
ரிஷப ராசி.
கால புருஷ தத்துவத்தின் இரண்டாவது ராசி ரிஷப ராசி. இந்த ராசிக்கு 2020 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் முதல் அஷ்டம சனி விலக இருக்கிறது,
இது அவர்களுக்கு ஒரு நல்ல நிலை கொடுத்தாலும், குரு தற்போது அஷ்டமத்தில் ஆட்சியாக இருப்பது சில பிரச்சினைகளை கொடுத்தே தீரும்.
இருந்தாலும் குரு தனது நேர் பார்வையால் இரண்டாம் வீட்டை பார்ப்பதால், இந்த ராசிக்கு இரண்டாமிடம் சுபத்துவம் ஆக மாறுகிறது. இதனால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் குறைந்து, நல்ல அமைதி பிறக்கப்போகிறது என்று சொல்லலாம்.
தன்னுடைய ராசிக்கு 4-ஆம் இடத்தைப் குரு பார்ப்பதால், இதுவும் நல்ல யோகத்தை தரும். ரிஷப ராசிக்கு, 2020 பெரிய யோகம் இல்லை என்று சொன்னால் கூட சுமார் 70 – 75% சதம் வரைக்கும் நல்ல பலன் கொடுக்கும்.
இந்த ராசியின் பலாபலன்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
நம் தினசரி இணைய வாசகர்களுக்காக…. 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு பலன்களை கணித்துத் தந்திருப்பவர் ஜோதிடர் கி.சுப்பிரமணியன்!
கி. சுப்பிரமணியன், ஜோதிட கலையை தமது தந்தையார் கிருஷ்ணன் ஐயரிடம் இருந்தும், பாலக்காட்டில் மிகப் பிரபல ஜோதிடராக விளங்கிய தமது மாமா மணி ஐயரிடமும் சிறிய வயதிலேயே கற்றுக்கொண்டவர்.
ஜோதிட நுணுக்கங்களை மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்வதற்காக, யூடியூபில் (Youtube) சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். ஆன்மிக இதழ்கள், இணையதளங்களில் ஜோதிடக் குறிப்புகள், ராசிபலன்களை எழுதி வருகிறார்.
ஜோதிடர் கி. சுப்பிரமணியன்
தொடர்பு எண்: 8610023308
மின்னஞ்சல் முகவரி : [email protected]