July 27, 2021, 5:44 pm
More

  ARTICLE - SECTIONS

  மீனம் (பிலவ – ஆடி மாத பலன்கள்)

  மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4பாதங்கள், ரேவதி 4 பாதங்கள் முடிய):

  aadi month palankal - 1
  pilava vaikasi month predictions

  பிலவ வருடம் ஆடி மாத ராசி பலன்கள்
  (16.07.2021 முதல் 17.08.2021 வரை)

  நாளது 16.07.2021 வெள்ளிக்கிழமை மாலை 04:53:34 மணிக்கு (சூரிய உதயாதி நாழிகை 26:26:24 வினாடிக்கு) மிதுனத்தில் இருந்து சூரிய பகவான் கடக ராசியில் அடியெடுத்து வைக்கிறார்  கடக ராசியில் 17.08.2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01:17:17 மணிவரை சஞ்சரிக்கிறார். அதற்கான பலா பலன்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

  கிரஹ நிலைகள் மாதம் பிறக்கும் நேரத்தில்…

  லக்னம் : தனூர்- மூலம் 2,  
  சூரியன்: கடகம்-புனர்பூசம் 4, 
  சந்திரன்: கன்னி ஹஸ்தம் 3,   
  செவ்வாய் : கடகம் – ஆயில்யம் 4
  புதன்: மிதுனம்– திருவாதிரை 2,
  குரு(வ) : கும்பம்-சதயம் 1,  
  சுக்ரன்: கடகம் – ஆயில்யம் 4, 
  சனி(வக்ரம்):  மகரம் –  திருவோணம் 3
  ராகு: ரிஷபம் – ரோஹிணி 2,   
  கேது: விருச்சிகம் –  அனுஷம் 4

  கோச்சார கிரஹ நிலைகள்

  aadi month status - 2
  pilava vaikasi planet position

  பொதுவாக இந்த மாதம் : இந்த மாதத்தின் நாயகன் சந்திரன் அவர் பலமாக தன் நக்ஷத்திரத்தில் லக்னத்துக்கு 10ல் இருக்கிறார்.  அதே நேரம் சனி ஆட்சியாகவும் வக்ரியாகவும் பலமாக இருப்பதும் கலப்படமான பலனை தரும். இந்த மாதம் தமிழ்நாட்டை பொருத்தவரை (வராஹமிகிரர் படி இந்தியா மகர ராசி)  கேது சனியை பார்ப்பதால் கிருமியால் தொல்லை அதிகரிக்கும். கொஞ்சம் குழப்பங்கள் ஆட்சியாளர்கள் சிரமப்பட நேரிடலாம். மக்களுக்கு வியாதி மற்றும் பொருளாதார பாதிப்புகளும் இருக்கும். அதே நேரம் சூரியன், புதன் குரு, ராகு நன்மைகளை செய்வதால் கஷ்டங்களை தீர்க்கும் வழியும் உண்டாகும். மழையினால் பாதிப்பும், விவசாயம், விலைவாசி, பால் பொருட்கள் மட்டுமல்லாது இரும்பு வஸ்துகள் தொடர்பு துறைகளும் பாதிப்படையும். அண்டை நாடுகளால் தொல்லை பணப்புழக்கம் குறைவு  இருந்தாலும் சூரியன் மற்றும் சுக்ரன் ஓரளவு நன்மையை தந்து பரவாயில்லை என சொல்லும்படி இருக்கும்.

  இந்த மாதம் நன்மை பெறும் நக்ஷத்திரக்காரர்கள்…
  மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை, ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், கிருத்திகை, உத்திராடம், பரணி, பூராடம், திருவாதிரை ஸ்வாதி, சதயம்

  மற்றவர்கள் கொஞ்சம் நிதானம் தேவை; முக்கியமாக சிம்ம ராசிக் காரர்கள் பொறுமை அவசியம்.

  மாத ராசிபலன் கணிப்பு :
  லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
  ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
  D1, I Block, Alsa Green park, Near MIT Gate
  Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
  Email: [email protected]
  Phone: 044-22230808 / 8056207965
  Skype ID: Ravisarangan


  மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

  ராசி அதிபதி குரு பகவானை விட பதினொன்றாம் வீட்டில் இருக்கும் சனி மூன்றாம் வீட்டில் இருக்கும் ராகு நான்காம் வீட்டில் இருக்கும் புதன் ஆறில் இருக்கும் செவ்வாய் இவர்கள் அதிக நன்மையை செய்கிறார்கள் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும் வியாதிகள் தணியும் எதிரிகள் தொல்லை நீங்கும்

  வழக்குகள் சாதகமாக இருக்கும் எண்ணியிருந்த திட்டங்கள் நிறைவேறும் அதேபோல் புதிய வீடு புதிய வாகனம் வாங்கும் நிலை உண்டாகும் உத்தியோகத்தில் உயர்வு பண வரவு சொந்தத் தொழிலில் கடந்த காலத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் நிவர்த்தி  மற்றும் தெளிவான ஒரு நிலை மனோதிடம் இவை உண்டாகும்

  குரு பகவான் 12ல் இருப்பதால் சுப செலவுகள் உண்டாகும் இல்லத்தில் திருமணம் குழந்தைப் பேறு இவை உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளது மேலும் கேது சுக்கிரன் இவர்கள் கொஞ்சம் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவார்கள் வீண் விரயங்கள் உண்டாகும் கவனமாக செயல்பட்டால் வெற்றி உண்டாகும்

  பொதுவில் நன்மைகள் அதிகம் இருக்கும் வாய்ப்புகள் நல்லபடியாக இருக்கும் அதை சரியாக பயன்படுத்தி செயல்பட்டால் தொல்லைகள் குறைவாக மாறிவிடும் இந்த மாதம் நன்மைகள் அதிகம் இருக்கு கொஞ்சம் கஷ்டங்களும் இருக்கு பெரியோர்கள் அதனை ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்

  பூரட்டாதி 4ம் பாதம் :  நட்சத்திர அதிபதி குரு பகவான் பன்னிரண்டில் இருந்தாலும் சனி ராகு புதன் செவ்வாய் மற்றும் சந்திரன் இவர்கள் ஓரளவுக்கு நன்மையைத் தருவதால் பொருளாதார மேன்மை தருவதால் ஜீவன ஸ்தானத்தில் நன்மை ஏற்படுவதால் இந்த மாதம் நன்றாக இருக்கும் பெரிய கஷ்டங்கள் வராது அதேநேரம் இடமாற்றம் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது பயணத்தின் போது கவனம் தேவை கேது உடல் பாதிப்பு மன பாதிப்பு இவற்றை தருவார் அதனால் கொஞ்சம் நிதானித்து செயல்படுவது நல்லது

  சந்திராஷ்டமம்: 13.08.21 காலை 09.18 மணி முதல் 14.08.21 காலை 08.02 மணி வரை

  உத்திரட்டாதி 4 பாதங்கள் :  நட்சத்திர அதிபதி சனி பகவான் லாபத்தில் இருப்பது உங்களது கடந்த காலத் திட்டங்களை செயல்படுத்தும் புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை உடன் கிடைக்கும் அதேபோல் உத்தியோகத்தில் பணி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் காணும் புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த மாதத்தில் அதை செயல்படுத்தலாம் அதற்கான உதவிகள் கிடைக்கும் பொதுவில் பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை ஆனாலும் பெரியோர்கள் ஆலோசனைப்படி நடப்பது நன்மை தரும்

  சந்திராஷ்டமம்:  14.08.21 காலை 08.02 மணி முதல் 15.08.21 காலை 06.33 மணி வரை

  ரேவதி : நட்சத்திர அதிபதி புதன் நாலில் வாகன யோகங்கள் பயணத்தினால் நன்மை அளப்பரிய சந்தோஷம் என்று கொடுக்கிறார் அதேபோல் சனி மற்றும் ராகு மற்றும் செவ்வாய் நன்மைகள் தருகின்றனர் அதனால் பொருளாதார மேன்மை உத்தியோகம் சொந்த தொழிலில் உயர்வு வருமானத்தில் லாபம் சேமிப்பு என்று நன்றாக இருக்கும் அதேபோல் விருந்து கேளிக்கைகள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் உண்டாக இப்படி எல்லாம் நன்றாகவே இருக்கும் இந்த மாதம் நன்மை அதிகம் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் செயல்படுத்திக் கொள்ளலாம் அதேநேரம் கவனமும் தேவை பயணத்தின் போதும் மற்ற விஷயங்களை முடிவு எடுக்கும் போதும் ஆலோசனைக்கு ஆலோசித்து நடப்பது நல்லது பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம்

  சந்திராஷ்டமம்: 15.08.21  காலை 06.33 மணி முதல் 16.08.21  அதிகாலை 04.23 மணி வரை

  வணங்கவேண்டிய தெய்வம் : விக்நேஸ்வரர் வழிபாடு, விநாயகர் அகவல் படிப்பது,  தான தர்மங்களை அதிகம் செய்வதும் நன்மை தரும். ப்ரதோஷம் நந்தி வழிபாடு நன்மை தரும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  26FollowersFollow
  74FollowersFollow
  1,318FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-