இது வெற்றி வேல் வீரவேல் என முழங்கிய பூமி! மெய்ப்பித்துள்ளார் நீரஜ் சோப்ரா!

neeraj4
neeraj4

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்னும் இரு நாளே எஞ்சியிருக்கும் நிலையில் இந்தியா முதல் தங்க பதக்கம் பெற்று அசத்தியிருக்கின்றது. ஹரியானாவின் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா அந்த தங்கத்தை பெற்று கொடுத்திருக்கின்றார், அப்படியே பல சாதனைகளை பதிவு செய்திருக்கின்றார்!

அவர் இந்திய தடகளத்தில் ஒலிம்பிக் தங்கம் வெல்லும் வீரர் எனும் சாதனையினை படைத்து அசத்தியிருக்கின்றார், அப்படியே 87.5 மீட்டர் தூரம் ஈட்டி வீசி ஒலிம்பிக் சாதனையினையும் இந்தியா சார்பில் படைத்திருக்கின்றார்.

24 வயதாகும் நீரஜ் சோப்ரா மிக இளம் வயதிலே கவனிக்கப் பட்டவர், 2016ல் அவர் செய்த தடகள சாதனைக்காக ராணுவ பணி ஒதுக்கப்பட்டது. இப்பொழுது அப்பணிக்கு தான் மிக சரியானவன் என நிருபித்திருக்கின்றார், அவருக்கு தேசம் உச்சி முகர்ந்து உணர்ச்சி பெருக்கில் வாழ்த்தி கொண்டிருக்கின்றது
தேசத்தின் வீரர்கள் வென்றால் வாழ்த்துவதும், தோற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லி உற்சாகபடுத்துவதும் பாரத பிரதமரின் வழமை, அவர் இப்பொழுது வாழ்த்தி கொண்டிருக்கின்றார்.

பஞ்சாப் அரசு ஏற்கனவே அறிவித்தபடி 1 கோடி பரிசினை உறுதி செய்திருக்கின்றது, மத்திய அரசு அதை இரட்டிப்பாக்கவும் வாய்ப்பு உண்டு. காரணம் போட்டியாளர்கள் அப்படி!

தன் அபார வீச்சில் தகுதி சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை வந்தார் நீரஜ் சோப்ரா அவருக்கு போட்டியாளராக ஜெர்மானியரும் இன்னும் சிலரும் வந்தார்கள் அவர்களில் பாகிஸ்தான் வீரரும் ஒருவர் அவர் கவனிக்கப்பட்டார்! அந்த பாகிஸ்தான் வீரரை பின்னுக்கு தள்ளி தங்கம் பெற்றிருக்கும் அவரின் சாதனை இரட்டிப்பான சாதனை மட்டுமல்ல எவ்வளவு பாராட்டினாலும் ஈடே இல்லா பெரும் சாதனை!

தேசம் தங்க மகனை வாழ்த்தி மிகபெரிய மரியாதையுடன் வரவேற்க காத்து கொண்டிருக்கின்றது. உலக அரங்கில் இந்தியாவின் மானம் காத்து தங்கம் வாங்கி தேசத்தை கவுவரத்திய அவருக்கு “மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா” விருதை எடுத்து வைத்து காத்திருக்கின்றது டெல்லி. இது “வெற்றி வேல் வீரவேல்” என முழங்கிய பூமி, அதை மெய்பித்திருக்கின்றார் அந்த இந்தியன் நீரஜ் சோப்ரா

  • ஸ்டான்லி ராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories