அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் 15% வீழ்ச்சி..

adani104028 - 2026

பிப்ரவரி 2ஆம் தேதி காலை பங்குச் சந்தை வணிகம் தொடங்கியதும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.

அதானி குழுமம், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான கூடுதல் பங்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் அறிவிப்பை நேற்று திரும்பப் பெற்றுக்கொண்டு, கூடுதல் பங்குகள் மீது முதலீடு செய்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திரும்பக் கொடுக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

தனது கூடுதல் பங்குகள் விற்பனையை ரத்து செய்யும் முடிவு வெளியான அடுத்த நாளே, அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அது மட்டுமல்லாமல், அதானி குழுமத்தின் பிற நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே உள்ளன.மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை காலை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவிகிதம் விலை சரிந்து ரூ.1,809.40க்கு வணிகமாகின

இதுபோல, தொடர்ந்து ஆறாவது நாளாக, அதானி குழுமத்தின் இதர நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்து வருகின்றன. அதன்படி, அதானி துறைமுகம் 14 சதவிகிதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 10 சதவிகிதமும், அதானி கிரீன் எனர்ஜி 10 சதவிகிதமும், அதானி டோட்டல் காஸ் 10 சதவிகிதமும், அதானி வில்மர் 5 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 4.99 சதவிகிதமும், அதானி பவர் 4.99 சதவிகிதமும் விலை சரிவைக் கண்டன.அதேவேளையில், அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகள் 9.68 சதவிகிதமும், ஏசிசி நிறுவனப் பங்குகள் 7.78 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனால் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக அதானி குழும பங்குகள் சரிந்துவருகிறது.

இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories