
மீண்டும் மூக்குடைத்துக் கொண்ட ட்ரம்ப்.
இஸ்ரேல் ஈரான் மோதலில் இடையே புகுந்த அமெரிக்கா தங்களின் கனமான குண்டு வீச்சு விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது.
ஆனால் இந்த தாக்குதல்…..
திட்டமிட்ட நாடகம் என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.
ஏனெனில் இதற்கு பதில் நடவடிக்கையாக ஈரான் கத்தாரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த…. அவை அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களால் எதிர்கொள்ளப்பட்டது.
சரியாக சொல்வதென்றால் ஈரானிய தாக்குதலால் எந்த ஒரு சேதமும் இல்லாமல் கத்தார் அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை காண்பித்து கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..
இது ஏன் தற்சமயம் முக்கியத்துவம் பெற்றது.????
அதில் விஷயம் இருக்கிறது.
இஸ்ரேலிய ஐயன் டோம் மற்றும் அமெரிக்க தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களை உடைத்து உள்நுழைந்து இஸ்ரேலை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள் ஈரானியர்கள்.இத்தனைக்கும் இவர்கள் வசம் அதி நவீன ரேடார் சிஸ்டமோ அல்லது GPS வாழிகாட்டுதலுடன் கூடிய தொழில்நுட்ப பண்புகளோ இல்லை. ஆனாலும் இலக்கை துல்லியமாக தனித்துவமான தாக்கி இருந்தார்கள்.
இஸ்ரேல் ஒரு வாரத்தில் குப்பை கூளமானது. சரி செய்து தலை நிமிர குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதாக மதிப்பீடும் செய்து இருக்கிறார்கள்.
இது இஸ்ரேல் எதிர்பாராத ஒன்று.
அதேசமயம் நம் இந்திய தரப்பில் ஆப்ரேஷன் ஸிந்தூர் நடவடிக்கைகளின் ஓர் பகுதியாக பாகிஸ்தானிய ட்ரோன் தாக்குதலும் சரி…. ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய சமயத்திலும் சரி அவற்றை வெகு சுலபமாக கையாண்டு வானில் வைத்தே இடைமறித்து தாக்கி அழித்திருந்தது.
ஏற்கனவே நம் இந்திய தயாரிப்பு பராக் 8 ரக ராக்கெட்களை வாங்கி இஸ்ரேல் பயன்படுத்தும் நிலையில் நம் இந்திய தயாரிப்பு வான் பாதுகாப்பு சாதனங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை.
சமயம் பார்த்து இந்த இடத்தில் உள்நுழைந்து ஈரானிய இலக்குகளை… அதுவும் இஸ்ரேல் காண்பித்து கொடுத்த இலக்குகள் மீது தங்கள் கனமான குண்டு வீச்சு விமானங்களில் இருந்து ஈரானை தாக்கியது அமெரிக்கா. ஆனால் இந்த விஷயத்தில் குறைந்தது 18 மணிநேரம் தாமதம் இருந்தது.அது செயற்கையாக திட்டமிட்டே நடந்தது என்கிறார்கள் இஸ்ரேலியர்கள். இடைப்பட்ட இந்த காலத்தில் ஈரானுக்கு, வேண்டியவர்கள் மூலம் தகவல் தந்து தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொள்ள சொல்லி விட்டு இடைப்பட்ட கால அவகாசத்திற்கு பின்னர் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்..
அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என நிஜமாகவே திட்டமிட்டு செய்திருந்தால்….. இந்திய பெருங்கடலில் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தளத்தில் இருந்து தாக்குதல் நடத்த ஏற்பாடுகளை செய்திருக்க முடியும்.
ஆனால் செய்யவில்லை.
காலங்காலமாக அவர்கள் பயன்பாட்டில் உள்ள சவுதி அரேபியாவில் இருந்து தாக்குதல் நடத்தி இருக்க முடியும். இத்தனைக்கும் அங்கு தான் அமெரிக்க போர் விமானங்கள் வந்து இறங்கி இருந்தது.
ஆனால் அவற்றை முன்னெடுக்கவில்லை.
ஈரானிய கடல் எல்லையை ஒட்டிய சர்வதேச கடல் பிராந்தியத்தில் அமெரிக்க போர் கப்பல்கள் தொகுதி நிலைநிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.அங்கிருந்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடந்த சமயத்தில் இவர்களும் உடன் இணைந்து தாக்குதல் நடத்தி இருக்க முடியும்.
ஆனால் செய்யவில்லை.
சம்மந்தமே இல்லாமல் பதினாங்கு மணி நேரம் இடைவிடாது ஆறு B2 பாம்பர் விமானங்களை, எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்களோடு பசிபிக் பெருங்கடல் மீது பறந்து வந்தே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு பின் மீண்டும் இடையே எங்கும் நிற்காமல் திரும்பி சென்று இருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் ஆட்டம் காட்டுகிறார் என்பதை பெஞ்சமின் நெதன்யாகு உணர்ந்து கொண்டு விட்டார் போலிருக்கிறது.
ஏனெனில் ஈரான் கத்தார் மீதான தாக்குதலுக்கு பின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக மேற்கத்திய ஊடகங்களால் விடாமல் செய்தி வாசித்து கொண்டு இருக்க…. கத்தார் மீதான தாக்குதலுக்கு பின் ஈரானில் இருந்து வெளி உலகை தொடர்பு கொண்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்பதை உளவு தகவல் மூலம் ஊர்ஜிதம் செய்து கொண்டு இருக்கிறார்., நெதன்யாகு.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எப்படி தகவல் கிடைத்து போர் நிறுத்தம் பற்றி பேச முடிந்தது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது.
கூடவே…… இந்திய பாகிஸ்தான் மோதலின் போது இதேபோல் தான் தான் முன் நின்று இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்ததாக சொன்ன சமயத்தில் நம் இந்திய தேசம் அமைதியாக அப்படி ஏதும் நடைபெறவில்லை…… பாகிஸ்தானிய DGMO நேரிடையாக தொடர்பு கொண்டு பேசியதின் பேரில் ஆப்ரேஷன் ஸிந்தூர் தாற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதாக சொல்லி ட்ரம்ப் முகத்தில் கரியை பூசினார்கள். இன்று அதேபோன்றதொரு சமாச்சாரம் தான் இஸ்ரேல் ஈரான் விஷயத்திலும் நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நெதன்யாகு பொங்க ஆரம்பித்திருக்கிறார்.
இதனை அவர்….. ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தி, சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பக்கம் ஈரானை சமாதான உடன்படிக்கைக்கு கொண்டு வந்ததாக பொது வெளியில் அறிவித்து அதிரடி காட்ட…. அப்படியா… தங்களுக்கு அது குறித்து தகவல் ஏதும் இல்லை என நெதன்யாகு பதில் சொல்ல….. இப்போது ட்ரம்ப், நெதன்யாகு மீது பாய ஆரம்பித்து விட்டார்.
ஆக…..
உடனிருந்த எலான் மஸ்க்கை பதம் பார்த்தது போல் முதல் விருந்தினர் ஆன பெஞ்சமின் நெதன்யாகு மீதும் பாய ஆரம்பித்து இருக்கிறார். இவர், தான் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற சமயத்தில் வந்திருந்த… சந்தித்த முதல் பார்வையாளர் மற்றும் விருந்தினர் பெஞ்சமின் நெதன்யாகு தான்.
மேற்கு கரை காசாவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஈரான் மீதான தாக்குதலும் கைவிடப்படவில்லை. இஸ்ரேல் தனது வழக்கமான தாக்குதல் வேலைகளில் ஈடுபட்டும் வருகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும் தனக்கு…தனது சேவையை பாராட்டி இன்னமும் டீ வரவில்லை …….. என்பது போல் நோபல் பரிசு ஏன் கொடுக்கவில்லை உறும ஆரம்பித்து இருக்கிறார்.
இஸ்ரேல் மாத்திரம் விடாப்பிடியாக ஈரானை தாக்கி கொண்டு நிற்கிறது ….. யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல்..
💗 ஜெய் ஹிந்த்.





