
- செல்வ நாயகம்
சீனாவில் டாக்டர் ஜெய்ஷங்கர்!
கல்வான் பள்ளத்தாக்கில் சீனா வாலாட்டி வாலறுத்ததோடு சீனா நாட்டுக்குச் செல்லவில்லை நம் வெளியுறவுத் துறை அமைச்சர்.
கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் நேற்று சீனா விஜயம் செய்திருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர்.
அவரைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாக இருந்து நட்புறவை கடைப்பிடிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை, அமைதியான சகவாழ்வு, வளர்ச்சி மற்றும் பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்.
டாக்டர் ஜெய்ஷங்கர் இந்த வழ வழ அறிக்கை விடவில்லை. தெளிவாக, “பாரத எல்லையில் பிரச்சினை செய்வதை நிறுத்த வேண்டும் சீனா. பாரதத்துக்கு எதிரான வர்த்தக முடக்கங்களைச் செய்வதை சீனா நிறுத்த வேண்டும். சீனா mutual respect, mutual interest and mutual sensitivity ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும், “உலகம் (அமெரிக்காவின்) ஒருமுகத் தன்மையிலிருந்து பன்முகத் தனமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. உலகின் பழைய ஒழுங்கு முறை போய்க் கொண்டிருக்கிறது, புதிய ஒழுங்குமுறை வந்து கொண்டிருக்கிறது (changing global order and the emergence of multipolarity.).” என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார்.
இதன் மூலம்:
1, பாரத எல்லையில் சீனா இன்னும் சில்மிஷம் செய்வதை நிறுத்த வேண்டும்.
2, பாரதத்தை அடிமையைப் போல நடத்துவதை நிறுத்தி, mutual respect, mutual interest and mutual sensitivityயை கருத்தில் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்).
3, அதோடு, ‘changing global order and the emergence of multipolarity’ பற்றிக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. காரணம்: இன்றைய தேதியில், அமெரிக்கா சொல்வதை எவரும் கேட்பதில்லை. காலம் மாறிவிட்டது. இன்னமும் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு சீனா ஆட்டம் போடலாம் என்று நினைத்தால், பல்பு தான் கிடைக்கும் சீனாவுக்கு. சீனா ஆதிக்கம் செலுத்திய ஆப்பிரிக்காவை குளோபல் சவுத் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக மோதி ஜி அமர்ந்து விட்டார். அதோடு, ஜி20இல் அந்த ஆப்பிரிக்காவையும் சேர்த்து அதை பெருமைப் படுத்தியிருக்கிறார். மேலும், பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா தென் ஆப்பிரிக்கா என்றிருந்த பிரிக்ஸ் அமைப்பில் மேலும் பல நாடுகளைச் சேர்த்து – குறிப்பாக ஆப்பிரிக்கவைச் சேர்த்து – இப்போது பிரிக்ஸுக்கு புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார் மோதி ஜி: “Building Resilience and Innovation for Cooperation and Sustainability”. இனி அது Brasil Russia India China South Africa கிடையாது. !! இதையெல்லாம் குறிப்பிடும் விதமாக டாக்டர் ஜெய்ஷங்கர் changing global order and the emergence of multipolarity’ என்று குறிபிட்டிருக்கிறார்.
*** இத்தனையையும் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் & ஆப் சிந்தூர் விவகாரத்தில் பாக்ஸ்டானை பின்னிருந்து இயக்கியது சீனா தான் என்பதைக் கூறவில்லை. அதை பின்னொரு நாளுக்கு வைத்திருப்பாரோ???
*** ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர். சீனா திருந்துமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
*** அமெரிக்காவுக்கு எதிராக தண்டத்தை கையிலெடுத்து விட்டார் மோதி ஜி, ‘நீ அடித்தால் பதிலுக்கு நான் அடிப்பேன்’ என்று! அதே நிலை சீனாவுக்கு என்று வருமோ தெரியாது.
பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சிரித்த முகத்துடன் சொல்கிறார், “அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் லாபமான வகையில் அந்த ஒப்பந்தம் அமையும்” என்று.
வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் மீது ஏற்கனவே கடுப்பாக இருக்கிறது அமெரிக்கா, “டாக்டர் ஜெய்ஷங்கர் தான் பாரதத்துக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் போடும் முட்டுக் கட்டைகளை உடைத்தெறிகிறார்” என்று.
இப்போது வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மீது அதிக கடுப்பில் இருக்கிறது டிரம்ப் அட்மின், “ரொம்ப tough negotiator இந்த கோயல். கொஞ்சமும் இடம் கொடுக்க மாட்டேனென்கிறார் எங்களுக்கு” என்று.
பாரத அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகளில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால் ‘அமெரிக்க விவசாய பொருட்களில்’. அத்தனையும் genetically modified! அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோளத்தை அமெரிக்க கால்நடைகள் கூட உண்ண மறுக்கின்றன என செய்திகள் உலவுகின்றன. அந்த சோளத்தை நம்மிடம் விற்கப் பார்க்கிறது அமெரிக்கா. நம்மிடம் மட்டுமல்லாமல் ஜப்பான், ஐரோப்பா என அத்தனை நாடுகளிடம் முயற்சித்து வருகிறது டிரம்ப் அட்மின். என்றாலும், அத்தனை பேரும் ஒதுக்கி விட்டார்கள் அமெரிக்க விவசாய உற்பத்தியை.
டிரம்ப்புக்கு – ரிபப்ளிகன்களுக்கு – இது கடுப்பை ஏற்றியிருக்கிறது. காரணம்: அமெரிக்க விவசாயிகள் தான் ரிபப்ளிகன்களின் வாக்குவங்கி! அவர்களுக்கு சாதகமாக அவர்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நாட்டு விவசாயிகளுக்கு நட்டம்! எப்படியாவது அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று துடிக்கிறது டிரம்ப் அட்மின்.
கோயல் அணி, ‘genetically modified விதைகளையோ, விவசாய உற்பத்திகளையோ ஏற்க மாட்டோம்’ என்று ஒரேயடியாகப் போட்டிருக்கிறது. அவனிடமிருந்து genetically modified விதைகளை வாங்கினால், நம் விதைகள் அழிவதோடு, ஆயுள் பூராவும் அவனிடமே விதைகளுக்கு கையேந்த வேண்டும்…
தன் வாக்குவங்கியை திருப்திப் படுத்த டிரம்ப் அட்மின் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கை – சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முடிவெடுத்திருக்கிறது டிரம்ப் கூட்டம். ஏனென்றால், அந்த சட்டவிரோத குடியேறிகள் தான் அமெரிக்க விவசாயிகளிடம் வேலை பார்க்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதில்லை. எனவே, அவர்களை திருப்பி அனுப்பிவிட்டால் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாகிவிடும். எனவே… சட்ட விரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.
இதே டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போது, ‘சட்ட விரோத குடியேறிகளால் நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. அவர்களைத் திருப்பி அனுப்புவேன்’ என்றார். இப்போது அவரே, ‘சட்டவிரோத குடியேறிகள் தான் எங்கள் விவசாயிகளின் நண்பர்கள். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப் போகிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார். கழுவின கையாலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் டிரம்ப்!
டியர் டிரம்ப், ‘டாக்டர் ஜெய்ஷங்கரும் பியூஷ் கோயலும் மோதி ஜி உத்தரவில்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறார்கள்’ என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் போல முட்டாள் உலகில் இல்லை!
Delhi: On being asked about India–US trade negotiations, Union Minister of Commerce and Industry Piyush Goyal says, “Negotiations are going on at a very fast pace and in the spirit of mutual cooperation so that we can come out with a win-win trade complementing agreement with the United States.”





