
குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – ரிஷபம்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
ரிஷபம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு 10ல்-9ல்-10ல் குருவின் சஞ்சாரம் நன்மை அதிகம் தான். பணவரவு தாராளம், நினைத்தது நிறைவேறல் என்று இருக்கும் அதே நேரம் செவ்வாய், ராகு & கேது 14.11.21 வரை எதிர்பாராத தொல்லை மனதில் தேவையற்ற பயம் அவசரப்படுதல் என்றும் வழக்குகள் போன்றவற்றை சந்திக்கும் நிலை இப்படி பணவிரயம் என்று இருக்கும்.
17.10.21 – 16.11.21 வரை சூரியன் சஞ்சாரமும் அரசாங்க தொல்லை என இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை குருவின் பார்வை 2,4,6 என்று இருப்பதால் பணம், சுகம், வீடு, ஆரோக்கியம் இவற்றுக்கு குறைவு வராது. இருந்தாலும் கொஞ்சம் நிதானித்து யோசனையுடன் எதிலும் செயல்படுவது நன்மை தரும்.
வீடு, நிலம் போன்ற பிரச்சனைகளில் யோசித்து செயல்படுவது அதேபோல் தேவைக்காக கடன்வாங்கும்போதும் அல்லது ஆடம்பரத்துக்காக கடன் வாங்கும் போதும் கவனம் தேவை அதே போல் நண்பர்களாலும் உறவுகளாலும் பண ரீதியான தொல்லை வரலாம். மற்றபடி ஜீவனம் வந்து கொண்டிருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை.
திருமணம் குழந்தை போன்ற இனங்களால் சுப விரயங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியை தரும். தடை பட்ட திருமணம் அமையும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கிட்டும். ராகுவால் பிரயாணம் சில தொந்தரவுகளை தரும். பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும்.
குடும்பம் : கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும் அதே நேரம் வாழ்க்கை துணையின் உறவுகளால் சண்டைகள் கோபம் வருத்தம் இவையும் இருக்கும். பெரும்பாலும் அது பணத்தை சுற்றி இருக்கலாம். பெற்றோர்கள், குழந்தைகள் இவர்களாலும் மகிழ்ச்சியும் இருக்கும் புனித பயணம் செல்வீர்கள், வேண்டுதல்கள் நிறைவேறும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் புதிய வீடு நிலம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். அக்கம்பக்கத்தாரோடு நல்ல உறவுகள் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில் மதிப்பு கூடும்.
ஆரோக்கியம் : தலை, எலும்பு, வாயு தொந்தரவு இருக்கும். அடிக்கடி மருத்துவ செலவு உண்டாகும், வாழ்க்கை துணைவராலும், 9ல் இருக்கும் சனி பெற்றோர்களாலும் மருத்துவ செலவை அதிகரிக்க செய்யும். ரிஷபராசி காரர்களில் ஜனன ஜாதகத்தில் லக்னம் மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆக இருந்தால் விபத்துகள் அல்லது நாள்பட்ட வியாதிகளால் மருத்துவ செலவு கூடும் மற்ற லக்னங்கள் அவ்வளவு செலவு இருக்காது பெரிய பாதிப்பும் இருக்காது.
வேலை: உத்தியோகத்தில் ஒரு நல்ல நிலை ஏற்படும் பதவி, சம்பள உயர்வு விரும்பிய இட மாற்றம் எல்லாம் ஏற்படும். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும் பெரும்பாலும் உத்தியோக நிலையில் பிரச்சனை இருக்காது காரணம் 9 & 10ல் குரு சஞ்சரிப்பதாலும் மற்ற கிரஹங்கள் சாதகமாய் இருப்பதாலும். வீன் விவாதங்களை தவிர்ப்பதும். போராட்டங்கள் போன்றவற்றில் பங்கெடுக்காமல் இருப்பதும். சக ஊழியரிடம் நிர்வாக சம்பந்தமான பேச்சுக்களை பகிராமலும் இருப்பது நன்மை தரும். புதிய வேலை அல்லது இருக்கும் வேலையில் இடமாற்றம் நிச்சயம் ஏற்படும். பண வரவு தாராளமாக இருக்கும். அரசு துறையில் இருப்போருக்கு போனஸாக எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும் புகழ் நல்ல பெயர் உண்டாகும்.
சொந்த தொழில் : நிலம், விவசாயம், விவசாய உபகரணங்கள் விற்பனை, மளிகை, ஓட்டல் போன்ற தொழிலில் இருப்போருக்கு அவ்வப்போது பிரச்சனைகள் பண விரயம் உண்டாகும் மற்ற அனைத்து தொழில் செய்வோருக்கும் பெரும்பாலும் லாபம் உண்டாகும் புதிய தொழிலும் தொழில் விரிவாக்கமும் உண்டாகும் தொழிலாளர்களின் பூரண ஒத்துழைப்பும் அரசாங்க அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்வாங்கல், கடன் வாங்கும் போது, அல்லது கடனாக கொடுக்கும் போது அதிக கவனம் தேவை இல்லாவிடில் வக்ர சஞ்சார காலங்களில் மன உளைச்சலும் வீண் விரயமும் ஏற்படும். பொதுவில் லாபம் நன்றாக இருக்கும்.
கல்வி : புதன் 6,8,12ல் (துலாம், தனூர், மேஷம்) சஞ்சரிக்கும் போது மந்த நிலையில் தேவையற்ற செலவும் ஞாபக மறதியும் உண்டாகும். பெரும்பாலும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 16.04 – 01.5, 27.09. – 01.10, 02.11 -20.11 & 10.12 -04.01.22 வரையிலான பிரியர்டுகளில் கவனம் தேவை புதுமுயற்சிகள் தடைபடும், ஆசிரியர் பெற்றோர் ஆலோசனை படி நடப்பது நன்மை தரும். வெளிநாட்டு படிப்பு இருக்கும் இந்த காலங்களில் முயற்சித்தால் பணவிரயம் அல்லது தடைகள் ஏற்பட்டு மன உளைச்சல் இருந்து கொண்டிருக்கும். மற்ற காலங்கள் நல்ல முன்னேற்றம் உண்டாகும் போட்டி பந்தயங்களிலும் வெற்றி உண்டாகும்.
ப்ரார்த்தனைகள் : நன்மை தீமை சரிசமமாக இருப்பதால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆலயங்கள் சென்று விளக்கேற்றி வழிபடுவது மற்றும் குல தெய்வ வழிபாடு நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.