oppo 7 lite 5 g - 2026

ஒப்போ ரெனோ 7 லைட் 5G: சிறப்பம்சங்கள்..!

வணிகம் அடடே... அப்படியா? தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
oppo 7 lite 5 g - 2026

ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு ஆதரவும் உள்ளது.

மேலும் ColorOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

பின்பு செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

புதிய ஒப்போ ரெனோ 7 லைட் 5G ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 7 லைட் 5G மாடல் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

காஸ்மிக் பிளாக் மற்றும் ரெயின்போ ஸ்பெக்ட்ரம் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 7 லைட் 5G மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவலை ஒப்போ நிறுவனம் வெளியிடவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.