ஜிஎஸ்டி.,யில் பெட்ரோல், டீசல்! விடியல் அரசே… எதிர்ப்பு ஏன்?

Published:

petrol pump

பெட்ரோல் / டீசல் விலைகளை GST வரிவிதிப்புக்குள் கொண்டு வருவதற்கு…

தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு!

மத்திய அரசே..

இப்போதாவது உத்தரவிடு!

ஒவ்வொரு பங்க்கிலும்…

பெட்ரோல்/ டீசல் அடக்கவிலை…..

மத்திய அரசு வரி….

மாநில அரசு வரி…

டீலர் கமிஷன்….

தனித்தனியாகக் குறிப்பிட உத்தரவிடு! இவர்களின் தில்லுமுல்லுப் பிரசாரத்துக்கு முடிவுகட்டு! மக்களும் அறிந்து கொள்ளட்டும்!

திமுக – கம்யூனிஸ்டு ஆதரவு ‘அறிவுக் கொழுந்துகளே’….

புரிந்து கொள்ளுங்கள்!

மத்திய அரசின் நிலை ஆரம்பத்தில் இருந்தே பெட்ரோல்/ டீசலை GST வரம்புக்குள் கொண்டு வருவதுதான்!

தடுப்பவை மாநில அரசுகள்..

மத்திய அரசே வீண் பழியை நீ ஏன் சுமக்கிறாய்?

இவர்களுக்கு ஓசியில் பஸ் பயணம் கொடுக்கவும்…

செத்துப் போன தலைவனுக்கு அரசாங்க கஜானா காசில் நினைவு மண்டபம் அமைக்கவும்…

இன்னமும் மக்களை ‘இலவசங்களுக்கு’ அடிமையாக்கவும்…

சிறுபான்மை மதத்தவரை தாஜா செய்வதற்கு – அவர்களுக்கு அயல் நாடு புனிதப் பயண யாத்திரைக்கு மானியத் தொகையை உயர்த்தவும்…

ALSO READ:  அன்புத் தம்பி அண்ணா மலைக்கு...

அரசாங்கப் பள்ளிக் கூடம் /அரசுக் கல்லூரி எல்லாம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் மூடிக் கிடந்தாலும் – பாடமே நடத்தாத வாத்தியார்களுக்கு வீட்டில் உட்கார வைத்து – ‘சம்பளக் கமிஷன்’ பரிந்துரைப்படி முழு சம்பளம், பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி எல்லாம் கொடுத்து – செய்யாத வேலைக்கு அவர்களைக் குஷிப்படுத்தவும்…

அரசு அலுவலகங்கள் பலவும் கொரோனா காலத்தில் சில காலம் செயல்படாமல் கிடந்தாலும் – அத்தனை ஊழியர்களுக்கும் வேலையே செய்யாத காலத்துக்கும் முழு சம்பளம் அள்ளிவிட்டு அவர்களின் வோட்டையும் – தேர்தலில் ‘ஒத்துழைப்பையும்’ வாங்கவும்…

பஸ்ஸே ஓடாமல் நின்று – வருமானமே அற்றுப் போன காலத்திலும் போக்கு வரத்து ஊழியர் சம்பளத்தை அள்ளிக் கொடுக்கவும்…

பெட்ரோல் / டீசல் GST க்குள் போய்விட்டால் வருகின்ற வரி வருமானம் பற்றாது!

இவர்கள் வோட்டு வங்கிகளைக் குறி வைத்து இலவசங்களை அள்ளி விட்டும் – செய்யாத வேலைக்கு சம்பளத்தை வாரி வழங்கியும்….

நல்ல பேர் வாங்கிக் கொள்வார்களாம்!

மத்திய அரசு பெட்ரோல் / டீசலை GST க்குள் கொண்டு வரவே விரும்புகிறது என்பதை ரகசியமாக அடைகாக்க வேண்டுமாம்! (நமது ஊர் ஊடக எடுபடிகளுக்கு!)

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

மத்திய அரசே விழித்தெழு!

GST வரம்புக்குள் பெட்ரோல்/ டீசலைக் கொண்டு வருவதை எதிர்க்கும் மாநிலங்கள் – தங்கள் மாநிலங்களில் பெட்ரோல் / டீசல் அடக்கவிலை – மத்திய அரசு வரி – மாநில வரி – டீலர் கமிஷன்… பிரித்து விலை விபரத்துடன் போர்டு வைக்க உத்தரவிடு!

  • முரளி சீதாராமன்

Related articles

Recent articles

spot_img