spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): விருச்சிகம்

- Advertisement -
குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : [email protected]


rasi viruchikam

விருச்சிகம்
விசாகம் 4ம் பாதம், அனுஷம் 4 பாதம், கேட்டை 4 பாதம் முடிய


விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு நாளில் குரு பகவான் சஞ்சரிக்கிறார் பார்வையால் 8 10 12ம் இடங்களை பார்க்கிறார் ஓரளவுக்கு நன்மை உண்டாகும் பெரும்பாலும் உங்கள் ராசிக்கு சாதகமான கிரகங்கள் சஞ்சாரங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நடக்கிறது அனைத்துமே உங்களுக்கு சாதகமாக இருக்கும்

மேலும் இத்தனை நாள் ஜென்மத்தில் இருந்த கேது வரும் மார்ச் 2022 முதல் 12ம் வீட்டை அடைகிறார் குரு பார்வை பெறுகிறார் அதேபோல் 6ல் ராகு வருகிறார் அதனால் பல நாள் இருந்து வந்த வியாதிகள் குணமடையும் மனம் தெளிவடையும் செயல்களில் வெற்றி உண்டாகும் மற்றும் எல்லா கிரகங்களும் சில பல நன்மைகளை செய்கிறது அதனால் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும் குருவின் மேற்பார்வை 10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோக மாற்றம், பதவி உயர்வு, சொந்த தொழிலில் விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தியடையும் பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம் என்பதால் இல்ல தேவைகள் பூர்த்தியாகும்

மேலும் 7க்குடைய சுக்கிரன் 2ல் சஞ்சரிப்பது தாமதமாகிக் கொண்டிருந்த திருமணத்தை உடன் முடித்து வைக்கும் அதேபோல் சிலருக்கு குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகம் உண்டாகும்,  கடந்தகால வழக்குகள் சாதகமாகும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்தல் போன்றவை நடக்கும், அதேநேரம் தனிப்பட்ட ஜாதகங்களில் குருபகவான் வலுவற்று இருந்தால் இந்த நன்மைகள் குறைய வாய்ப்புண்டு . பொதுவில் 70% நன்மை தரும் பெயர்ச்சியாக இருக்கும்.

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கடந்தகால கசப்புகள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் முன்புபோல் அல்லாமல் வாழ்க்கை துணைவர் பெற்றோர் குழந்தைகள் என்று அனைவரிடமும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வீர்கள் அதனால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும் மேலும் தாமத பட்ட திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் எதிர்பார்ப்பு அது உண்டாகும் என்பதாலும் சிலருக்கு வீடு வாகன யோகம் இருப்பதாலும் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்

ஆரோக்கியம்  உடல் ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் வைத்தியச் செலவுகள் இருந்தாலும் மார்ச் 2022 முதல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வைத்திய செலவுகள் குறை ஆரம்பிக்கும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும் வாழ்க்கை துணைவர் மற்றும் பெற்றோர்கள் மூலம் உண்டான வைத்திய செலவுகள் குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போகும் பொதுவில் குடும்பத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி அதிகம் இருப்பதால்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : குலதெய்வம் மற்றும் சுவாமிமலை முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது கோளறு பதிகம் சொல்லுவது நன்மையைத் தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை பயக்கும்: 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,161FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,903FollowersFollow
17,200SubscribersSubscribe