ஏப்ரல் 22, 2021, 4:24 மணி வியாழக்கிழமை
More

  குரு பெயர்ச்சி : மிதுனம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

  20.06.21 முதல் 14.11.21 வரையில் சுமாராகவும் அதன் பின் நிறைய யோகங்களையும் தருகிறார். இருந்தாலும் பொருளாதாரத்தில்

  gurupeyarchi 2021 2022 - 1

  குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – மிதுனம்

  gurupeyarchi2021 - 2

  குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.

  இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…

  குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.

  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
  ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
  குரோம்பேட்டை, சென்னை – 600 044
  ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
  Email ID : [email protected]


  மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4பாதங்கள், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

  3 mithunam
  3 mithunam

  பொது (பொருளாதாரம், ஜீவனம்) : 9ல் -8ல்- பின் 9லுமாக குருபகவான் சஞ்சரிக்கிறார் முதல் பாதி அதாவது 20.06.21 முதல் 14.11.21 வரையில் சுமாராகவும் அதன் பின் நிறைய யோகங்களையும் தருகிறார். இருந்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும் எந்த வழியிலாவது பணம் வந்து சேரும்.

  பொதுவாக 10க்குடையவர் என்பதால் ஜீவன வழியில் பாதிப்பு இல்லை. தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரம் சிக்கணம் தேவை, அனாவசிய செலவுகளும் வரும் ஆடம்பர செலவுகளும் உண்டாகும். இருந்தாலும் கவனமாக இவற்றை தவிர்க்க இயலும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் வந்து கொண்டே இருக்கும்.

  நெருங்கிய சொந்தங்களின் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் நெருக்கம் உண்டாகும் பெயர் புகழ் அதிகரிக்கும். மேலும் சிலருக்கு புதுவீடுவாங்கும் யோகம் புதிய வாகனங்கள் கிடைத்தல், கடன்தொல்லை முற்றிலுமாக நீங்குதல், புதிய கடன் வாங்கும் அவசியம் இல்லாமல் போகுதல் மன நிம்மதி கூடுதல் என்று நன்றாகவே இருக்கும்.

  முன்னேற்றம் ஸ்லோவாக இருந்தாலும் 14.11.21க்கு பின் மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம் முடிய நல்ல நிலை இருக்கும். பொறுமையாகவும் சிக்கனமாகவும் இருப்பவர்களுக்கு நினைத்த வெற்றி கிடைக்கும்

  குடும்பம் : கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும், பெற்றோர்களால் அல்லது சகோதரவகையில் இருந்துவந்த பிணக்குகள் தீரும். சிறு சிறு சலசலப்பு இருந்தாலும் சமாளித்து குடும்பம் நிம்மதியாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை , குடும்பத்தில் திருமண முயற்சிகள் கைகூடுதல், புதிய வரவுகளால் சந்தோஷம், குழந்தை பாக்கியம் உண்டாதல் என்று மிக நன்றாகவே இருக்கும். 6ல் கேது வருடம் முழுவதும் இருப்பது மிக பெரிய நன்மை, நோய் கடன் எதிரி தொல்லைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும்.

  ஆரோக்கியம் : 6ல் கேது வருடம் முழுவதும் அதே நேரம் 8ல் சனி ஆட்சி வருடம் முழுவதும் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது குரு, மற்ற கிரஹ சஞ்சாரங்கள் வியாதியை குறைத்து மருத்துவ செலவுகளை வெகுவாக குறைத்துவிடும். குடும்ப அங்கத்தினர்களின் மருத்துவ செலவுகளும் முற்றிலுமாக நீங்கிவிட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

  வேலை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை தொழில் நிமித்தமாக அலைச்சல் சிலகாலம் குடும்பத்தை பிரிதல் வேலை பளு கூடுதல் என்ற அளவில் இருக்கும். நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகள் 14.11.21க்கு முன் ஸ்லோவாக வும் அதன் பின் வைக்கும் கோரிக்கைகள் விரைந்தும் நிறைவேறும் ஆனால் கட்டாயம் தேவை நிறைவேறி விடும். இடமாற்றம் கொஞ்சம் மன வருத்தம் தந்தாலும் 14.11.21க்கு பின் மீண்டும் சொந்த இடம் வந்துவிடலாம். வெளிநாட்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீன் விவாதங்களை மேலதிகாரி, உடன் வேலை செய்வோரிடம் தவிர்க்கவும். வேலை போய் மீண்டும் வேறுவேலை கிடைக்கும் ஆனால் அதன் மூலம் வருவாய் குறைய வாய்ப்புண்டு. அதனால் கவனமாக இருத்தல் அவசியம்.

  சொந்த தொழில் : புதிய முதலீடுகள், தொழில் விரிவாக்கம் 14.11.21க்கு பின் நிறைவேறும். அரசாங்கத்தினால் உபத்திரவம் இல்லை ஆனால் அனுகூலம் என்பதும் நவம்பர் 14ம் தேதிக்கு பின்னரே. வேலைக்காரர்களை விரட்டுவது அவர்கள் கோரிக்கைகளை அலட்சிய படுத்துவது கொஞ்சம் மந்த நிலையை வருமான குறைவை ஏற்படுத்தும். போட்டியாளர்கள் தூண்டுதல் இருக்கலாம் கவனமுடன் செயல்படுவது அவசியம். நவம்பர் 14க்கு பின் அரசாங்க உதவி வங்கி கடன் போன்றவை எளிதில் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

  கல்வி : மாணவர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்வார்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் எதிர்பார்த்த பாடங்கள், கல்லூரி, வெளிநாட்டு படிப்பு, மதிப்பெண்கள் கூடுதல் போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்றோர் ஆசிரியர் பாராட்டு என்று பலமாகவே இருக்கும். ராசி நாதன் புதன் சஞ்சாரம் நல்ல நிலையில் வருடம் முழுவதும் இருக்கு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். படிப்பில் கவனம் உண்டாகும். புகழ் வரும்.

  ப்ரார்த்தனைகள் : அனந்த பத்மநாபன், அரங்கன் போன்ற பாம்பு படுக்கையில் இருக்கும் பெருமாளையும், சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபடுவது விளக்கேற்றுவது முடிந்தால் விஷ்ணுசகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும். இந்த பெயர்ச்சியில் நன்மை அதிகம் இருப்பதால் முடிந்த அளவு தர்மங்களை செய்யவும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »