
குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – மேஷம்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]

மேஷம் : (அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை 1ம் பாதம் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு 11ல் செப்டம்பர் 14 வரையிலும் பின் நவம்பர் 20 முதல் 13.04.22 வரையிலுமாக சஞ்சரிக்கிறார் இடைப்பட்ட காலத்தில் 10ல் சஞ்சரிக்கிறார்.
குரு வளையம் எனப்படும் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் இவற்றில் உங்கள் ஜனன ஜாதகத்தில் குருபகவான் இருந்து இப்பொழுது நடைபெறும் பெயர்ச்சி மிக பெரிய நன்மைகளை தரும். ஜாதகத்தில் நல்ல வலுவாகவும் 6,8,12ல் மறையாமலும் இருந்து சுபம் பெற்றாலும் கவலை வேண்டாம் இந்த வருடம் பொருளாதாரம் மிக சிறந்து விளங்கும்.
ஜீவன வகையில் ஆதாயம் அதிகரிக்கும். அரசாங்க உதவிகள், குழந்தை பாக்கியம், உழைப்பில் லாபம் என்று பணம் வரும், இடையில் மகரத்தில் சஞ்சரிக்கும் போது அதுவுமே நன்றாக இருக்கும். பணப்புழக்கம் தாராளம், எதிர்பாரா இனங்கள் மூலம் வருவாய் வரும். இதுவரை தடைபட்டுவந்த செயல்கள் யாவும் வெற்றியை தரும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மனம் குதூகலம் அடையும்
புகழ், அதிகாரம் கிடைக்கும். இருந்தாலும் 14.09.21 – 20.11.21 வரையில் எதிலும் கவனம், வாக்கில் நிதானம், பெரியோர்கள் ஆலோசனை கேட்டு நடப்பது, அவசரப்படாமல் இருத்தல் இவை வரும் துன்பங்களை நீக்கிவிடும். இந்த காலத்தில் குரு 10ல் இருந்தும் நன்மை செய்கிறார் ஆனால் மற்ற கிரஹங்களின் தன்மை கொஞ்சம் கெடுதல் செய்வதால் கவனம் தேவை
குடும்பம் : வாழ்க்கை துணைவர் வழியில் வருமானம் பெருகும். கணவர் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய வீடு சிலர் குடிபோகலாம், பெற்றோர் வழியிலும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதர வகையால் நன்மை உண்டாகும். புனித பயணங்கள் , விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சி பெருகி இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும்.
ஆரோக்கியம் : இதுவரை இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். பெற்றோர்வழியில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் இருந்தாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. செப்டம்பர் 14 முதல் நவம்பர் 20 வரையிலான காலத்தில் கொஞ்சம் கூடுதல் செலவு வாழ்க்கை துணைவர் அவரது பெற்றோர் என்றும், வயறு கோளாறுகள், தலைவலி போன்றவை இருக்கும். கொஞ்சம் கவனமாகவும் தகுந்த மருத்துவ சேவையும் பெறுவது நலம் தரும்.
வேலை: உத்தியோகத்தில் இருப்போருக்கு (எல்லா துறையும்) எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பளஉயர்வு, மற்றும் விரும்பிய இடமாற்றம் உண்டாகும். புதிய வேலை வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்திவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். பணப்புழக்கம் தாராளம், மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். அதே நேரம் 14.09.21 – 20.11.21 வரையில் கொஞ்சம் கவனமாகவும் வார்த்தைகளை விடாமலும் எவருடனும் பகையில்லாமல் இருத்தல் அவசியம் இல்லாவிடில் வேலை இழப்பு அல்லது வழக்குகளில் சிக்குவது என இருக்கும்.
சொந்த தொழில் : இதுவரை தடைபட்டுவந்த முயற்சிகள் வெற்றி அடையும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்போருக்கு ஏற்றகாலம், பெண்களை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சி காணும், வங்கி உதவி, எதிர்பார்த்த கடன் கிடைத்தல், நாள்பட்ட சரக்குகள் விற்றுதீரல் என்று செழிப்பாகவே இருக்கும். 14.09.21 – 20-11.21 காலத்தில் கொஞ்சம் நிதானமும், யோசித்து செயல்படலும் அவசியம் பெரிய கஷ்டம் இல்லை எனினும் மன வருத்தங்கள் பொருள் பண விரயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கல்வி : மாணவர்கள் உற்சாகமாக படிப்பார்கள், விரும்பிய பாடங்கள், கல்லூரிகள் கிடைக்கும் சிலருக்கு வெளிநாட்டு படிப்பு கைகூடும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டு பெறுவர் போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டாகும். இருந்தாலும் நண்பர்களை தேர்ந்தெடுப்பது அல்லது புதிய யோசனைகளை செயல்படுத்துவது என வரும்போது பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனை பெற்று செய்வது நலம் தரும்.
ப்ரார்த்தனைகள் : பெரும்பாலும் நன்மை அதிகம் இருப்பதால் உங்கள் குலதெய்வம் இஷ்ட தெய்வ வழிபாடு கோயில் சென்று விளக்கேற்றுதல் அன்னதானம், தர்மங்கள் செய்வது நன்மை தரும்.