December 5, 2025, 11:53 AM
26.3 C
Chennai

இந்தியர்களுக்கு ட்ரம்ப் எடுத்த பாடம்!

donald trump - 2025

ட்ரம்ப் சரி! நாம தான் தப்பு!

கூகுள் சி இ ஓ யார் தெரியுமா?
மைக்ரோசாஃப்ட், யூட்யூப், ஃபெட் எக்ஸ், அடோப், ஐபிஎம், அட அவ்வளவு ஏங்க வேர்ல்டு பேங்க் சி இ ஓ வே இந்தியன் தான். நாம இல்லாம அமெரிக்காவே நகராது….
இல்லையா?
இல்லை.

மேலே சொன்ன அத்தனை கம்பெனிகளுக்கும் ஓனர் யாரு? அமெரிக்கன்ஸ்…
நாம யாரு? லேபரரூ…
என்ன வித்யாசம்?
நம்ம அம்மா அப்பா நம்மள என்ன சொல்லி வளர்த்தார்கள்? நல்லா படி மகனே/மகளே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போயி கை நிறைய சம்பாதிச்சு நிம்மதியா வாழணும்.

எந்த ரிஸ்க்கும் இல்லாம, நல்ல வேலையில் சேர்ந்து மாசமாசம் நல்ல சம்பளம் வாங்கணும். அவ்வளவு ஏன், நல்ல மாப்பிள்ளைங்க, நல்ல கம்பெனியில வேலை பார்க்கிறார். நிரந்தர வேலை. தைரியமா பொண்ணைக் கொடுக்கலாம்.
காக்காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசா இருக்கோணும்.
எந்தப் பெற்றவர்களும் தொழில் தொடங்கு, நிர்வாகம் செய்னு சொன்னதே இல்லை.

அமெரிக்கன்ஸ் / ஐரோப்பியன்ஸின் பலமே மேனேஜ்மெண்ட்ல ஸ்ட்ராங்காக இருப்பது தான். ”பால் கெட்டி” என்ற முன்னாள் கோடீஸ்வரரை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும் ராக் பெல்லர் மாதிரியான பெரிய தொழிலதிபர். அவருடைய அப்பாவும் பெரிய தொழிலதிபர் தான். வருடத்திற்கு சில நூறு டாலர்கள் மட்டுமே கொடுப்பாராம். இதை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள். இதுவும் ஒருசில ஆண்டுகளுக்கு மட்டுமே கொடுப்பேன். பிழைத்தால் பிழைத்துக் கொள் இல்லையென்றால் அப்படியே ஓடிடுனு சொல்லியிருக்கார்.

அந்தக் காலத்தில் சில நூறு டாலர் என்பது பெரிய விசயம் தான். நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? ஒரு ஹோட்டலோ, டிபார்ட்மெண்ட் ஸ்டோரோ ஆரம்பித்திருப்போம். பால்கெட்டி என்ன செய்தார் என்றால், வளைகுடா நாடுகளுக்குச் சென்று இருக்கும் காசையெல்லாம் வைத்து எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டினார். இரண்டு வருடங்களாக ஒவ்வொரு முயற்சியும் தோல்வி. எனினும் ரிஸ்க் எடுத்து கடைசியில் உலகத்தின் முதல் மூன்று கோடீஸ்வரர்களில் ஒருவரானார்.

இன்றைக்கும் நம் மக்கள் என்ன செய்கிறோம்? ஐடி / கம்.சைன்ஸ்/மெக்.எஞ்சினியர் என்று வேலைக்குப் போகும் மனநிலையிலேயே படிப்பைத் தேர்ந்தெடுக்கிறோம்.

குறைந்தபட்சம் கல்லூரியிலிருந்தாவது மேனேஜ்மெண்ட் படிப்பினை விரும்பிப் படிக்கிறோமா? கடனுக்கு எம்பிஏ பட்டம் வாங்கிட்டு அதைக் காட்டி ஒரு ப்ரமோஷன் வாங்கிக்கிறோம்.

இன்றைக்கு நாம இல்லாட்டி அமெரிக்கா இல்லைனு நாமளா கற்பனை பண்ணிக்கிறோம். நாம இல்லாட்டி, இந்தோனேசியா, வியட்நாம், மெக்ஸிகோ, ப்ரெஸில், நைஜீரியா, எத்யோப்பியா போன்ற நாடுகளிலிருந்து ஆட்களைத் தூக்கிட்டு வந்து ட்ரெய்ன் பண்ணி தொழிலை நடத்திக் கொள்வான். நாம தான் அங்கே வேலை போனதும், ஏய்.. இந்திய அரசே! வேலை கொடுக்க வக்கில்லையா? எங்கள் அறிவை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றல் இல்லையா என்று வெட்கமே இல்லாமல் அடுத்தவர்கள் மீது பழி போடுவோம்.

கொஞ்சம் யோசித்தீர்களா?
சுந்தர் பிச்சை, அஜய் பங்கா, ராஜ் சுப்பிரமணியம், அரவிந்த் கிருஷ்ணா எல்லாம் தன் கையிலிருக்கும் கோடான கோடியை வைத்து ஏன் தனியாக ஒரு கூகுள், ஐபிஎம், பேங்க், ஃபெட் எக்ஸ் போன்றதொரு கம்பெனியை ஆரம்பிக்கவில்லை என்று?

இவர்களெல்லாம் கம்பெனி ஆரம்பிப்பதாகச் சொன்னாலே உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் கொட்டும். ஏன் ஆரம்பிக்கவில்லை.

அந்த வகையில், ஸோகோ ”ஸ்ரீதர் வேம்பு” ஒரு வைடூரியம். ரிஸ்க் எடுத்த தேசப்பற்றாளர். ஆனால், நமக்கெல்லாம் ஐடி நிறுவனம் என்றாலே வெளிநாட்டுக்குச் சேவை செய்யும் இன்ஃபி மாதிரியான கம்பெனிகள் தான் நினைவுக்கு வருகிறது.

ஏனெனில், நமக்கு நிர்வாகரீதியாக வெற்றி பெற்றவர்களைக் கொண்டாடுவதை விட வேலை செய்து வெற்றிபெற்றவர்களே ஹீரோக்களாகப் படுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர்களை விட நடிகர்களே ஹீரோவாகப் பார்ப்பது போல…

இனியாவது நம் குழந்தைகளுக்கு நிர்வாக மேலாண்மையின் அவசியத்தையும், கல்வியையும் போதிப்போம். அடுத்த சில தசாப்தங்களில் உலக வல்லரசாவோம்.

அது வரை இன்னிக்கு ட்ரம்ப் என்ன அறிக்கை விடப் போகிறார்னு எக்ஸ்/ட்ரூத் ஆப்களை ரெஃப்ரெஷ் பண்ணிட்டே காத்திருக்க வேண்டியது தான்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories