spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவிநாயகர் விசர்ஜனம் உள்நாட்டு நீர் நிலைகளில் ஏன்?

விநாயகர் விசர்ஜனம் உள்நாட்டு நீர் நிலைகளில் ஏன்?

- Advertisement -
1752159 vinayagar
  • பேராசிரியர் மு. ராம்குமார்

பிடிச்சி வச்சா பிள்ளையார் -ன்னு ஒரு சொலவடை மட்டுமல்ல, ஈரமஞ்சள் தூளை பிடித்து வைத்து, அதற்கு பிள்ளையார் எனப் பெயரிட்டு, சிற்ப சாஸ்திரங்களின்படி செய்த கல்/உலோகத் திருமேனிகளுக்கு செய்யப்படும் அனைத்து உபசாரங்களும், பூசை புனஸ்காரங்களும் செய்வதை கண்டிருப்போம். ஆனால், விநாயகர் சதுர்த்தி சமயத்தில் மட்டும் களிமண்ணால் பிள்ளையார் செய்து, அதனை மூன்று /ஐந்து / ஏழு நாட்கள் பூஜித்து, அதன் பின்னர் ஆறு / ஏரி /குளம் / கண்மாய் / கிணற்றில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இது ஏன் என்று யோசித்ததுண்டா?

நிலப்பரப்பில் ஒவ்வோர் இடத்திலும் வெவ்விதமான மொட்டைப் பாறைகள், பலவித நிறங்களில் மண், மணல், ஆகியவற்றைப் பார்த்திருப்போம். இவற்றில் மொட்டைப் பாறைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெளதிக, வேதியிய சிதைவுகளுக்குட்பட்டு, மண் உருவாகிறது. இந்த மண்ணில் இருந்து கரையக்கூடிய தனிமங்கள் கரைசல்களாகவும், சிதைவின் போதும், கரைசலாகும் போதும் ஒரு பகுதி வளிமண்டலத்தில் வாயுவாகவும், மீதமிருக்கும் கரையாப் பகுதி பலதரப்பட்ட அளவிலான துகள்களாகவும், பல வகையிலான கனிமங்களாகவும் தங்கி விடுகின்றன.

தமது தாய்பாறையின் தன்மையை ஒத்திருக்கும் இந்த மண் வகைகள், கால ஓட்டத்திலும், உருவான இடத்திலிருந்து மிகத் தொலைவுக்கு கடத்தப்படும் போதும் அவற்றின் பருமன், அளவு, தனிம , கனிம உள்ளடக்கம் வெகுவாக மாறுதல்களுக்குட்பட்டு, கடற்கரையோரமும், ஆறுகளுக்குள்ளும் சிலிகா கனிம அளவு மிக மிகுதியடைகிறது.

ஆற்று கரைகளிலும், வடிநிலத்தின் சில பகுதிகளிலும், சதுப்பு நிலங்களிலும் களிமண் எனப்படும் Clay அதிகமுள்ள, அங்கக கரிமத்துகள்கள் நிறைந்த மண் வகை படிவுறுகிறது.

மற்ற மண் வகைகளை போலல்லாமல் நதி வடிநிலத்தில் படிவுறும் களிமண்ணுக்கு சில சிறப்பியல்புகள் உண்டு.

1.துகள்களின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், பாறையிலுள்ள மிக்கதுண்ணிய இடுக்குகளிலும் சென்று படிய கூடிய தன்மையுடையது.

2 . தொடர்ந்து படியும் போது நீர் சேகரமாகும் நுண்துளைகளை அடைத்து பாறை, நிலப்பரப்பை நீர் புகாத்தன்மையுடையதாக மாற்றும். அதாவது, இவை படிந்துள்ள ஆழத்தை/பரப்பைத் தாண்டி நீர் ஆழத்திற்கோ வேறோர் இடத்திற்கோ, கடத்தப்பபட முடியாது. இதன் மூலம் இவை இருக்குமிடத்தில் நீரை சேகரம் செய்கிகின்றன.

3. ஆனால், இவை மெல்லிய படலமாக நீர் நிலைகளில் படிந்திருக்கும் நிலையில், நீர்வரத்து அதிகரித்தால், நீரழுத்தம் அதிகமாகும் போது ஆழத்திற்கும், பிற இடங்களுக்கும் நீர் போக்கை அனுமதிக்கின்றன. அதாவது நீர் நிலையில் குறைவான நீர் இருந்தால் சேமிக்கவும், அதிகம் இருந்தால் கடத்தவும் உதவுகின்றன. இது மெல்லிய படலமாக களிமண் நீர் நிலைகளில் இருக்கும் போது மட்டுமே செயல்படும் சேப்டி வால்வு மாதிரி.

4. பிற மண் வகைகளை விட களிமண் துகள்களுக்கு அதிக பரப்பு விசை, அதிக surface to volume ratio, அயனி விசை உண்டு. இதனால் இவை தம்மை அணுகும் அங்கக கரிமத்துதுகள்களையும், இவையிரண்டும் சேர்ந்து தமக்கு அருகே வரும் / உள்ள உலோக அயனிகளை ஈர்த்து கொள்ளும். அதாவது இயற்கையாக செயல்படும் விஷ உறிஞ்சி. தம்மோடு அவற்றை சேர்த்த பின் அயனி விசையை சமனம் செய்து விடுவதால் விஷமுறிவு செயலையும் செய்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

இப்ப, இந்த இயல்புகளோடு ஆடிப்பட்டத்துக்கு முன் தூர்வாரிய கேணி, குளம், கண்மாய், ஏரியில, அந்தந்த ஊர்காரங்க தத்தமது ஊருக்குள், அருகே உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வதன் அர்த்தம், பயன் என்னனவாயிருக்குமின்னு யோசிச்சிக்கவும்.

அடுத்தது, அபிஷேக திருமேனிகளின் அயனியாக்கம், அயனி விசை அளவு உயர்வு ஆகியவற்றை மந்திர உச்சாடனங்கள் அதிகப்பபடுத்துகின்றன என்ற விஷயத்தையும் இணைத்துப் பார்க்கவும்.

So, தூர்வாரலில் அதிகப்படுத்ததப்பட்ட நீர் கடத்தலை கட்டுப்படுத்தணும், அதிக நீர் வந்தா பூமிக்குள் / பிற இடங்களிலும் சேகரமாகணும், excess/deficient உலோக அயனிகளை சமனம் செய்யணும், இந்த செயல்கள் அளவுக்குட்பட்டு இருக்கணும், இதைச் செய்ய activated Clay + Organic Carbon வேணும்.

இதெல்லாலாம் சொன்னா கேப்பமா?

எல்லாத்தையும் சாமி பேர்ல செய்யச் சொல்லு. பயபுள்ளங்க மரியாதையாச் செய்வாங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe