Author: Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

முடிவுக்கு வந்தது பொருந்தாக் கூட்டணி; பதவி விலகிய காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி!

புது தில்லி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் காஷ்மீர் முதல்வராகப் பதவி வகித்து வந்த மெஹபூபா முப்தி, செவ்வாய்க்கிழமை இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

சேலம் பசுமை வழிச் சாலைக்கு எதிராக வேலை செய்த பியூஷ் மானுஷ் கைது! ஹெச்.ராஜா வரவேற்பு!

சென்னை சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்து, போராட்டத்தை அறிவித்து, போராட்டத்துக்கான நபர்களைத் திரட்டி வந்த சமூக சேவகர் பியூஷ் மானுஷ் கைது செய்யப் பட்டார். இதற்கு பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏடிஎம்.,மில் புகுந்து துவம்சம் செய்த எலி: சுக்கு நூறான ரூ.12 லட்சம்!

இதில், ரூ.12,38,000 சேதமானதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு வயது 48 ! மோடி வாழ்த்து ட்வீட்!

இதனிடையே பிரதமர் மோடி ராகுலுக்கு தனது வாழ்த்துகளை டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

நெல்லையப்பர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

மதுரை காமராஜ் பல்கலை., துணை வேந்தரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஸ்டாலின்

உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் துணை வேந்தரை டிஸ்மிஸ் செய்யாமல் தற்போதுள்ள மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களும் மவுனம் காப்பது பல்வேறு அய்யப்பாடுகளுக்கு இடமளிப்பதாகப் பலரும் கருதுகிறார்கள்.
- 2026

கோயில் நில ஆக்கிரமிப்பை அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மதுரை: கோயில் நில ஆக்கிரமிப்பை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

ஆணையம் அமைப்பதில் சிக்கல்- மகன் குமாரசாமி! நீர் திறப்பதில் இல்லை சிக்கல் – தந்தை தேவேகௌட

பிரதமர் மோடிக்கு, காவிரி விவகாரத்தில் கருப்பு கொடி காட்டிய திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், காவிரி நீரைத் தரமாட்டேன் என்று அடம்பிடித்து ஆணையத்துக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் அடம் பிடிக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பச்சைக் கம்பளம் விரித்து திருச்சிக்கும் மதுரைக்கும் வந்தவரை வரவேற்று தங்கள் காவிரி அரசியலை வெளிப்படுத்தியுள்ளன.

ரம்ஜான் முடிந்தது; காஷ்மீரில் சண்டை நிறுத்த நீட்டிப்பு இல்லை: ராஜ்நாத் சிங்

ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்த நீட்டிப்பு இல்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை...

காவிரியின் வடிகாலா தமிழகம்?: கர்நாடக குமாரசாமியை ஒரு பிடி பிடித்த பாமக., ராமதாஸ் !

சென்னை: தமிழகம் என்ன காவிரியின் வடிகாலா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், கர்நாடக முதல்வர் குமாரசாமியை ஒரு பிடி பிடித்துள்ளார். காவிரியில் தமிழகம் உரிமை மாநிலம் என்பதை குமாரசாமி உணரவேண்டும் என்று கூறியுள்ளார்.

நதிகள் இணைப்பு பணிகளை விரைவுபடுத்த முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு தன்னுடைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் ; நதிகள் இணைப்பு பணிகளை துரிதமாக செயல்படுத்தவேண்டும் என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

ஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் கசிவு!

ரசாயன கசிவு ஒரே நாளில் சரிசெய்யப்படும் என்றும் அச்சப்படவேண்டாம் என்றும் அவர் கூறினார். 
- 2026

Recent articles

spot_img