ஏப்ரல் 22, 2021, 7:57 காலை வியாழக்கிழமை
More

  எப்ப பார்த்தாலும் தூங்கணும் போல தோணுதா?

  sleep - 1

  சில நேரங்களில் அன்றைய நாள் முழுவதுமே ஒரே தூக்க கலக்கமாக தென்படும். காரணம் நீங்கள் சரியாக தூங்காமல் இருப்பது, சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது இது போன்ற காரணத்தால் ஹைப்பர்ஷோமினியா அல்லது தூக்கமின்மை பிரச்சினை ஏற்படலாம்.

  அந்த நாள் முழுவதும் இப்படி ஒரே தூக்கமாக வருவது நமக்கு உடலளவிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் மன அழுத்தம், அனிஸ்சிட்டி, டென்ஷன் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

  சில நேரங்களில் இந்த தூக்க பிரச்சினை மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட நேரிடலாம். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உணவு பிரச்சினைகள், நாள்பட்ட வலி, உடற்பயிற்சியில் ஒழுங்கின்மை, ஆல்கஹால், டயாபெட்டிக் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் போன்ற காரணத்தாலும் ஏற்படும்.

  மதிய வேளையில் அதிகமாக உணவை எடுக்காதீர்கள், காலையிலும் மாலையிலும் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிர்த்து நட்ஸ், பழங்கள், சாண்ட்விட்ச், பழ ஜூஸ்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி தூங்க போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சாப்பிட்டு விடுங்கள். அப்பொழுது தான் நிம்மதியாக உறங்க முடியும்.

  தினமும் 30 நிமிடங்கள் என்று 5 தடவை நடங்கள். இது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து சோர்வை போக்கி விடும். மேலும் இரவு நேரத்திலும் நல்ல தூக்கம் வரும். வெளியில் இருந்து உடற்பயிற்சி செய்வது இன்னும் கூடுதல் பலனளிக்கும்.

  காலையில் எழுந்ததும் பூங்காவில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

  கை, கால்களை நீட்டுதல் போன்ற உடற்பயிற்சி அந்த நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

  மாலையில் ஏரோபிக் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். படுக்கைக்கு போவதற்கு முன் செய்வதை தவிருங்கள்.

  மூச்சுப்பயிற்சி உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கும். யோகா பயிற்சி கூட நீங்கள் செய்யலாம்.

  அரோமாதெரபி பகல் நேரங்களில் ஏற்படும் தூக்க கலக்கத்தை போக்க உதவியாக இருக்கும். எரிச்சல், குறைந்த ஆற்றல், சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு இதன் மூலம் முடிவு கட்டலாம். ரோஸ்மேரி, துளசி மற்றும் புதினா ஆயில்கள் நமக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும்.

  ஒரு துணி மீது உங்களுக்கு பிடித்த அரோமோ எண்ணெய்யை சில துளிகள் ஊற்றவும். அந்த நறுமணமே உங்களை காலையில் சுறுசுறுப்பாக எழ வைத்து விடும்.

  அப்படி இல்லையென்றால் குளிக்கும் நீரில் சில துளிகள் இந்த எண்ணெய்யை கலந்து குளிக்கலாம்.

  இந்த ஆயிலை ஆபிஸ் முழுவதும் பரப்பி நல்ல நறுமணத்தை நுகரச் செய்து உற்சாகமாக வேலை பார்க்கலாம்.

  2014 ல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் படி ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல தூக்கத்தை தருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்பட வைக்கிறது.

  சால்மன், ஏரி மீன்கள், மத்தி, மானேரெல் மற்றும் அல்பாகோரே டுனா போன்ற மீன்களை சாப்பிடலாம்.
  வால்நட்ஸ் மற்றும் ஆளி விதைகள்
  பீனாட் பட்டர்
  கேனலோ ஆயில்
  முட்டை
  சோயா பீன்ஸ் மற்றும் சோயா பொருட்கள்.

  தவிர்க்க வேண்டியது
  உங்களுக்கு அதிகமான தூக்கத்தை தரக் கூடிய உணவுகளை முதலில் தவிர்ப்பது நல்லது. பாஸ்ட்ரி, பாஸ்தா, உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி போன்றவை அதிக தூக்கத்தை வரவழைக்கும்.

  காலையில் காபினேட்டேடு பானங்களை குடிப்பதை தவிருங்கள். இது முதலில் உங்களுக்கு உற்சாகத்தை வரவழைக்க கூடியதாக இருந்தாலும் பிறகு நாள் முழுவதும் தூக்கத்தை கொடுக்கும்.

  பகல் நேரங்களில் ஆல்கஹால் பருகுவதை தவிருங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் வாட்டிய இறைச்சிகளை தவிருங்கள்.
  காலை உணவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை எடுப்பதை தவிருங்கள்.

  20 நிமிடங்களுக்கு உங்களுக்கு நீங்களே எனர்ஜி கொடுத்து கொள்ளுங்கள்

  10 நிமிடங்களுக்கு உடம்பிற்கு மசாஜ் செய்யுங்கள். இது மன அழுத்தம், டென்ஷன் போன்றவற்றை குறைக்கும்.

  நல்ல இசை கூட உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும்

  இஞ்சி, மிளகாய் போன்றவை தூக்க கலக்கத்தை போக்கி விடும்

  நொறுக்கு தீனிகள், சேச்சுரேட்டேடு கொழுப்பு உணவுகள், சர்க்கரை போன்றவை நாள் முழுவதும் தூக்கத்தை ஏற்படுத்தும்.

  தியானம் செய்து விட்டு படுக்கைக்கு செல்லலாம் தூக்கம் வருகின்ற சமயங்களில் 5 நிமிடங்கள் நடக்கலாம்.
  வாயில் சுவிங்கம் மெல்லுவது கூட தூக்கத்தை வரவழைக்காது

  வேலை செய்யும் போது கொஞ்சம் ஓய்வு கொண்டு உங்களை புத்துணர்வு ஆக்கி கொள்ளலாம்.

  வேலை செய்யும் இடத்தை பார்ப்பதற்கு அழகாகவும் பிரைட்டாகவும் வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் தூக்கத்தை போக்கி விடும்.

  அக்குபஞ்சர் போன்றவை தூக்க கலக்கத்தை போக்க உதவும்

  மருத்துவரை அணுகாமல் எடுத்துக் கொண்டு இருக்கின்ற மாத்திரைகளை நிறுத்தாதீர்கள். ஏனெனில் அதன் விளைவாக கூட தூக்கத்தில் மாற்றம் ஏற்படலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »