
மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கடும் வெயிலை பொருட்படுத்தாமல், வாகனங்களில் முருக பக்தர்கள் வந்து குவிந்தனர். மாநாட்டுக்கு போடப்பட்ட இருக்கைகள் பொது மக்கள் குடையாக பிடித்து நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.
பிற்பகலில் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது.
வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்கள், கார்கள், வேன்களில் முருக பக்தர்கள் வந்தனர். மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆட்டோக்கள், மினி வேன்களில் பக்தர்கள் வந்தனர்.
மாநாட்டு திடலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், உள்ளிட்டோர் மாநாட்டு திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் கோயிலை தரிசித்தனர்.
மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை பாண்டி கோயிலிலிருந்து, மாநாட்டு திடல் வரை சாலை இருபுறங்கள் காவிக் கொடி கட்டப்பட்டுள்ளன. போலீஸார் சாலைகளில் சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகளை அமைத்துள்ளனர்.
காடேஸ்வரா சுப்ரமணியம் உரை : இந்த மாநாடு நடக்க கூடாது என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரக் கூடாது, 4 நாட்களாக விரதம் இருந்தாராம். இந்த மாநாட்டிற்கு விளம்பரம் நாங்கள் கொடுக்கவில்லை. சேகர் பாபுவும், திருமாவளவனும், வைகோவும் தான் இந்த மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்தார்கள். 400 கோடி ரூபாயில் மாநாடு நடத்தப் போவதாக சேகர்பாபு சொல்கிறார்.
இந்த மாநாடு நடத்துவதற்கு 500, ஆயிரம் ரூபாயாக கலெக்ஷன் பண்ணி நடத்துகிறோம். கணக்குத் தருகிறோம். நீங்கள் கணக்குத் தருவீர்களா?
திருப்பரங்குன்றத்தில் காவல் துறையினர் மிரட்டினார்கள். நீதிமன்ற தீர்ப்பின் தயவால், அன்று உடனடியாக 50 ஆயிரம் பக்தர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இந்த மாநாடும் நடக்க கூடாது என பல இடையூறை ஏற்படுத்தினார்கள். இன்றும் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்று இந்த முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறோம். கடந்த 7 நாட்களில் 7 லட்சம் பக்தர்கள் மாநாட்டுத் திடலுக்கு வந்துள்ளதாக நாம் கணக்குச் சொல்லவில்லை. போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். தமிழகத்தில் ஆன்மீகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது அரசியல் மாநாடு அல்ல.
எடப்பாடிக்கு அழைப்புக் கொடுத்ததன் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வந்து இருக்கிறார்கள். முதலமைச்சர்க்கும் இந்த மாநாட்டில் அழைப்புக் கொடுக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம், அவரிடம் இருந்து பதில் இல்லை.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை. மேடையில் அண்ணாமலை அமர வைக்கும் போது தொண்டர்கள் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி சுதாகர் ரெட்டி, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, உதயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் வருகை உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
மதுரையில் ரிங் ரோடு அருகே வாகனங்களில் வந்த முருக பக்தர்களுக்கு , பா.ஜ.க. நிர்வாகிகள் உணவு, ரொட்டி, தண்ணீர் பாட்டில் வழங்கினர்.





