budget nirmala seetharaman - 2026

என்னாது..? குடையை விட வைரம் மதிப்பிழந்து போயிடுச்சா? பட் ஜெட் வேகத்துல பறந்துடிச்சா?

உரத்த சிந்தனை Featured அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி வணிகம்
budget nirmala seetharaman - 2026

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

இந்த கோபாலபுரம் மீடியாகள் சொல்வது என்ன?

மத்திய நிதியமைச்சர் சொன்னது “இறக்குமதி செய்யப்படும் குடைகளின் மீதான வரியை 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்நாட்டில் அதன் உற்பத்தியை ஊக்கு விக்கப்படும் – அதாவது சுயசார்பு உற்பத்தி ஊக்குவிக்கபடும் என்று சொல்கிறார் “

தமிழக மக்களை முட்டாளாகவே வைத்துக் கொள்ளும் முயற்சியில் இன்றைய மீடியா உள்ளது.

வைரங்களின் இறக்குமதி வரி குறைப்பு – குடைகளின் இறக்குமதி வரி அதிகரிப்பு – இது சரியான நடவடிக்கையா?

இன்றைய நிதி வரவு-செலவு திட்ட அறிக்கையில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாரமன் அவர்கள் - கஸ்டம்ஸ் டியூட்டி எனப்படும் இறக்குமதி கலால் வரியில் சில மாற்றங்களை அறிவித்தார். அதில் வைரம் முதலான (பாலிஷ் செய்யப்பட்ட கற்கள்) கற்களுக்கு வரி 5 விழுக்காடாக குறைக்கப் படுகிறது. (அதே சமயம்) குடையின் மீதான இறக்குமதி வரி 20 விழுக்காடாக அதிகரிக்கப்படுகிறது - என அறிவித்தார். 
உடனே நாடெங்கிலும் உள்ள ட்விட்டர் அறிவாளிகள் இதனைச் சுட்டிக்காட்டி கேலிப்படங்கள் வெளியிடத் தொடங்கினர். எளியவர்கள் பயன்படுத்தும் குடைக்கு வரி; பணக்காரர்கள் பயன்படுத்தும் வைத்திற்கு வரியில்லை என்ன ஞாயம் இது? எனக் கேள்விகள். பாரதிய ஜனதா கட்சியினரின் ஐ.டி. பிரிவு என்ன செய்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் தராவிட்டால், மக்கள் அதனை அப்படியே நம்பிவிடுவர். 
இந்த இரண்டு அறிப்புகளுமே MSME செக்டாரின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை. பட்டை தீட்டப்பட்ட கற்கள் - விலை உயர்ந்த வைரம் முதல் மரகதம், கெம்பு, நீலம், மாணிக்கம், வைடூரியம் போன்றவை – இறக்குமதி செய்யப்பட்டால் நகைகள் உற்பத்தி அதிகரித்து, ஏற்றுமதி பெருகும். எனவே இந்தத் தொழிலை ஊக்கப்படுத்த இறக்குமதி வரியை குறைக்க வேண்டியுள்ளது.
குடைகள் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு சீனா. அங்கிருந்துதான் குடைகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. நம் நாட்டில் குடைகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பெரிய முயற்சி செய்து வருகிறது. இருந்தாலும் இறக்குமதியாகும் சீனக்குடைகளால் நமது உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் குடைகள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டியிருக்கிறது. குடைகள் பற்றி மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகளை https://aatmnirbharsena.org/blog/umbrella-business-in-india/ என்ற இணையதளத்தில் பாருங்கள். 

எனவே வைரத்திற்கு இறக்குமதி வரியைக் குறைத்தது சரிதான்; குடைக்கு இறக்குமதி வரியை அதிகரித்தது மிக மிகச் சரிதான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.