ஏப்ரல் 10, 2021, 5:51 மணி சனிக்கிழமை
More

  குரு பெயர்ச்சி : சிம்மம் – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

  குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல்

  gurupeyarchi 2021 2022 - 1

  குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – சிம்மம்

  gurupeyarchi2021 - 2

  குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.

  இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…

  குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.

  லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
  ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
  குரோம்பேட்டை, சென்னை – 600 044
  ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
  Email ID : [email protected]


  சிம்மம் : (மகம் 4 பாதங்கள், பூரம் 4பாதங்கள், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

  5 simmam
  5 simmam

  பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு குருபகவான் 07ல் – 06ல் – 07லுமாக சஞ்சரிக்கிறார் நன்மைகள் அதிகம் காரணம், ராசிநாதன் ஏப்ரல் 13ம் தேதி உச்சராசியில் சஞ்சரிப்பது மேலும் புதன், சனி,சுக்ரன், செவ்வாய் இவையும் இந்த வருடம் முழுவதும் நன்மை தருகிறது.

  4ல் இருக்கும் கேது நன்மை தரவில்லை ஆக பெரும்பாலான கிரஹங்கள் நன்மை செயவதால் பொருளாதார ஏற்றம் நிச்சயம் உண்டு. 6லும் கூட குரு நீசம் பெறுவது வக்ரியாக இருப்பது நன்மையே தரும் பிணிகள் அகலும், செலவுகள் குறையும். பெண்கள் மூலம் அதிக நன்மை கிடைக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் மனதில் உற்சாகத்தை தரும், ஏற்கனவே போட்டுவைத்த திட்டங்கள் நிறைவேறும் காலம், தெளிவான சிந்தனை இருக்கும், எதிரிகள் தொல்லை குறையும் கடன் சுமைகள் தீரும். இல்லத்தேவைகள் பூர்த்தியாகும் எதிர்பாரா இனங்களில் வருவாய் வந்து மகிழ்ச்சி தரும்.

  பிள்ளைகள் வழியில் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். நீண்ட நாளாக தடை பட்டு வந்த திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும் வாழ்க்கை துணைவர் வகையில் வருமான உயர்வு ஏற்படலாம். இட மாற்றம் உண்டாகும். பொதுவில் பண புழக்கம் அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இருக்காது திருப்தி அதிகம் இருக்கும்.

  குடும்பம் : வாழ்க்கை துணைவரால் அதிக மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் பிள்ளைகளின் தேவை நிறைவேறும். திருமணம், குழந்தை வரவு என்று குதூகலம் இருக்கும் கேளிக்கைகள் ஆடம்பர பொருட்கள் ஆடை ஆபரண சேர்க்கை, அக்கம்பக்கத்தாரோடு சுமூக உறவு என்று மகிழ்ச்சி இருக்கும். பெற்றோர்கள் ஆசீர்வாதங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் சேருவர் புதிய உறவுகளால் மகிழ்ச்சி இருக்கும்.

  ஆரோக்கியம் : 6ல் சனி நோயை அகற்றும் எதிரிகளை வெல்லும் திறம் உண்டாகும், குடும்ப அங்கத்தினர்கள் பெற்றோர் வகையில் மருத்துவ செலவுகள் வெகுவாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். நாள்பட்ட வியாதிகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய மருத்துவ செலவுகள் இருக்காது.

  வேலை: உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். 10ல் ராகுவும் செவ்வாயும் பத்துக்குடைய சுக்ரன் சஞ்சாரம், லாபத்தையும் ராசியையும் பார்க்கும் குருவின் பார்வை இவை பதவி உயர்வு, சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் வேலை முயற்சிப்போர்க்கு வேலை கிடைத்தல் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம், மற்றும் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறுதல் என்று இருக்கும். பொதுவில் பெரிய கஷ்டங்கள் ஏதுமில்லை. வேலை பளு அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கான பலனும் வருஷ கடைசியில் கிடைக்கும். வீன் விவாதங்களை தவிர்க்கவும். அரட்டை என்ற பெயரில் நிர்வாகத்தை குறை சொல்வதை தவிர்க்கவும்.

  சொந்த தொழில் : போட்டிகள் குறைந்து லாபம் வரும் பெண்களை பங்குதாரரக கொண்ட நிறுவனங்கள் பெண்கள் நடத்தும் நிறுவனங்கள் நல்ல நிலையை தக்க வைத்து கொண்டு வளர்ச்சியும் பெறும். புதிய தொழில் திட்டங்கள் , தொழில் விஸ்தரிப்பு இவற்றுக்கு வங்கி கடன், அரசு உதவிகள் எளிதில் கிடைக்கும், விவசாயம், உணவகம், ட்ரேடிங்க், ஃபேஷன் டிசைன், கலைத்துறை போன்ற தொழில்களில் நல்ல வளர்ச்சி இருக்கும் பெரிய சங்கடங்கள் இருக்காது அதே நேரம் தொழிலாளர் இன்ஷூரன்ஸ் போன்றவை செய்து கொள்வது நலம் தரும்.

  கல்வி : புதன், சுக்ரன் வருடம் முழுவதும் நன்மை செய்வதும் ராசிநாதன் பலமாக இருப்பதாலும் படிப்பில் முன்னேற்றம், மேற்படிப்பு, விரும்பிய பாடம், கல்லூரி வெளிநாட்டு படிப்பு என்று நினைத்தது நிறைவேறும் போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். ஆசிரியர் பெற்றோர் பாராட்டுகளையும் அன்பையும் பெறுவீர்கள்.

  ப்ரார்த்தனைகள் : வருடம் முழுவதும் பெரும்பாலும் நல்ல பலன்கள் இருப்பதால் உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வ வழிபாடு, கோயில்களில் உழவாரப்பணி செய்வது, கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பது என்பதும் முடிந்த அளவு அன்னதானம், வஸ்திர தானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்வது போன்றவை பெரிய நன்மைகளை தரும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × four =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »