
மேஷ ராசி
ராசிக்கு ஆண் டு துவக்கத்தில் ராசியாதிபதியான செவ்வாய் விருச்சிகத்திலும், ஆண்டு இறுதியில் மேஷத்திலும் ஆட்சியாக இருப்பார். ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நல்ல காலம். அதன் பின் கொஞ்சம் சிரமமான காலம்.
இந்த வருடம் ராகு பகவான் 3 ஆம் இடத்தில் இருப்பது நல்ல அதிர்ஷ்டம் கொடுப்பார். சனி பகவான் 9 ஆம் வீட்டிலிருந்து 10 ஆம் வீட்டிற்க்கு பெயர்ச்சி ஆக போகிரார். பத்தாம் வீட்டில் பத்தாம் அதிபதி ஆட்சி ஆக போகிரார். 9 ஆம் வீட்டில் 9 ஆம் அதிபதி ஆட்சி. இப்படிப்பட்ட கிரக நிலையுடன் தான் இந்த 2020 ஆரம்பிக்கிறது. எதிர் பார்க்காத அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு இருக்கி றது. ஆ ன்மீக விஷயங்களில் ஈடுபட நிறைய வாய்ப்பு உள்ள்து.
சனி 10 ஆம் இடத்தில் ஆட்சியாக இருப்பதால் வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.. சிலர் தந்தை வழி தொழில் செய்ய முயற்ச்சிப்பார்கள். அதுவும் நல்ல யோகம் தரும். மாணவர்கள் சிறப்பா படித்து வெற்றி அடைய நல்ல வாய்ப்பு தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு முதல் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெற நல்ல வாய்ப்பு உள்ளது. குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை கிடைக்க 2020 நல்ல காலம். வருட கடைசியில் ராகு 2 அம் வீட்டிற்க்கு வருவதால் கொஞ்சம் சிரமமான காலம்.
சொந்த வேலை செய்பவர்களுக்கு 2020 நல்ல காலம் என்றே சொல்லலாம். குரு பா ர்வை ராசியில் விழுவதால், நல்ல ஆரோக்கியத்தை தருவார். அதுபோல அவர் மூன்றாம் இடத்தை பார்ப்பதால் நல்ல முற்ச்சி செய்து வெற்றி அடையும் வாய்ப்பு உள்ள்து. அவரே 5 ஆம் இடத்தை பார்ப்பதால், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
மேஷ ராசியை பொருத்த வரை சுமார் 90 – 95% வரை நல்ல யோகமான ஆண்டாகவே 2020 இருக்கும்.
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : Ast8610023308@gmail.com


