
- ஜெய்ஹிந்த் ஸ்ரீராம்
சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ் காபந்து அரசின் முகமது யூனுஸ் சீனாவின் நீண்ட கால கோரிக்கை ஒன்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக வான்டட் ஆக வந்து அறிவித்திருந்தார்.
அது சிலிகுரி பகுதியை ஒட்டிய இடத்தில் சீனாவின் ஏர்-பேஸ் ஒன்றை கட்டிக் கொள்ள அனுமதிப்பது ஆகும். முதலில் நமக்கு சிலிகுரி பகுதியில் என்ன இருக்கிறது என தெரிய வேண்டும். அல்லது அது எங்கு அமைந்துள்ளது என்று தெரிந்து இருக்க வேண்டும்.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை தரை மார்க்கமாக இணைக்கும் மிக மிக குறுகலான நிலப்பரப்பை தான் சிலிகுரி காரிடர் என்கிறோம். இதனை கோழிக்கழுத்து என்பர். பார்ப்பதற்கு வரைபடத்தில் அப்படி ஒரு தோற்றத்துடன் அது இருக்கும். வெறும் இருபது கிலோமீட்டர் குறுக்கு அளவு கொண்ட இடம்……சில இடங்களில் அது கூட 14 கிலோமீட்டருக்கு கீழே வந்து விடுகிறது.தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தின் மேல் பகுதியில் வருகிறது.
சொல்லவா வேண்டும் மம்தா பானர்ஜி பற்றி ஓசைப்படாமல் ஒன்பது லட்சம் ஆதார் அடையாள அட்டைகளை வாரி வழங்கி இருக்கிறார் இவரது ஆட்சி காலத்தில்! ஒருத்தரும் இந்தியர் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க முடியும் என்கிறார்கள். ஆன போதிலும் நடவடிக்கைகள் எடுப்பதில் பல நடைமுறை சிக்கல் உள்ளதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இப்படி ஆதார் அட்டை பெற்ற ஒருவர் கூட தற்சமயம் மேற்கு வங்காளத்தில் இல்லை. பிறகு? தென்னிந்திய மாநிலங்களில் குடிபெயர்ந்திருக்கிறார்கள்.
ஆப்ரேஷன் ஸிந்தூர் நடவடிக்கைகளின் போது. ஏழு இந்திய வடக்கிழக்கு மாநிலங்களை பிடித்துவிட வேண்டும் என்றெல்லாம் பேட்டி கொடுத்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை அடித்து விரட்டி விட்டு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் என்பவரை பிடித்து வந்து பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள்.இது நடந்தது ஜோபைடன் ஆட்சி காலத்தில். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வந்தார்.
உடனடியாக இவர் பங்களாதேஷ் விட்டு பொட்டிபடுக்கையுடன் கிளம்ப தயாராகி இருந்தார். அதற்கேற்ப டொனால்ட் ட்ரம்ப் நம் இந்திய பிரதமர் சந்திப்பில், இது குறித்து செய்தியாளர்களிடம் கேட்டதற்கு. அவர் (அதாவது நம் இந்திய பிரதமரை) எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் .கூடவே என்னை விட சிறப்பாக செய்வார் என முண்டியடித்து பதில் தந்தார் ட்ரம்ப்.
இது நடந்தது பிப்ரவரி மாதத்தில்! ஆனால் அதன் பின்னர் நடைபெற்ற அத்தனையும் சீர் தூக்கிப் பார்த்தால், அதே பிப்ரவரி மாதத்தில் தான் ஏகப்பட்ட விஷயங்களுக்கான முன்னெடுப்பு நடந்திப்பது ஒவ்வொன்றாக தெரியவருகிறது. அத்தனையிலும் இந்திய எதிர்ப்பு ஏதோ ஒரு வகையில் இருக்கின்றது. யார் என ஆராய்ந்து பார்த்தால், டொனால்ட் ட்ரம்ப்பின் மகனை கை காண்பிக்கிறார்கள் இம்முறை.
அவர் பற்பல புதிய நிறுவனங்களை தொடங்கி இருக்கிறார் / வாங்கி இருக்கிறார். அல்லது இயக்குனராக வருகிறார். அந்த நிறுவனங்கள் அத்தனையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. இந்நிறுவனங்களின் துரப்பணி எல்லாம் பாகிஸ்தானிய பங்களாதேஷ் ஒட்டிய இடங்களாகவே வருகிறது. அமெரிக்க அதிபர் நம் இந்திய பிரதமர் சந்திப்பின் பின்னரான காலத்தில் தான் காட்சிகள் எல்லாம் மாற்றம் கண்டு இருக்கிறது.
நம் இந்திய பிரதமர் எதற்கோ நோ சொல்லி இருக்கிறார். அழுத்தம் திருத்தமாக! அதன் வெளிப்பாடாக பற்பல விஷயங்கள் எல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது மிக நன்றாக தெரிகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கான வித்து பிப்ரவரி மாதத்தில் ஊன்றிடப்பட்டுள்ளது. அதி நவீன உயர் திறன் மிக்க செயற்கை கோள் புகைப்படங்களை அமெரிக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பெற்று இருக்கிறார்கள். அப்படி பெற்றது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருந்த போதிலும் அதன் இயக்குனர் பொறுப்பில் பாகிஸ்தானிய பிரஜை. அதுவும் கண்காணிப்பு குற்றவாளி ஒருவர் வருகிறார். இவரது நிறுவனத்திற்கான ஃபண்ட் அமெரிக்க கிராமின் சொசைட்டி வழங்கி இருக்கிறது. இதே கிராமின் வங்கி நிர்வாக குழு நிர்வாகிகளில் ஒருவராக நோபல் பரிசு பெற்ற யூனுஸ் வருகிறார். இவருக்கு ஒபாமாவே பரிசளித்திருக்கிறார். அந்த யூனுஸ் தான் இன்றைய பங்களாதேஷ் பிரதமர்.
மொத்த ஏழு நிறுவனங்களில் இருந்து பலருக்கும் ஃபண்ட்டிங் போயிருக்கிறது. பாகிஸ்தானில் மட்டும் 13 பேர் வருகிறார்கள்.அதில் முதல் இடத்தில் முனீர் வருகிறார். அதாவது பாகிஸ்தானிய ராணுவ தலைமை தளபதியே தான். ஆஸிம் முனீர் தான் அது.
ஆக இது அத்தனையும் இயற்கை எரிவாயு கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு தான் இத்தனை ஆர்ப்பாட்டமா என்றால். ஆம். கிட்டத்தட்ட இது அத்தனையும் பொருந்திப் போகிறது. பங்களாதேஷ் ஒட்டிய கடல் பிராந்தியத்தில் சுமார் 73,000 சதுர பரப்பளவில் இயற்கை எரிவாயு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பாகிஸ்தானை ஒட்டிய அரபிக் கடலில் இதே போன்றதொரு படுகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இதன் பரப்பளவு வெளியிடப் படவில்லை.
இவை இரண்டையும் கைக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ட்ரம்ப் குடும்பம் இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் விருப்பங்கள் உண்டு. தவிர அடுத்த அதிபர் பதவிக்கு ஜூனியர் ட்ரம்பை கொண்டு வர உத்தேசித்து காய் நகர்த்தி வருகிறார்கள் ஒரு சாரார்.
இவற்றை எல்லாம் கணக்கிட்டு காய் நகர்த்த, நெப்போட்டிஸம், குடும்ப ஆட்சி, வாரிசுகள் அலப்பறை என்றாலே பற்றிக் கொண்டு வரும் பிரதமர் மோடிக்கோ, எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது போலானது. மிகத் தீவிரமான யுத்த முஸ்தீபுகள் முன்னெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இவையும் இன்றுள்ள நிலையில் ஒத்துப் போகிறது. சொல்லி வைத்தது போலே அரபு நாடுகளில் விஜயம் செய்தார் டொனால்ட் ட்ரம்ப். ஒரு ட்ரில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் என்றார் பொது வெளியில். ஆனால் எங்கே எதற்கு என வெளிப்படையாக வாயே திறக்கவில்லை அவர்.
வாதத்திற்கு, பாகிஸ்தானிய பங்களாதேஷ் பகுதிகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்து இவர் என்ன செய்ய போகிறார். எதற்கு இத்தனை அக்கப்போர்? இவற்றை எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தார் என்றால் எத்தனை பெரிய எத்தன் இவர் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்தியா துணை போகக்கூடாது என்பது இவரது வாதம். அதேசமயம் இங்கு உள்ள படுகையில் இருந்து எடுத்து இவர் நமக்கே விற்பனை செய்ய உத்தேசித்து காய் நகர்த்தி இருந்தார் என்றால் நம்மை எவ்வளவு தூரம் நினைத்துக் கொண்டு இருக்கிறார் பாருங்கள். இந்தியா விடுவதாக இல்லை. அதேசமயம் வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
ஆனால் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள். ராணுவ பயிற்சி ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி முடிந்திருக்கிறார்கள். இதில் AI தொழில்நுட்ப பண்புகள் மூலம் ரோபோடிக்ஸ் முறையில் சிலவற்றை முன்னெடுத்ததாக சொல்கிறார்கள். சில பல காரணங்கள் முழுமையாக இங்கு விளக்க வில்லை. அதுபோலவே நம் இந்திய தரப்பில் கடற்படை மூலம் நோட்டம் (Notification to Airmen) நாளை, நாளை மறுநாள் என இரண்டு நாட்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள்.
யூனுஸ் முற்றாக எங்கோ பதுங்கி இருக்கிறார். அநேகமாக ஆப்ரேஷன் ஸிந்தூர் போன்றதொரு நடவடிக்கையை பங்களாதேஷ் பக்கமும் வரவிருக்கும் நாட்களில் எதிர்பார்க்கலாம் போலிருக்கிறது இவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், ஏற்கனவே பங்களாதேஷ் துறைமுகத்தில் இருந்து எந்த ஒரு இறக்குமதியையும் இந்திய கிழக்கு பகுதியில் வரும் துறைமுகத்திலும் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். பங்களாதேஷில் இருந்து மும்பை துறைமுகத்திற்கு மாத்திரமே அனுமதி கொடுத்து அதிர வைத்து இருக்கிறார்கள்.
நிலப் பரப்பு ஊடாக மட்டுமன்றி கடல் வழி பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் நம்மவர்கள். ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக மிகத் துல்லியமாக தெளிவாக முன்னெடுத்து வருகிறார்கள். நாமும் கொஞ்சம் பொறுந்திருந்து பார்க்கலாம்.





