
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கல்வி கடனை தள்ளுபடி செய்வோம்’ என்று கூறும் ஸ்டாலின் அவர்களே…
கல்வி கடன் என்பது வங்கிகளால் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாத ஒரு விவகாரத்தில், இயலாத வாக்குறுதியை அளிப்பது மக்களை ஏமாற்றும் செயலே. ஆனால், உண்மையிலேயே அக்கறை இருந்தால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுவோம், கல்வி உதவி தொகையை அதிகரிப்போம்” என்ற செயல்படுத்த முடிகிற வாக்குறுதிகளை அளிக்கலாம்.
ஆனால், கல்வியை தமிழக அரசியல்வாதிகள் வியாபாரமாக்கிய காரணத்தால் அந்த வியாபாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே, மக்களின் சேமிப்பை தள்ளுபடியாக அறிவிப்போம் என்று சொல்வது நியாயமா? மேலும், தள்ளுபடி என்கிற பரபரப்பு அறிவிப்பால் மாணவர்கள் கடனை செலுத்துவதில் தயக்கம் காட்டுவது அவர்களுக்கே பிரச்சினையாக அமைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சிபில் உள்ளிட்ட பல்வேறு நிதி மதிப்பீட்டு நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்தாத மாணவர்களின் பட்டியலை வெளியிடுவதனால், எதிர்காலத்தில் அவர்களின் மேற்படிப்பு, வாகனக்கடன், வீட்டுக்கடன் ஆகியவைகளை வங்கிகள் அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இதனால் மாணவர்களின் எதிர்காலம்,வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனபதை அறிந்து கொள்ளுங்கள்.
படிப்புக்கேற்ற வேலை என்ற பசப்பு வார்த்தைகளை கூறி, தமிழக அரசியல்வாதிகள் பொறியியல் கல்லூரிகளை துவக்கி கோடி கோடியாக சேர்த்தனர். ஆனால், இருக்கும் வேலைக்கேற்ற கல்வியை பயிலாமல், படித்த படிப்புக்கேற்ற வேலையில்லாமல் மாணவர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். கல்வி கடன்களில், இந்தியாவின் வாராக்கடன்களில் 40 விழுக்காடு தமிழகத்தினுடையது என்பதை தாங்கள் அறிவீர்களா? இதற்கு காரணம், வேலைவா