Homeஉரத்த சிந்தனைவாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி!

வாரியார் & எம்ஜிஆர்., Vs கருணாநிதி!

இது நெய்வேலியில் நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதினைந்து நாட்களில் ஜயகாந்தன் அண்ணாவையும் திமுக., வையும் மிகக் காட்டமாகப் பேசினார். நிலையாமை

kirubananda variar - Dhinasari Tamil
  • ரகுநாதன்

இது நெய்வேலியில் நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு பதினைந்து நாட்களில் ஜயகாந்தன் அண்ணாவையும் திமுக., வையும் மிகக் காட்டமாகப் பேசினார். நிலையாமை பேசிய வாரியாரை தாக்கியவர்கள் என்னைத் தாக்குங்கள் ‘ உங்கள் அண்ணா ஒரு வேசிமகன் ‘ என்றார். அவருடைய பாதுகாப்புக்காக என்று சொல்லி அவரைப் போலிஸ் அள்ளிச் சென்றது.

கிருபானந்த வாரியார் ஸ்வாமி பேச்சையும் நான் கேட்டேன். வாழ்க்கை நிலையாமை பற்றி விரிவாகப் பேசினார். சிதம்பரம் கோயிலில் அன்றைய அமைச்சர் நெடுஞ்செழியன் விபூதியை சுடாலின் செய்ததுபோல் கீழே உதிர்த்ததைக் குறிப்பிட்டார். அடுத்தது பதினேழாயிரம் ரூபாய்க்கு (அன்று மிகப்பெரிய தொகை) ஊசி போட்டாலும் ஊழ்வினை தவிர்க்கக் கூடியதில்லை. கூடவே அவருடைய இயல்பான குழந்தைத் தனமான குலுங்கல் சிரிப்பு. ஒரு எதிர்ப்பில்லை. சத்தமில்லை.

அவர் தங்கியிருந்த ஆபரேடட்டர் ஒருவர் வீட்டிற்கு திமுக ரௌடிகள் ஆண்டகுருநாதன் என்ற தொழிற்சங்கத் தலைவன் தலைமையில் வீடு புகுந்து அவரைத் தாக்கினார்கள். ஒரு முப்பது பேர் இருக்கும். பக்கவாத்தியக்காரர்கள் தாக்கப்பட்டனர். வாத்தியங்கள் தூளாயின. சைக்கிள் மீதேறி அந்தக் கயவன் கத்தினான் ‘நைய்ப் புடைத்துவிட்டோம். கிழவன் பிழைக்க வாய்ப்பே இல்லை. போதுமா தோழர்களே ‘ மற்ற ரௌடிகள் ஆமோதிக்க எல்லாரும் மறைந்து விட்டார்கள்.

அடுத்தநாள் பண்ருட்டி மாஜிஸ்திரேட் வாரியார் பக்தர் ஸ்வாமியைக் கெஞ்சினார். புகாரளிக்க மறுத்துவிட்டார். பைத்தியக்காரர்கள் செய்தது எனக்கு என்னப்பன் வைக்கும் சோதனை எனக்கூறி மறுத்து விட்டார்.

அடித்தவர்களில் ஒரு ஆபரேடட்டர் ராமசுவாமி, நாகர்கோவிலில் சாகக் கிடந்தபோது மருத்துவத்தை மறுத்து எங்கிருப்பினும் ஸ்வாமியிடம் வாங்கிவரச் சொல்லி விபூதி பூசியவுடன்தான் உயிர் பிரிந்தது, வேறு கதை.

முதல்வர் துளிக்கூட வருந்தவில்லை. ஸ்வாமி ஸ்வாமியாகவே நடந்துகொண்டார். இதுதான் அன்று நடந்த சம்பவம்.

***

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் குறுக்குக்கேள்வி கேட்டு வம்பு செய்ததாக கருணாநிதியே ‘நெஞ்சுக்கு நீதி’யில் குறிப்பிட்டிருந்தார். நாட்கள் நகர்ந்தது 1969ல் கருணாநிதி முதல்வராய் இருந்தார் ,

அப்பொழுது அண்ணாவுக்கு Dr. Miller என்ற புகழ்பெற்ற British oncologist வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் நெய்வேலி பகுதியில் தொடர் சொற்பொழிவில் ஈடுபட்டிருந்தார் வாரியார் .

அப்போது ஒரு கூட்டத்தில், பேசும் போது மனிதனுக்கு காலனாகிய கில்லர் வந்து விட்டால், ஆனானப்பட்ட மில்லராலும் அவனை வெற்றி கொள்ள முடியாது (கடவுளை நம்பாதவனுக்கு நல்மரணம் வாய்க்காது மருத்துவம் அவனுக்கு பலன் கொடுக்காது) என்றார் தமக்கே உரிய பாணியில்!

அவ்வளவு தான் அண்ணாவை இழிவுபடுத்திவிட்டதாகக்கூறி திமுக ரவுடிகள் அவரை சூழ நின்று தாக்கினர்கள். தொடர்ச்சியாக வாரியாரின் சொற்பொழிவுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. மக்கள் பாதுகாப்பில் காவல்துறை அவரை பத்திரமாக மீட்டு, அனுப்பி வைக்கப்பட்டார் வாரியார்

காயமின்றி தப்பினாலும் அவரின் வீட்டின் மயில் சிலையும் இன்னும் பலவும் உடைத்தெறியபட்டன‌ அவர் பூஜை அறையில் புகுந்து உடைத்தார்கள். விக்ரகங்களையும் வழிபாட்டு பொருட்களையெல்லொம் உடைத்தார்கள் ஆனால் அன்று ஊடகம் என்பது செய்திதாளும் வானொலியும் என்பதால் விஷயம் மூடி மறைக்கப்பட்டு என்கிறார்கள்.

வாரியார் தாக்கப்பட்டபோது கருணாநிதி அண்ணா மீது தமிழக மக்கள் கொண்ட அன்பினை காட்டுகின்றது என்று தாக்குதலை நியாயப்படுத்தினார்கள். அதை செய்தது திமுக அரசு என்பது ஒன்றும் ரகசியம் அல்ல‌ வாரியார் தாக்கபடும் பொழுது அவருக்கு வயது 65, அந்த முதியவரை தாக்கியது தமிழ் வீரம், அதை ரசித்து கொண்டிருந்த பெயர் திராவிட பகுத்தறிவு. வாரியார் தாக்கப்பட்ட செய்தி சட்டமன்றத்தில் எதிரொலித்தது.

வாரியாரைத் தாக்கியது தவறு என்று ஆவேசமாகப் பேசினார் காங்கிரஸ் கட்சியின் கொறடாவான சட்டமன்ற உறுப்பினர் விநாயகம். அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் வாரியார் பேசியது தவறுதானே என்று எதிர்க்கேள்வி எழுப்பினர் திமுகவினர். ராஜாஜி மனம் வருந்தினார், தீட்சிதர்களும் ஆதீனங்களும் களத்துக்கு வந்தனர். முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

கி. வா. ஜகந்நாதன், குமரிஅனந்தன் ஆகியோர் சுவாமிகளை நேரில் பார்த்து உரையாடினார்கள் ம.பொ.சி திமுகவினரின் அராஜகத்தை கண்டித்து தீர்மானமே கொண்டு வந்தார். நிலைமை எல்லை மீறிச் சென்றதை உணர்ந்த கருணாநிதி ஒரு கில்லாடி திட்டம் போட்டார். அந்நேரம் தன்னுடன் மோதத் தொடங்கியிருந்த எம்.ஜி.ஆரை சரியாகப் பழிவாங்கினார். ஆம், வாரியாரை அடித்தது எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என ஆட்டத்தை திசை திருப்பினார்

வாரியாரைத் தாக்கியது மோசமான காரியம். அந்தப் பெரியவரின் மனம் புண்பட்டிருக்கும். அவரைச் சமாதானம் செய்யும் வகையில் ஏதேனும் செய்யவேண்டும்… என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். உடனடியாக ம.பொ.சியைத் தொடர்புகொண்டு பேசினார் எம்.ஜி.ஆர். வாரியாரை சமாதானப்படுத்த யோசனை ஒன்றைக் கொடுத்தார் ம.பொ.சி.

எம்.ஜி.ஆர் அவர்கள் தம் சொந்தச் செலவில் ஒரு ஆன்மீக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கிருபானந்த வாரியாரையும் அழைத்துப் பேசச் செய்தார். அப்பொழுது உண்மையினை விளக்கினார் எம்.ஜி.ஆர். அப்போது, ‘பொன்மனச் செம்மல்’ என்னும் பட்டத்தைத் கொடுத்து, அவரை வாழ்த்தி அனுப்பினார் கிருபானந்த வாரியார்.

வாரியாரை நேரில் கண்ட முதல் திமுக பிரமுக‌ர் அவர் தான்! அந்த வாழ்த்தில் கருணாநிதியினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு முதல்வராக அமர்ந்தார் எம்.ஜி.ஆர். அதன் பின் கருணாநிதியால் எழமுடியவில்லை. 1987ல் வந்தாலும் சில மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. வாரியாரால் ஆசீர்வதிக்கபடும் காட்சியே எம்.ஜி.ஆர்க்கு பெரும் வெற்றியினை பெற்று கொடுத்தது.

பொன்மன செம்மல் என வாரியார் சொன்ன அந்த வார்த்தையே அடையாளமாகி மங்கா புகழாகி அவரை அரசர் கோலத்துக்கு ஆக்கியது. சுமார் 30 ஆண்டுகள் திராவிட நாத்திக கோஷ்டியோடு மல்லுகட்டிய கிருபானந்த வாரியாருக்கு எம்.ஜி.ஆர் மூலம் பெரும் ஆறுதல் கிடைத்தது. அத்தோடு போலி நாத்திக அடையாளம் ஒழிய ஆரம்பித்தது. அதன்பின் அம்மா முதல்வராகி ஆலயமெல்லாம் பகிரங்கமாக சென்றார் வாரியாருடன் மோதியதில் திமுகவின் அழிவு தொடங்கிற்று~

முருகப் பெருமான் தன் ஞானவேல் மூலம் அந்த கூட்டத்தை சரித்து போட்டார். வாரியார் தாக்குதலை கண்டிக்காத கருணாநிதி வாரியார் காலம் வரை எழவே இல்லை. முருகபெருமானின் அடி அப்படி இருந்தது. வரலாற்றின் மிக பெரிய சான்று. ஒரு சாதாரண முருகன் ஆண்டியிடம் அவர் தோற்று அவமானப்பட்டது வரலாறு. வாரியார் சுவாமிகள், சித்தியடையும் வரை பூரண நலத்துடன் விளங்கி வெளிநாடு சென்று சொற்பொழிவு ஆற்றிவிட்டு திரும்புகையில் விண்ணில் பறந்த விமானத்தில் அப்படியே முருகன் அவரது ஆன்மாவை அழைத்துக் கொண்டான்.

ஆனால் தாக்கியவர்கள் கதி நடை பிணமாய் தொண்டையில் ஓட்டை போட்டு மூத்திர சட்டியை சுமந்து ஆறடி நிலத்துக்கு கூட பிச்சை எடுத்து நரகத்தை இங்கேயே ட்ரைலர் பார்த்து விட்டு நோயோடு போராடி நொந்து மடிந்தார்கள். இந்துக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த மகான் திருமுருக கிருபானந்த வாரியார்.

வாரியார் சுவாமிகள் யாரையும் எதிரியாக நினைத்ததில்லை அவரை எதிர்த்து பேசியவர்கள் அழிந்து போனார்கள் என்பது கண்முன்னே நடந்த வரலாறு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,147FansLike
375FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,698FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்த கமல் ..

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு காரைப் பரிசளித்து கௌரவ படுத்தினார்...

தாத்தா வசனத்தை தாத்தாவிடமே நடித்துக் காட்டும் பேத்தி!

தனது தாத்தா முன்பு அவருடைய காமெடி வசனத்தை பேசி நடித்து அசத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News : Read Now...