May 8, 2021, 4:27 pm Saturday
More

  ரிஷபம் (பங்குனி மாத பலன்கள்)

  panguni rasipalangal

  சார்வரி வருஷம் பங்குனி மாத ராசி பலன்கள்

  நாளது ஆங்கில வருடம் மார்ச் மாதம் 14ம் தேதி மாலை 06.03.42 மணிக்கு சூரியன் கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சியாகிறார். 14.04.2021 இரவு 01.32.06 மணி வரை மீனத்தில் சஞ்சரிக்கிறார்.  அதுவரையிலான ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள்.

  கோச்சார கிரஹ நிலைகள்

  panguni rasipalankal 696 - 1
  2021-maasi-month-predictions

  பொதுக்குறிப்பு: இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வு குரு கும்பராசிக்கு பெயர்வது (கும்பராசி பலனை தருவார்) அதை ஒட்டியும் பலன் சொல்லப் பட்டு இருக்கிறது. மேலும் முக்கியமான தினம் அது அந்த ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய நாள் (சந்திராஷ்டமம் தவிர) இது பொதுப்பலன், அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலனை அறிந்து கொள்வது சிறந்தது

  rishabam

  ரிஷப ராசி : கார்த்திகை இரண்டாம் பாதம் முதல், ரோஹிணி, மிருகசீரிஷம்-2ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…


  உங்கள் ராசியில் இருக்கும் செவ்வாய்,ராகு, கேது தவிர மற்ற எல்லா கிரஹங்களும் அதிக நன்மை செய்கின்றன என சொல்லலாம். பொருளாதாரம் மேம்படும்.

  பணவரவு தாராளம், ஆடை ஆபரண சேர்க்கை கேளிக்கை, புது நிலம் வீடுவாங்குதல், வாகனம் வாங்குதல் எதிரிகள் மறைவர், புகழ் பரவும், இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் புதிய உறவுகள், குழந்தை செல்வம் உண்டாதல், முயற்சிகளில் வெற்றி, உத்தியோகத்தில் மாற்றம் ஏற்றம், சொந்த தொழிலில் நல்ல லாபம், அனைத்து துறையினரும் பயன் அடைவர்,

  அரசாங்கத்தால் நன்மை, கணவன் மனைவி, குழந்தைகள் ஒற்றுமை, அக்கம்பக்கத்தார் உறவுகள் மூலம் நன்மையும் மகிழ்ச்சியும் உண்டாகும் சமூக அந்தஸ்து உண்டாகும், பொறுமை நிதானம் வந்துவிடும்.

  சொத்து சேர்ப்பீர்கள், முதலீடுகள் லாபம் தரும். மனதில் உற்சாகம் தெய்வ பக்தி கூடுதல், பகை விலகுதல், உங்கள் செயல்களால் மற்றவர் உங்கள் மீது மரியாதை கொள்வர், திடீர் பனவரவு, பொருள் வரவு, நீண்ட நாள் தடைபட்ட விஷயங்கள் கைகூடுதல், பெரியோர்கள் ஆசீர்வாதங்கள் என்று நன்மை அதிகம் இருந்தாலும் செவ்வாயும் ராகுவும் கேதும் மன உளைச்சல் வீண் விரயம், சிந்திக்கும் திறன் குறைவு, அவசரப்படுதல், விபத்துகள் சிறு காயங்கள், உடல் நல குறைவு வாழ்க்கை துணைவர் உடல் நலம் பாதித்தல் இப்படி சில சங்கடங்களும் இருந்து கொண்டிருக்கும்

  பொதுவில் இந்த மாதம் மிகுந்த நன்மை இருக்கு. கொஞ்சம் கவனமாகவும் பெரியோர் ஆலோசனை படியும் நடப்பது கெடுதலை குறைக்கும்.

  முக்கிய நிகழ்வு/கவனம் : விபத்துகளால் சிறு சிறு காயம் ஏற்படுதல், வாகனத்தில் பயணிக்கும் போது கவனம் தேவை, மறதியினாலும் அவசரப்படுவதாலும் செயல்களில் தடையும் சில விரோதமும் உண்டாகும். இந்த மாதம் உங்கள் நலம் விரும்புவர் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். எந்த ஒருசெயலையும் அவரை கலந்து செய்யுங்கள்

  சந்திராஷ்டமம்: கிருத்திகை 2,3,4  – 03.04.21, ரோஹிணி – 04.04.21, மிருகசீரிடம் 1,2 – 05.04.21

  வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :

  வைத்யநாதர், மஹாலக்ஷ்மி, கோயிலில் விளக்கேற்றுங்கள். ஸ்ரீதுதி படிக்கலாம், வைத்யநாதாஷ்டகம்,அல்லது இஷ்ட தெய்வ பெயரை உச்சரித்தலும் நன்மை தரும். தர்மங்களை முடிந்த அளவு செய்யுங்கள். மாற்று திறனாளிகளுக்கும் வயோதிகர்களுக்கும் சரீர உதவியை செய்யுங்கள்.

  மாத ராசிபலன் கணிப்பு :
  லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, I Block, Alsa Green park, Near MIT Gate
  Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
  Email: [email protected]
  Phone: 044-22230808 / 8056207965
  Skype ID: Ravisarangan

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,166FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »