astrology panchangam rasipalan dhinasari - 2026
astrology panchangam rasipalan dhinasari 3

|श्री:| |ஸ்ரீ:|
ஸ்ரீராமஜயம்
श्री:श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்  | 16.9.2026 | புதன்கிழமை

ஆவணி ~ 30 { 16.9.2026 } புதன் கிழமை
வருடம் ~ பராபவ வருடம் { பராபவ நாம சம்வத்ஸரம் }
அயனம் ~ தக்ஷிணாயணம்.
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ ஆவணி மாதம் { ஸிம்ஹ மாஸம் }
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ காலை 10.32 AM வரை பஞ்சமி பின்னர் ஷஷ்டி.
நாள்~ புதன் கிழமை { சௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம் ~ இரவு 7.37 PM வரை விசாகம் பின் அனுஷம்.
யோகம் ~ வைத்ருதி.
கரணம் ~ பாலவம் / கௌலவம்.
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
நல்லநேரம் ~ காலை 9.00 AM ~ 10.00 AM & மாலை 2.00 PM ~ 3.00 PM.
ராகுகாலம் ~ மதியம் 12.00 NOON ~ 1.30 PM.
எமகண்டம் ~ காலை 7.30 AM ~ 9.00 AM.
குளிகை ~ காலை 10.30 AM ~ மதியம் 12.00 NOON.
நல்ல நேரம் ~ 9.00 to 10.30 AM and 2.00 to 3.00 PM
சூரியஉதயம் ~ 6.06 AM.
சந்திராஷ்டமம் ~ பகல் 1.05 PM வரை மீனம் பின்னர் மேஷம்.
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ ஷஷ்டி.
இன்று ~

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
  !!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
  !!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

DHIN NEW LOGO - 2026

ஹோரை புதன்கிழமை

காலை

6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்

பிற்பகல்

12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்

மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

dhinasari panchangam jyothidam - 2026
thiruvalluvar deivapulavar

இன்றைய (16-9-2026) ராசிபலன்கள்


மேஷம்

வியாபாரம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். குணநலன்களில் சில மாற்றம் ஏற்படும். மருந்து சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். உலக நடைமுறைகள் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் பிறக்கும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.14 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : மாற்றங்கள் பிறக்கும்.


ரிஷபம்

கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். பேச்சு வன்மையின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


மிதுனம்

வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். இனம் புரியாத கவலைகளால் செயல்களில் சோர்வுகளும், தாமதமும் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விருந்தினர்களின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். எதிலும் அவசரம் இன்றி நிதானமாக செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : வரவுகள் உண்டாகும்.
புனர்பூசம் : செலவுகள் ஏற்படும்.


கடகம்

புதிய முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். எதிர்காலம் குறித்து சில தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கலை தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

புனர்பூசம் : தடைகள் குறையும்.
பூசம் : முடிவுகளை எடுப்பீர்கள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூக தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : இன்னல்கள் குறையும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : லாபங்கள் மேம்படும்.


கன்னி

மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.
சித்திரை : ஆதரவுகள் மேம்படும்.


துலாம்

வாக்கு சாதுர்யத்தின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். கண் தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சாஸ்திரம் கல்வி தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

சித்திரை : பிரச்சினைகள் குறையும்.
சுவாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : ஈடுபாடு உண்டாகும்.


விருச்சிகம்

விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.


தனுசு

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமான தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வேள்வி பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். ரகசியமான சில ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மூலம் : இழுப்பறிகள் மறையும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.


மகரம்

நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மீக பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் உருவாகும்.
அவிட்டம் : லாபகரமான நாள்.


கும்பம்

பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். நெருக்கமானவர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலை காணப்படும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.


மீனம்

இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் இருக்கவும். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

ALSO READ:  பஞ்சாங்கம் செப்.17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : குழப்பமான நாள்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : வேறுபாடுகள் மறையும்.


தினம் ஒரு திருக்குறள்

thiruvalluvar
thiruvalluvar

தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.

இன்றைய பொன்மொழி

ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்

மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்

ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.

தினசரி. காம்

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7

பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.

விளக்கவுரை :

சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?

இன்றைய சிந்தனைக்கு…

பயன்படுத்தாத திறமை, தன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும், உனக்குள் இருக்கும் திறமையை, பயன்படுத்து!
உன்னால் முடிந்ததை, சிறப்பாக செய்தால், அது திறமை, முடியாததை சிறப்பாக செய்தால், அதுவே தன்னம்பிக்கை!!
விழுந்த இலைகளுக்காக, எந்த மரமும், விழுந்து, விழுந்து அழுவதில்லை, புதிய தளிர்களை தந்து, மீண்டும், மீண்டும், தன்னம்பிக்கையோடு தலையாட்டும்!!!

One response to “பஞ்சாங்கம் – செப்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending