June 23, 2021, 12:03 pm
More

  ARTICLE - SECTIONS

  மிதுனம் (பிலவ- ஆனி மாத பலன்கள்)

  மிதுனராசி : (மிருகசீர்டம் 2 பாதங்கள், திருவாதிரை 4 பாதங்கள், புனர்பூசம் 3 பாதங்கள் முடிய) :

  ani month palankal - 1
  pilava vaikasi month predictions

  பிலவ வருடம் ஆனி மாத ராசி பலன்கள்
  (15.06.2021 முதல் 16.07.2021 வரை)

  நாளது 15.06.2021 செவ்வாய்க்கிழமை காலை 06.01.25 மணிக்கு (சூரிய உதயாதி நாழிகை 0.35.36 வினாடிக்கு) ரிஷபத்தில் இருந்து சூரிய பகவான் மிதுன ராசியில் அடியெடுத்து வைக்கிறார்  மிதுன ராசியில் 16.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 04.53.30 மணிவரை சஞ்சரிக்கிறார். அதற்கான பலா பலன்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

  கிரஹ நிலைகள் மாதம் பிறக்கும் நேரத்தில்…

  லக்னம் – மிருகசீரிடம் 3, சூரியன் – மிருகசீரிடம் 3,  சந்திரன் – ஆயில்யம் 2, செவ்வாய் – பூசம் 2
  புதன் (வக்ரம்) – மிருகசீரிடம் 1, குரு – சதயம் 1, சுக்ரன் – புனர்பூசம் 1, சனி(வக்ரம்) – திருவோணம் 3
  ராகு – ரோஹிணி 2, கேது –  அனுஷம் 4

  கோச்சார கிரஹ நிலைகள்

  ani month graha nilaigal - 2
  pilava vaikasi planet position

  பொதுவாக இந்த மாதம் : ஆனி மாதம் புதனுக்கான மாதம்  இந்த மாதம் நாட்டில் மழை, புயல் இருந்தாலும் ராஜா செவ்வாய் என்பதால் விவசாயம் செழிப்பாக இருக்கும். இருந்தாலும் புயலால் சேதம் கொஞ்சம் இருக்கும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு, கடலை போன்றவை அதிக விளைச்சல் இருக்கும். மேலும் செவ்வாயால் போர் மேகம், புதிய ஆயுதங்கள் உண்டாகுதல் அரசாங்க அடக்குமுறை, நாடுகளுக்குள் போட்டி, அதேநேரம் எண்ணை உற்பத்தி, நூதன பொருட்கள் உற்பத்தி, கால்நடைகளுக்கு நன்மை என்றும் இருக்கும். குருவால் செல்வம் பெருகுதல், கல்வி கூடங்களில் புதிய வழிமுறைகள் உண்டாகுதல் குருக்கள் மதிக்கப்படுதல், சுக்ரனுடைய பலத்தால் கலைத் துறையில் முன்னேற்றம். ஆடை வடிவமைப்பு, விற்பனை அதிகரித்தல், ஏற்றுமதி பெருகுதல் அதன் மூலம் வருமானம். திருவாதிரையில் சூரியன் சஞ்சரிக்க தொடங்கும்போது நாட்டில் வியாதிகளின் உக்ரம் தணிந்து ஆட்சியாளர்களால் நன்மை உண்டாகும்.சனி பகவான் வக்ர சஞ்சாரம் கட்டுமான துறை, இரும்பு மின் சாதன துறைகள் நல்ல ஏற்றம் காணும். பொதுவில் மாதம் பிறந்த போது உண்டான லக்னத்துக்கு 9ல் குரு இருந்து சூரியனை பார்ப்பது பலவித நன்மைகள் உண்டாகி, வியாதிகள் குறைந்து எங்கும் மகிழ்ச்சியும் மக்களிடம் பயம் நீங்கி புத்துணர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.

  இந்த மாதம் நன்மை பெறும் நக்ஷத்திரக்காரர்கள் :
  அஸ்வினி, கிருத்திகை,ரோஹினி, திருவாதிரை,புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஹஸ்தம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, மூலம், உத்திராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதி! மற்றவர்கள் கொஞ்சம் நிதானம் தேவை

  மாத ராசிபலன் கணிப்பு :
  லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, I Block, Alsa Green park, Near MIT Gate
  Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
  Email: [email protected]
  Phone: 044-22230808 / 8056207965
  Skype ID: Ravisarangan


  மிதுனம் : (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

  ராசிநாதன் புதன் வக்ரியாய் 12ல் ராகுவுடன் 23.06.21 வரை பின் வக்ர நிவர்த்தியாகி 07.07.21 வரை 12ல் இருக்கிறார். பின் 07.07.21 முதல் ராசியில் சஞ்சாரம், சுப செலவுகள், திருமணம் கைகுடுதல், வெளியூர், வெளிநாட்டு வாசம், உத்தியோகத்தில் நல்ல நிலை, அதேநேரம் ராசியில் சூரியன்  தலைவலி, உஷ்ணம், அடிக்கடி வைத்திய செலவுகள் என்று கொடுத்தாலும் பெற்றோர் வழியில் செலவுகள் இருந்தாலும் குருவின் 5ம் பார்வை இதை கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க செய்யும். சுக்ரன் ராசியில் 22.06.21 வரை பின் 2ல் முதல் பாதி பரவாயில்லை பண வரவு, வெளியூர் பயணம் மகிழ்ச்சி தரும், உத்தியோகத்தில் சொந்த தொழிலில் லாபம், சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைத்தல் என இருந்தாலும் கடகத்தில் சுக்ரன் செல்லும் போது எதிர்பாராத செலவுகள் வேலை இழப்பு இருக்கலாம் அல்லது புதிய முயற்சிகள் பலன் தராமல் போகலாம். நிதானத்துடன் செயல்படுவது நலம் தரும். 6ல் கேது 8ல் வக்ர சனி இருப்பது மிக நன்மை தரும் கடன் வியாதி எதிரி தொல்லை மறையும், மனதில் தைரியம் கூடும். குடும்பத்தில் இருந்துவந்த சஞ்சலங்கள் தீரும். 9ல் குரு 9ம் பார்வையாக துலாத்தை பார்ப்பதும் சனி 10ம் பார்வையாக அதே துலாத்தை பார்ப்பதும் அந்த இடம் புத்திர ஸ்தானம் ஆகையால் பிள்ளைகளால் நன்மை புகழ், அதே போல் கல்வி பெயர், அதிகாரம் இவையும் உண்டாகும் செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். பொதுவில் பெரும்பாலும் நன்மை உண்டாகும் மாதம்.

  மிருகசீரிடம் 3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதன் 2ல் நீசபங்க ராஜ யோகம் சனி பார்வை பெற்று. குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய உறவுகள் வரும். சிலருக்கு திருமண யோகம், குழந்தை பேறு உண்டாகும். 6ல் இருக்கும் கேது செவ்வாயின் வீட்டில் சனியின் நக்ஷத்திரத்தில் இருந்து எதிர்பாராத நன்மைகளை தருகிறார் பணம் பலவிதங்களிலும் வந்து சேரும் உத்தியோகம் சொந்த தொழில் முன்னேற்றம் காணும் புதிய முயற்சிகள் வீடுவாங்குதல் போன்றவை ஈடேறும். பொதுவில் நன்மை அதிகம்.

  சந்திராஷ்டமம் : 26.06.21 காலை 06.52 மணி முதல் 27.05.2021 அதிகாலை 05.10 மணி வரை

  திருவாதிரை: உங்கள் நக்ஷத்திரநாதன் ராகு 12ல் எதிலும் நிதானம் தேவை, அவசரப்பட வேண்டாம், செலவுகள் கையை கடிக்கும் கடன் வாங்க நேரும். அதே  நேரம் ராசியை குரு பார்ப்பது இவற்றில் இருந்து விடுபட உதவும். பொறுமை நிதானம் தேவை, எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்க கடும் உழைப்பு தேவை, சொந்த தொழிலில் வங்கி கடன், அரசு உதவி இவை பெற அதிக முயற்சி, மற்றும் புதிய வேலைக்கான விண்ணப்பங்கள் இவற்றை யோகம் நல்ல நேரம் பார்த்து அனுப்புங்கள் பண புழக்கம் பரவாயில்லை ஜீவன ஸ்தானத்துக்கு சனி பார்வை இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற வருமானம் வரும் அது செலவாகவும் மாறும் சிக்கனம் தேவை, கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

  சந்திராஷ்டமம்: 27.06.21 அதிகாலை 05.10 மணி முதல்  28.06.21 அதிகாலை 05.27 மணி வரை

  புனர்பூசம் 1,2,3 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திர அதிபதி குருபகவான் 9ல் பூரணமாக உங்களின் செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும், பணவரவு தாராளம், ராசியை குரு பார்ப்பதால் ராசியில் இருக்கும் சூரியனால் உண்டாகும் இடர்கள் குறையும். மேலும் 12ல் ராகு சுப செலவுகளை தருவார், 6ல் கேது கடன் அடையும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிரி தொல்லை குறையும்.  7க்குடைய குரு உங்கள் ராசியை பார்ப்பது நீண்ட நாட்களாக தாமதப்பட்ட திருமணம் கைகூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்பாடுகளில் உற்சாகம் உண்டாகும் கூட்டாளிகள் துணை நிற்பர். வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டீர்கள் எனில் வெற்றி நிச்சயம். ஆனாலும் கொஞ்சம் நிதானம் தேவை 2ல் செவ்வாய் சுக்ரன் இது சில எதிர்மறைவிளைவுகளை கொடுக்கும். வார்த்தைகளை நிதானித்து பேசுங்கள்.

  சந்திராஷ்டமம்:  28.06.21 அதிகாலை 05.27 மணி முதல்  29.06.21 அதிகாலை 05.25 மணி வரை

  வணங்கவேண்டிய தெய்வம் : சூரிய நமஸ்காரம் செய்வது  சிவ வழிபாடு, ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நன்மை தரும். ஏழைகளுக்கு பயன் படும் உதவிகளை செய்வது அன்னதானம் நன்மை தரும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  [orc]

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  24FollowersFollow
  74FollowersFollow
  1,262FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-