
குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – கடகம்

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4பாதங்கள், ஆயில்யம் 4பாதங்கள் முடிய) :

பொது (பொருளாதாரம், ஜீவனம்) : குருபகவான் உங்கள் ராசிக்கு 8லும்- 7லும் பின் 8லுமாக சஞ்சரிக்கிறார் இதில் 7ல் சஞ்சரிக்கும் 13.09.21 முதல் 14.11.21 வரையிலான காலம் அதிக நன்மை பொருளாதார ஏற்றம் இருக்கும். இதை சாதகமாக மாற்றிக்கொண்டு செயல்பட்டால் பொருளாதார நஷ்டம் தவிர்க்கலாம்.
புதிய வீடு வாகனம் நிலம் வாங்க இந்த காலம் ஏற்றது. மற்ற காலங்களில் பொருளாதார கஷ்டம், பண விரயம், எதையும் செய்யமுடியாமல் தடை உண்டாகுதல், பயம், அச்சம், வழக்குகளில் சிக்குதல் அதனால் பண விரயம் இப்படி பல இருந்தும் அதிக நன்மை உண்டாவது 11ல் செவ்வாய் ராகு சஞ்சாரம் மன தைரியத்தையும் துணிச்சலையும் கொடுக்கும்.
மேலும் சூரியன் ரிஷபம், கன்னி, தனூர்,மேஷம் இவற்றில் சஞ்சரிக்கும் போது பல நன்மைகளும் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுதலும் இருக்கும். இருந்தாலும் கவனம் இன்மை அல்லது பொறுமை இன்மை இவற்றால் வழக்குகள் அதனால் செலவுகள் குடும்ப தேவைகள் நிறைவேறாமல் போகுதல் என்றும் இருக்கும்.
பொதுவில் நன்மை ஒரு 55% தான் கவனம் தேவை, நல்லவர்கள் பெரியோர்களின் ஆலோசனை படி நடப்பது கஷ்டத்தை குறைக்கும். அதே நேரம் பெரிய பாதிப்புகள் வராது கவலை வேண்டாம் அலட்சியமாக இருப்பதை தவிர்த்தால் போதும்.
குடும்பம் : வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது வீட்டில் பெரியோர் பெற்றோர் பேச்சு கேட்டு நடப்பது பொறுமை நிதானம் நன்மை தரும். கணவர் மனைவி இடையே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பிரச்சனை வரலாம். அதே நேரம் குடும்ப ஒற்றுமை பெரிய அளவில் பாதிக்காது. குடும்ப அங்கத்தினர்களின் முயற்சிகள் தடை உண்டாகும். 13.09.21 – 14.11.21 காலங்களில் சேமித்து வைத்து கொள்ளவும் புதிய வீடு முயற்சிகள் நிறைவேறும். அக்கம்பக்கத்தாரோடு மோதல் வேண்டாம்.
ஆரோக்கியம் : மன உளைச்சல் அதிகம் ஆகும் வாழ்க்கை துணைவரின் ஜாதகம் நன்றாக இருந்தால் மருத்துவ செலவுகள் குறையும். பெரும்பாலும் ஆகாரத்தினால் தான் மருத்துவ செலவுகள் உண்டாகும் உணவு கட்டுப்பாடு அவசியம், 9க்குடைய குரு 8ல் மறைவதால் பெற்றோர்வகையிலும் மருத்துவ செலவுகள் உண்டாகும்.
வேலை: மிகுந்த கவனத்துடன் வேலை செய்வது அவசியம், தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்ளவும், மேலதிகாரிகள் மட்டுமல்லாது உடன் வேலை செய்வோருடனும் அனுசரித்து போவது நன்மை தரும். பெரிய முன்னேற்றம் என்பது குறைவு. 13.09.21 – 14.11.21 வரையில் தங்கள் தேவைகள் கோரிக்கைகள் பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாக அதிக வாய்ப்பு சந்தர்பத்தை பயன்படுத்துங்கள் மற்ற காலத்தில் அமைதியாக வேலையை செய்யுங்கள். பொறுமை நன்மை தரும். புதிய வேலை முயற்சிகள் மேற்படி காலத்தில் செய்தால் பலன் உண்டு.
சொந்த தொழில் : வங்கி கடன் கொடுக்கல் வாங்கல், போன்றவற்றில் கவனமாய் இருத்தல், கணக்குவழக்குகளை வரவு செலவுகளை சரிவர வைத்தல் இவை போதும் நிதானமாக தொழில் ஓடும். வருமானம் வரும். 13.09.21 – 14.11.21 இந்த காலத்தில் புதிய தொழில், விரிவாக்கம் போன்றவற்றை செய்யலாம். பொதுவில் ஆடை வடிவமைப்பு, நெசவு தொழில், பிரிண்டிங்க், எழுத்து துறை போன்றவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் பாதிப்பு இருக்கும் மற்றவர்களுக்கு பரவாயில்லை. நிதானித்து செயல்படுவது தகுந்த ஆலோசனைகள் பெற்று செயல்படுவது நன்மை தரும்.
கல்வி : பெரிய அளவில் பாதிப்பில்லை, படிப்பில் அதிக கவனம் தேவை, பண விரயம் இருக்கும், தடைகள் இருக்காது விரும்பிய பாடங்கள், கல்லூரி அதிக பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கும். ஆனாலும் புதன் நன்றாக இருப்பதால் மதிப்பெண்கள் பரவாயில்லை என்ற அளவில் இருக்கும் போட்டி பந்தயங்களும் பரிசை பெற்றுத்தரும். ஆசிரியர் பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும்.
ப்ரார்த்தனைகள் : அம்மன் லக்ஷ்மி போன்ற பெண் தெய்வ வழிபாடு நலம் தரும். நெய் விளக்கேற்றுதல் அம்மன் ஸ்லோகங்களை மாலை வேளையில் சொல்லுதல் பலன் தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.