சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ !

paynow and upi - 2026

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., சிங்கப்பூரின் இதேபோன்ற தளமான ‘பேநவ்’ உடன் இணைந்து, விரைவில் செயல்படவிருக்கிறது. கோல்கட்டாவில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தில் பங்கேற்ற, சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்ப அதிகாரி சொப்னெந்து மொஹந்தி, இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம் மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை, ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் யு.பி.ஐ., சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை ஒருங்கிணைந்து, வெகு விரைவில் தங்களுடைய செயல்பாடுகளை துவங்க உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே உடனடியாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும், மொபைல் போன் வழியாகவே, வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

இந்த தளங்களை பயன்படுத்தும் போது, பணம் அனுப்பும் செலவு, தற்போது இருப்பதிலிருந்து, கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு குறையும். இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தினால், இந்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் பொருட்கள் வாங்கினால், யு.பி.ஐ., தளத்தை பயன்படுத்தி, எளிதாக பணம் செலுத்தலாம். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பணப்பரி மாற்றங்கள் எளிதாகும்” என அவர் கூறினார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சம்பந்தமான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த, சிங்கப்பூருக்கு உதவும் வகையில், யு.பி.ஐ., தொழில்நுட்பங்கள் மற்றும் குறியீடுகளை இலவசமாக வழங்க, இந்தியா தயாராக இருப்பதாக, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் துவக்கப்பட்ட, தேசிய பணம் செலுத்தும் நிறுவனமான என். பி. சி.ஐ., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான திலீப் அஸ்பே தெரிவித்தார்.

உலக அளவில் இந்தியாவின் யு.பி. ஐ பிரபலமாகி வருகிறது. தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா எல்லா நாடுகளுக்கும் முன்னோடியாக முன்னேறிவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories