குரு பெயர்ச்சி பலன்கள் (2025-26): கும்பம்

gurupeyarchi image common - 2026

குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – 2026

இந்த ஆண்டில் குருபெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025  நடந்தது. வாக்கிய பஞ்சாங்கப்படி 11/5 2025 ஞாயிறு ஆலங்குடி கோயில் தென்குடி திட்டை கோயில் முறைப்படி மதியம் 1.19 மணிக்கு பெயர்ச்சி ஆகின்றார் இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது


குரு பெயர்ச்சி பலன்கள் – 2025

கும்பம்

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காமிடத்தில் இருந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பதால் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொள்வீர்கள். தைரியமும் துணிச்சலும் உங்களின் வாழ்வில் வளம் பெற செய்யும்.

ஏற்கனவே ராசியில் ராசிநாதனுடன் ராகு இணைவு பெற்றிருப்பதும் குரு பார்வையால் ஸ்தான பலம் பெறுவதால் உடல்நலனில் நல்ல முன்னேற்றமும் எடுத்த காரியம் வெற்றியும் வேண்டாத விடயங்களை தவிர்த்து மேலும் நற்பலன்களை பெறுவீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் காலமாக இது அமையும். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.

பாக்கியஸ்தானத்தை குரு பார்ப்பதால் புனித யாத்திரை சென்று வருதல் நல்ல படியாக தொழில் செய்யவும். ஏற்கனவே இருக்கும் தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளையும், செயல்களையும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களின் மேன்மை அடைய செய்யும்.

லாபஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் செய்யும் தொழிலிலும், வேறு வழிகளிலும் உங்களுக்கு பணபுழக்கம் இருக்கும் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்கள் உண்டாகும். காத்திருந்து செயல்படுவது போல வாய்ப்பு தேடி வந்து உங்களை ஊக்கபடுத்தும். நினைத்த காரியம் கைகூடும்.

உடல்நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய திட்டங்களில் இனி முழு கவனம் செலுத்தி நன்மை அடைவீர்கள். 08-06-2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது எதையும் யோசித்து செயல்படவும்..

குரு பகவானின் பார்வை பலன்கள்: 

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், புது உத்வேகம் பிறக்கும். விஐபிகளின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தை குரு பார்ப்பதால், தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அவர் வழிச் சொத்துகள் கைக்கு வரும். இதுவரை வறண்டு கிடந்த பணப்பை, இனி நிரம்பும். சேமிக்கும் அளவுக்கு பொருள் வரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.லாபஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், தொழில்-வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டாகும். புது முதலீடுகள் செய்வீர்கள். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். மனைவிக்கு விலையுயர்ந்த பட்டுப் புடவை, தங்க ஆபரணம் வாங்கிக் கொடுப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள். உங்கள் மீது இருந்த வீண் பழியும் அகலும் 

பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் பைரவருக்கு தேங்காய் உடைத்து அதில் நெய் தீபம் ஏற்றி அரளி பூ மாலை போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாக அமையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories