
நாளை முதல் மறைமுக வரி சீர்திருத்தம் #GST 2.0 அமலுக்கு வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகவாகவும் பல பயன்களை விளைவிக்கவல்லது. ஏற்கனவே நேரடி வரி விதிப்பிலும் (வருமான வரி) ரூ.12 இலட்சம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
● வரிக் குறைப்பு பொது மக்கள் கையில் கூடுதல் பணம் புழங்க வழிவகை செய்துள்ளது.
● இதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
● நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், சேவை அளிக்கும் வணிகர்கள் அனைவரும் எளிதான வரி விதிப்பிற்கு (5% & 18%) மாறுவார்கள்.
● வரி விதிப்பில் உள்ள சின்னச் சின்ன சிரமங்கள், வரம்புக் குழப்பங்கள் படிப்படியாக சில மாதங்களில் குறைந்து விடும்.
● வரி ஏய்ப்பு செய்ய வேண்டிய சிந்தனை அல்லது அவசியம் பலருக்கு இல்லாமல் போகும்.
● மறைமுக வரி குறித்த வழக்குகள், மேல்முறையீடுகள், அபராதங்கள், இழுத்தடிப்பு நிச்சயம் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும்.
● நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சகம், சட்ட அமைச்சகம் மூன்றும் மிகப்பெரிய அளவில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோரின் பணிச்சுமையை இலகுவாக்கும்.
● பட்ஜெட்டில் வரி குறித்த புதிய அறிவிப்புகள் வரும் ஆண்டுகளில் தேவையில்லாமல் போகும்.
● GST கவுன்சில் போன்ற மாநில நிதியமைச்சர்களின் குழு கூடி முடிவெடுக்கும் விஷயங்கள் கை விரலில் எண்ணி விடும் அளவுக்கு மிக சொற்பமாக மட்டுமே இருக்கும்.
● அரசின் செலவினம் குறைந்து, அரசு இயந்திரத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.
● Ease of Doing Business என்பதில் நாம் பல படிநிலைகள் முன்னேறுவோம். ஆனால் உலக வங்கி,IMF தரும் இந்த ஆய்வு முடிவுகள் வருவதற்கு நான்கு ஆண்டுகள் வரை ஆகும்.
● புதிய அந்நிய முதலீடுகள் இந்தியாவிற்கு வரும். உள்ளூர் நிறுவனங்கள் தொழிலை விரிவுபடுத்தும்.
● எண்ணிலடங்கா தொழில் முனைவோர், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவர்.
● சர்வதேச நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும்.
● ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்பு வசதிகளான நெடுஞ்சாலைகள், இரயில் தடங்கள், துறைமுகங்கள் இணைப்பு, விமான நிலையங்கள், நீர்வழிப் போக்குவரத்துத் தடங்கள், சரக்கு முனையங்கள் இலக்கு வைத்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
● சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், மின்சார உற்பத்தி + விநியோகச் செலவுகள் படிப்படியாக குறையும்.
● மின்சாரம், பத்திரப்பதிவு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவை வருங்காலத்தில் GST யில் கொண்டு வரப்பட வேண்டும்.
● இறுதியாக GST 2.0 சீர்திருத்திற்கு பிரதமர் தான் தான் காரணம் என்று பெருமை பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தற்போது கூறுகிறது. இதை ஒவ்வொரு GST கவுன்சில் கூட்டம் முடிந்த பின்போ, மாநில எதிர்க்கட்சிகள் நிதிப் பகிர்வு குறித்து அரசியல் செய்யும் போதோ சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொன்னால் இதை இப்போது நிச்சயம் வரவேற்று இருப்பேன்.
- சக்ரவர்த்தி மாரியப்பன்





