
பிரிட்டனில் அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து செய்யப் பட்டுள்ளது. அவர், இந்தியாவின் 71வது குடியரசு தினத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார்.
தற்போது பிரிட்டனில் அதிக வீரியமுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை அடுத்து, அந்நாட்டில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால் எழுந்துள்ள முடக்கம் காரணமாக, திட்டமிடப் பட்ட தனது இந்தியப் பயணத்தை இங்கிலாந்த்பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.
பிரிட்டன் பிரதமரின் செய்தி தொடர்பாளர் இது குறித்துக் குறிப்பிடட போது, பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரிட்டனில் மீண்டும் உருமாற்ற கொரானா பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கூறி, குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையை தெரிவித்தார்… என்று குறிப்பிட்டுள்ளார்.