Home உரத்த சிந்தனை ஜூனியர் கலைஞர் Vs ஜூனியர் மணியம்மை: பூனைமேல் மதிலான உதைணா!

ஜூனியர் கலைஞர் Vs ஜூனியர் மணியம்மை: பூனைமேல் மதிலான உதைணா!

எப்படியாவது இந்துக்கள் மதிப்பை பெறவேண்டும் என்று கஜ கர்ணம் போடுகிறது. அந்த கஜகர்ணத்தின் ஒரு உப குட்டிக்கர்ணம்தான் உதயநிதி

udhay-tweet
udhay-tweet

“திமுக இந்துவிரோத கட்சி அல்ல!” என்று கூவும் ஸ்டாலின், RS பாரதி மற்றும் ஆதரவாளர்கள் ஒருபுறமும், “அப்படியெல்லாம் பொய்சொல்ல வேண்டிய அளவுக்கு இந்துக்கள் ஒன்றும் தன்மான சிங்கங்கள் இல்லை.” என்ற முடிவோடு ஆ ராசா, கனிமொழி மற்றும் ஆதரவாளர்கள் இன்னொருபுறம். திமுக இப்படி இரண்டு நிலைகளில் பேசுவதை காண்கிறோம். ஒருவேளை அதிமுகவும் திராவிட பெரியாரிய அரசியல்தான் செய்கிறது என்று மக்கள் கண்டுகொண்டால், இரண்டு கழகங்களின் நிலையும் தமிழ்நாட்டில் அம்பேல் ஆகிவிடும். இது புரிந்த, ஸ்டாலின் தரப்பு எப்படியாவது இந்துக்கள் மதிப்பை பெறவேண்டும் என்று கஜ கர்ணம் போடுகிறது. அந்த கஜகர்ணத்தின் ஒரு உப குட்டிக்கர்ணம்தான் உதயநிதி பிள்ளையார் விக்ரகம் வைத்து விளையாடிய நிகழ்ச்சி.

“பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து சொன்ன மாதிரியும் இருக்கணும். சொல்லாத மாதிரியும் இருக்கணும்”.  “சொன்னது பிரச்சனை ஆனால், சொல்லல என்று உருட்டலாம், சொல்லாதது பிரச்சினை ஆனால், வாழ்த்து சொன்னேன் என்று உருட்டலாம்.” இப்படி ஒரு ஈயம் பூசிய மாதிரி, ஆனால் பூசாத மாதிரி ஒரு சூழலை உருவாக்கினார் உதயநிதி. தனது மகள் கையில் ஒரு விநாயகர் சிலையை கொடுத்து, புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்துக்கள் இதை நம்பவில்லை. தேசியவாத ஆளுமைகள் ஒன்று
“இந்த நடிப்பெல்லாம் செல்லாது தம்பி கெளம்புங்க” என்கிற ரீதியிலும், இரண்டு “பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்ததை இவ்வளவு நாள் பெருமையா சொல்லிட்டு, இப்ப அதே பிள்ளையார் கால்ல விழற நிலைமை” என்றும் பதில் அளித்தனர். ஆகவே, வாழ்த்து சொன்னேன் என்னும் நிலைப்பாடு காலி.

இது போதாது என்று பனிமலர் பன்னீர்செல்வம் (அதான், நம்ம ஜூனியர் மணியம்மை) “இது தேவையில்லாத ஆணி” என்று பதிந்துள்ளார். “பிள்ளையார் சிலையை பற்றி ட்வீட்டியது தேவை இல்லாத ஆணியா? இல்லை உதயநிதியே திமுகவுக்கு தேவையில்லாத ஆணியா?” 
என்னும் பலத்த சந்தேகம் எழுந்தது. பிள்ளையார் சிலை மட்டும்தான் தேவையில்லாத ஆணி என்று பகுத்தறிவு சொங்கிகளும், உதைணாவே தேவையில்லாத ஆணிதான் என்று சங்கிகளும் களமிறங்க, பிரச்சனை சூடுபிடித்தது. இப்படி ஏதாவது தெய்வ நம்பிக்கை சமந்தப்பட்ட வேலைகளை செய்து பிடிபட்டால், உடனே
“அது எனக்காக செய்யவில்லை, அம்மாவுக்காக, மனைவிக்காக, ரெண்டுவிட்ட சித்தப்பாவுக்காக!” என்றெல்லாம் பேசுவது கலைஞர் குடும்பத்துக்கு வழக்கம்தான்.

