December 6, 2025, 12:04 AM
26 C
Chennai

குரு பெயர்ச்சி : கன்னி – பலன்கள் பரிகாரங்கள் (2021-22)

gurupeyarchi 2021 2022 - 2025

குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – கன்னி

gurupeyarchi2021 - 2025

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.

இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…

குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : mannargudirs1960@gmail.com


கன்னி : (உத்திரம் 2,3,4 பாதங்கள்,ஹஸ்தம் 4பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் முடிய) :

6 kanni
6 kanni

பொது (பொருளாதாரம், ஜீவனம்) : 7க்குடைய குருபகவான் 6 மறைவதும் 5ல் நீசம் ஆவதும் எதிர்மறை பலன்கள் தருவதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் வருடம் முழுவதும் செவ்வாய்,ராகு, குரு நக்ஷத்திர கால்களில் சஞ்சரிப்பதும் வருடம் முழுவதும் 10,12,2 இடங்களையும், பின் 9,11, ராசியையும் பார்பதால் நன்மைகளே அதிகம் நடக்கும்

மேலும் சூரியன், செவ்வாய், கேது, புதன், சுக்ரன் என எல்லா கிரஹங்களும் பொருளாதாரத்தை மேம்படுத்தி பணப்புழக்கத்தை செய்வர். 5ல் இருக்கும் சனி பிள்ளைகளால் மருத்துவ செலவு, கல்வி செலவு என கொடுப்பார். பணம் தாராளமாக இருக்கும் அதனால் பெரிய வருத்தங்கள் இருக்காது. புதுவீடுவாங்கும் திட்டம் கொஞ்சம் ஸ்லோவாக நடக்கும்.

வங்கி கடன், நிலுவை தொகையை செலுத்துவது இவற்றில் தாமதம், திடீர் பயண செலவுகள் என்று வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். அதே நேரம் சூரியனும், புதனும் புத்திகூர்மையை உண்டாக்கி சேமிப்பை அதிகரிப்பர், கேதுவும் தன்பங்குக்கு பெயர் புகழ், அதிகாரம் பணவரவு என தந்து பலத்தை சேர்ப்பார் பொதுவில் கஷ்டம் என்றால் மருத்துவ செலவுகள், வேலைகள் தாமதம் ஆகுதல் மன உளைச்சல் ஏற்படுதல் போன்றவை மட்டுமே பெரிய சிக்கல்கள் இருக்காது. 70-30 என்றா அளவில் நன்மை தீமை பலன் இருக்கும்.

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போகும் நிலையும் உண்டாகும், பிள்ளைகளால் செலவு இருந்தாலும் பாதிப்பு இல்லை, பெற்றோர் வகையிலும் ஓரளவு அனுகூலம் இருக்கும். உறவுகள் நெருங்கி வரும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியும் ஒற்றுமையையும் தரும். புதிய உறவுகள் நன்மையை உண்டாக்கும்.

ஆரோக்கியம் : குழந்தைகள் மற்றும் பெற்றோர் வகையில் அதிக மருத்துவ செலவுகளும், தனக்கே வயிறு, குடல், கண் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும். தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அதன்படி நடப்பது நன்மைகளை தரும் ஆரோக்கியம் மேம்படும்.

வேலை: உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாகும். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். அதே நேரம் விரும்பிய இடமாற்றம், விரும்பிய புதிய வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கு. புதிய முயற்சிகள் பலன்தரும். சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் வந்து தீரும். அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் கொஞ்சம் சிரமத்துக்கு பின் நிறைவேறும். பொதுவில் உத்தியோகத்தில் முன்னேற்றம் சுமாராக இருக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் அவசியம்.

சொந்த தொழில் : எதிரிகள் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள், தொழில் விரிவாக்கம் தாமதம் ஆகலாம். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது நல்லது. ஊழியர்கள் வகையில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம் இன்ஷூரன்ஸ் செய்து கொள்வது நல்லது. மெதுவான முன்னேற்றம் என்றாலும் நஷ்டம் இல்லை. மீடியா, கலை, சினிமா, ஃபோட்டோகிராபி, மற்றும் சுயமாக ஆன்லைனில் டிசைன் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்வோர்களுக்கு கொஞ்சம் அதிகம் முன்னேற்றம் இருக்கும். மற்ற தொழில்கள் பரவாயில்லை, கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சேமிப்பும் நல்ல பலனை தரும்.

கல்வி : புதன்,சூரியன், மற்றும் குருவின் பார்வைகள் சாதகம் அதனால் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்கள் பெற்றோர்களின் பாராட்டும் இருக்கும் ஆனால் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். விரும்பிய படிப்பு, வெளிநாட்டு படிப்பு, கல்லூரி இவைகள் பெருமுயற்சிக்கு பின் கிடைக்கும் போட்டி பந்தயங்களிலும் அதிக உழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றி கிட்டும். எதிலும் சிரத்தையுடன் படிப்பதும் ஈடுபடுவதும் நன்மை தரும்.

ப்ரார்த்தனைகள் : நின்ற திருக்கோல பெருமாளை வழிபடுவதும், கோயிலில் துளசி மாலை சாற்றுவது, ஸ்லோகங்கள் சொல்வது, விளக்கேற்றுவது, முடிந்த அளவு வயோதிகர்கள் இயலாதவர்களுக்கு உதவி செய்வது தான தர்மம் செய்வது நன்மை தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories