையவர் அவர் 6ல் மறைந்தாலும் பார்வையால் ஓரளவு நன்மை  உண்டாக்குகிறார் இருந்தாலும் மற்ற கிரக சஞ்சாரங்கள்,  ராகு-கேது வரும் மார்ச் 2022 அன்று 2ம் & 8ம் இடங்களில் சஞ்சரிப்பது பொருளாதாரத்தை ஏற்ற இறக்கத்துடன் செய்யும்

எதிலும் நிதானம் தேவை ஒரு சில நன்மைகள் உண்டானாலும் அது உங்கள் ராசிநாதன் புதன் மற்றும் செவ்வாய் சூரியன் சஞ்சாரங்கள் தருவதாகும் மற்றபடி எதிலும் பக்குவமாக நடந்து கொண்டால் வார்த்தை விடுவதில் கவனம் இருந்தால் ஜீவன ஸ்தானத்திற்கு கஷ்டம் வராது

10-க்குடைய வரும் புதன் என்பதால் வேலைகளில் மாற்றம் வருவது கொஞ்சம் கடினம் அதேவேளை கடின உழைப்பை நீங்கள் தரலாம் ஆனால் முன்னேற்றம் என்பது மிக மெதுவாக இருக்கும் பொதுவில் திட்டமிடல்களை ஆலோசனை பெற்று செய்வது நல்லது. அவசரம் காட்டுவது சரியல்ல ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்தல் நல்ல பலனைத் தரும் வார்த்தைகளை உதிர்ப்பதால் எதிரிகளை சம்பாதித்துக் கொள்வீர்கள்

மேலும் உடல் மனம் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பெரியோர்களை மற்றும்  நலம் விரும்பிகளை கலந்து ஆலோசித்து எதைச் செய்தாலும் அது நன்மையாக அமையும் சொந்தத் தொழில் செய்வோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் தொழில் கூட்டாளிகள் தொழிலாளர்கள் மற்றும் அரசு வங்கி இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதும் நல்ல பலனை தரும்.

புதிய விஸ்தரிப்புகளை ஏப்ரல் 2022க்கு பின் வைத்து கொள்வது நல்லது. அதுவரை பொறுமை தேவை. மற்ற அனைத்து பிரிவினர், மகளிர் விவசாயிகள் அனைவருக்கும் கூட மேற்படி தான் என்பதால் இந்த குருப்பெயர்ச்சியில் நிதானம், மௌனம், விடா முயற்சி இவற்றை கொண்டால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

குடும்பம் : 7-க்கு உடையவர் 6ல் மறைவு நல்லதல்ல என்பர் ஆனால்  கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் இருந்தாலும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும் மேலும் திருமண முயற்சிகள் தாமதத்துக்கு பின் கைகூடும் குரு பகவான் இரண்டாம் இடத்தை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும் புதிய வரவு களையும் கொண்டுவந்து தரும் மேலும் குடும்ப அங்கத்தினர்கள் உடன் நல்ல இணக்கமான நிலை ஏற்படும் பொதுவில் குரு பகவான் 6ல் இருந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்வதால் குடும்பத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது இல்ல தேவைகள் பூர்த்தியாகும் வாழ்க்கை துணை வழியில் வருமானம் பெருகும் அதனால் சிலருக்கு புதிய பூமி வீடு கிடைக்க வாய்ப்புண்டு பிள்ளைகளால் நன்மை உண்டாகும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்

ஆரோக்கியம் : கண் வயிறு தலை இடுப்பு முதுகு எலும்பு இவற்றில் பாதிப்புகள் உண்டாகலாம் ஆறுக்குடைய சனிபகவானை கேது பார்ப்பது மற்றும் 6ல் குரு இருப்பது இவை சில வியாதிகளை உண்டாக்கி மருத்துவச் செலவுகளை கொடுக்கும் மேலும் ஏழுக்குடைய குரு 6ல் மறைவு வாழ்க்கை துணைவர் வழியில் சில வைத்திய செலவுகளை உண்டாக்கும் மேலும் 9க்கு உடைய சுக்கிரன் 5ல் சனியுண்டன் சஞ்சரிக்கும் போது  நோயின் தீவிரம் அதிகமாகும் பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும் கவனமாகவும் சரியான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டால் வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும் ஆரோக்கியம் சீர்படும் பொதுவில் இந்த குரு பெயர்ச்சி உடல் ஆரோக்கிய பாதிப்புகள் வைத்திய செலவுகள் இவற்றை தருவதாக அமைகிறது

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி பகவான் மற்றும் வைத்தியநாதர் இவர்களை வணங்குவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது நன்மைகளைத் தரும். அதேபோல் மற்ற உயிரினங்களான  வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது தர்ம கைங்கரியங்கள் செய்வது நன்மை தரும்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,951FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...