அதே பாரம்பரியத்தை பின்பற்றி, உதயநிதி “என் தாயார் பூஜை செய்ய சிலையை வாங்கினார், என் மகள் மிகவும் அழகாக உள்ளது என்று சொன்னார், அவர் கேட்டதால் புகைப்படம் எடுத்தேன், அவர் சொன்னதால் எனது ட்விட்டரில் பகிர்ந்தேன்” என்று பகுத்தறிவு பகலவன் வீட்டுக்குள் விநாயகர் நுழைந்ததற்கு தனது அம்மா மீதும், அதை படம் எடுத்து தான் பகிர்ந்ததற்கு மகள் மீதும் பழியை போட்டார் உதயநிதி. இவர் ஒரு நாத்தீகவாதி, அதுவும் தற்போது இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடு இல்லை என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கும் கட்சியின் வாரிசு. தனது தோல்வியடைந்த முயற்சிக்கு வீட்டில் உள்ள பெண்களின் மீதி பழியை போடும் இழிச்செயலையும் செய்துள்ளார்.

சரி, பிள்ளையார் வந்ததற்கு தாயாரும், படம் போட்டதற்கு மகளும் காரணம். உங்கள் மாமா நடத்தும் பள்ளியின் முன்னால் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு யார் காரணம்? படிக்க வரும் மாணவர் வேலைசெய்யும் ஆசிரியர், சேர்த்துவிட்ட பெற்றோர் எல்லோரும், “அரசு பள்ளிகளின் தரத்தை நாசம் செய்து இப்படி தனியார் பள்ளிக்கு வரவைத்துவிட்டனர். வேறு வழியில்லை விநாயகா, எங்களுக்கு எதிர்காலம் முக்கியம் என்பதால் இவர்களுக்கு பணம் அழுகிறோம்” என்று தோப்புகரணம் போட்டு பிராயஸ்சித்தம் செய்ய வைத்துள்ள சிலையா அது?

பழனி கோவிலுக்கு சென்றது எதற்காக? தந்தை ஸ்டாலினுக்கு பஞ்சாமிருதம் பிடிக்கும் என்று வாங்கிவர சென்றீர்களா? அவருக்குத்தான் சக்கரை நோய் உள்ளதே? எப்படி உண்பார்? ஒருவேளை ஓசியில் சாப்பாடு மட்டும் போர் அடித்ததால், வீரமணிக்கு ஒரு வெரைட்டி உணவாக இருக்கட்டும் என்று வாங்க போனதாக சொல்லலாம். இப்படி எந்த நிலையில் இருக்கிறோம் என்றே புரியாமல் வாழ்வது ஒரு வாழ்வா? நாத்திக கொள்கையில் இருந்துகொண்டு பிறரது மத நம்பிக்கையை மதிப்பது தவறல்ல. பாராட்டப்பட வேண்டிய பண்பு.

ஆனால், “என் வீட்டில் உள்ளவர்களின் நம்பிக்கையை மட்டும் மதிப்பேன், இந்து பொதுமக்கள் அதையே செய்தால் மூடநம்பிக்கை என்று மிதிப்பேன்!” 
இதுதான் உங்கள் இரட்டை நிலை. இந்த நிலைக்கு, வீட்டில் சோற்றுத்தட்டுப்பாடு வந்துவிடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு நாள் பொதுவெளியில் இந்து மக்களின் நம்பிக்கையை பழித்தபோது எந்த தட்டுப்பாடும் இல்லை. இப்போது வோட்டுத்தட்டுப்பாடு வரலாம் என்கிற பயத்தை மக்கள் காட்டியதால் இப்படி பூனை மேல் மதிலாக நிற்கிறார் உதயநிதி.

விநாயகர் செலைய மவகைல கொடுத்த
வீணாப்போன உதைணா உன்ன நம்பல 
மக்களும் மேலும் அழுத்துதா
-ஜூனியர் மணியம்ம வெச்ச மதில்??

  • காளிதாஸன்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »