
குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026
இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது
குரு பெயர்ச்சி பலன்கள் – 2025
மேஷம்
இதுவரை உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் இருந்த குரு இனி முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கியஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வை இடுவது மிக சிறப்பு.
தனஸ்தானத்தில் இதுவரை இருந்து பல்வேறு நன்மைகளை செய்து வந்த குரு பகவான் திருமண தடைகளால் தள்ளி போன காரியங்கள் சிறப்பாக அமையும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். எடுத்த சில காரிங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு தொழிலின் மூலம் சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள்.
உங்களின் பாக்கியஸ்தானாதிபதி வீட்டை அவரே பார்வை இடுவதால் பல்வேறு காரணங்களால் தள்ளிபோய் கொண்டிருந்த காரியம் செயல்பட துவங்கும். குழந்தை பாக்கியம், குல தெய்வத்தின் வழிபாடுகள், தீர்த்த யாத்திரை சென்று வருதல் வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு சிறப்பாக செயல்படுவீர்கள்.
உங்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். லாபஸ்தானத்தில் சனி ராகுவை பார்ப்பதால் செய்யும் தொழில் பலவழிகளில் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். 11-05-2025 முதல் குரு உங்களுக்கு நற்பலன்களை தருவார். 06-06-2025 முதல் 06-07-2025 வரை அஸ்தங்கம் ஆவதால் தங்கத்தை பத்திரமாக வைத்து கொள்வது நல்லது. 08-10-2025 முதல் குரு அதிசாரமாக கடகத்திற்கு செல்வதால் அதுவரை நன்மை உண்டாகும். சிலருக்கு இழத்த சொத்துகளை மீட்கவும், எதிர்ப்புகளை குறைத்து சுமூகமான சூழ்நிலையும் உருவாகும். தொடர்ந்து இறை வழிபாடு செய்வது நல்லது.
குரு பகவான் பார்வை பலன்கள்:
குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்
பரிகாரங்கள்:
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமிட்டு மஞ்சள் நிற வஸ்திரம் இட்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வர பல வழிகளில் நன்மைகள் உண்டாகும்.





