‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

write thoughts - 2026
#image_title

– ஜி.எஸ். பாலமுருகன் –

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக வாக்கு அறுவடையை மையப்படுத்தியதாக உள்ளன. அதில் குற்றம் சொல்லவில்லை என்றாலும், கடந்த கால வாக்குறுதிகளின் நிலையை பார்க்கும் போது இப்போது சொல்லியிருப்பது ஏமாற்று வேலையாக தோன்றுகிறது.

“ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளவோ அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ளவோ வழங்கப்படும்” என்பது தி.மு.க.வின் வாக்குறுதி.

    இது பெண்களின் வாக்குகளை இலக்கு வைக்கும் முயற்சி. இந்த திட்டம் காகிதத்தில் கவர்ச்சியாக தோன்றினாலும், நடைமுறையில் இது குடும்பங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையையே ஏற்படுத்தும். அதே ரூ.8,000-ஐ நேரடியாக பணமாக வழங்கினால், குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான செலவுகளுக்கு பயன்படுத்துவார்களே; ஏன் கட்டாயமாக குறிப்பிட்ட பொருட்களை வாங்க சொல்லப்படுகிறார்கள் என்ற விவாதமும் உருவாகிறது.

    கூப்பன் இல்லத்தரசிகளுக்காக என்றாலும், அதன் பின்னணியில் வரும் செலவுச் சுமை குடும்பத் தலைவர்கள் மீதே விழும். ரூ.8,000 கூப்பனை வைத்து வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி. வாங்கலாம் என கூறப்படுகிறதே தவிர, இப்போதைய சந்தை விலையில் இவற்றில் ஒன்றை வாங்கவே ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை செலவாகிறது. அதனால், கூப்பன் ஒரு சிறிய பங்காக மட்டுமே இருக்கும்; மீதி தொகையை மக்கள் கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

    மேலும், இந்த கூப்பன் குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் குறிப்பிட்ட விற்பனையகங்களுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், மக்களின் தேர்வு சுதந்திரம் குறைக்கப்படுமா என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. “ரூ.8,000 குடுத்து ரூ.20,000 செலவு செய்ய வைக்கிற திட்டமா இது?” என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

    “ரூ.8,000 கிடைக்கிறது” என்ற மனநிலை, தேவையில்லாத வாங்குதல்களையும் தூண்டும் அபாயம் உள்ளது. ஏற்கனவே நல்ல நிலையில் பயன்படுத்தி வரும் பொருட்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, தேவையற்ற செலவுகள் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இது உண்மையில் மக்கள் நலத்திட்டமா, அல்லது வீட்டு மின் சாதன சந்தையை ஊக்குவிக்கும் மறைமுக முயற்சியா என்ற விவாதமாகிறது.

    இதற்கு மேலாக, அரசு எந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வது என்பது பற்றிய தெளிவும் இல்லாதது மற்றொரு கவலைக்குரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. கூப்பன் கொடுக்கும் போது ஸ்டார் (*) போட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று சொல்லிவிட்டால் என்ன ஆகும்? தி.மு.க. வாக்குறுதியை எப்படி நம்ப முடியும்? ஒப்பந்தங்கள் வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்குமா, அல்லது தரம் மற்றும் விலை தொடர்பான விஷயங்களில் சந்தேகங்கள் எழுமா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

    கூப்பன் தருவதற்காக, தரம் குறைந்த நிறுவனங்களுடன் அரசு ஒப்பந்தம் செய்தால், மக்கள் கூடுதல் பணம் செலவழித்தும் தரமற்ற பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகும். எனவே எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று விரிவான திட்டத்துடன் வாக்குறுதியை கொடுங்கள். முடிந்தால் எப்போதிலிருந்து செயல்படுத்தப் போகிறோம் என “தேதி போட்டு சொல்லுங்க!”

    ALSO READ:  மெட்ரோ அரசியல்!

    ஏனெனில், 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதி என்ன? “தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000” வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், “அனைவருக்கும் அல்ல… தகுதியுள்ள மகளிர்க்கு மட்டும்” என்ற வரையறை கொண்டு வரப்பட்டது. மகளிர்க்கு எப்படி தகுதி நிர்ணயம் செய்தார்கள் என்பது இப்போது வரை தெளிவாக இல்லை. ‘அனைவருக்கும்’ என்று சொன்ன சொல்லை நிறைவேற்றவில்லை.

    மேலும், 2021 தேர்தலில் அளிக்கப்பட்ட ஐநூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பல இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் வசூல் செய்யப்படும், சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

      மேலும், இந்த ரூ.1,000 உரிமைத்தொகை ஆட்சிக்கு வந்த உடனே வழங்கப்படவில்லை; 27 மாதங்கள் கழித்தே வழங்கப்பட்டது. அதுவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த காலகட்டத்தில், “வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும்?” என்ற கேள்விக்கு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “தேர்தல் அறிக்கையில் தேதி போட்டுக் கொடுத்தோமா?” என்று பதிலளித்தது நினைவில் கொள்ளத்தக்கது.

      இப்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரூ.1,000 உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவோம் என்று புதிய வாக்குறுதி அளிக்கப்படுகிறது. இதனால், ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே, ஜூன் மாதத்திலிருந்து ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது மீண்டும் தகுதி என்ற அடிப்படையில் வடிகட்டல் செய்யப்படுமா? தற்போது ரூ.1,000 பெறுபவர்களில் சிலருக்கே ரூ.2,000 வழங்கப்படுமா? அல்லது இந்தத் திட்டமும் 2029 தேர்தல் காலம் வரை தாமதப்படுத்தப்படுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

      ALSO READ:  சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

      முடிவாக, ரூ.8,000 கூப்பன் அல்லது ரூ.2,000 உரிமைத்தொகை என எந்தத் திட்டமாக இருந்தாலும், வாக்குறுதி மட்டும் போதாது; அது எப்போது நடைமுறைக்கு வரும் என்ற செயல் திட்டம் பற்றிய தெளிவே தி.மு.க.வின் நம்பிக்கையை நிர்ணயிக்கும். இதுபோன்ற இலவசங்களையெல்லாம் கடந்து, வாக்காளர்களும் பொதுமக்களும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

      ஒருமுறை வழங்கப் போகிற ரூ.8,000 கூப்பனுக்காகவே உங்கள் வாக்கை செலுத்தப் போகிறீர்களா? அல்லது தொலைநோக்கு சிந்தனை பார்வையுடன் தேர்தலை அணுகப் போகிறீர்களா? “ரூ.8,000 சலுகை என்பது, சாதாரணமாகவே கடைகளிலும் இ-காமர்ஸிலும் கிடைக்கும் ஒன்றே! அதற்காகவே வாக்கு செலுத்த வேண்டுமா?”

      (செய்திக்கதிர் வாட்ஸ்அப் குழு)

      Leave a Reply

      This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

      Hot this week

      பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

      பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

      பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

      பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

      பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

      பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

      Topics

      பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

      பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

      பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

      பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

      பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

      பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

      பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

      ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

      கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

      பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

      இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

      Entertainment News

      Popular Categories