அனுமதி இன்றி அத்தையின் படம் எடுத்தால்..! எச்சரித்த தீபக்!

Published:

deepak 1 - 2026

தங்களுடைய அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, தொலைக்காட்சி தொடராவகோ எடுக்கக் கூடாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டு 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை குயின் என்ற பெயரில் இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனன் வெப்சீரிஸ் தயாரிக்க உள்ளார்.

kowtham menon - 2026

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இது குறித்து அளித்த பேட்டியில் தீபக் அத்தையின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் அனுமதி இல்லாமல் யாரும் படமாகவோ, சீரியலாகவோ எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் எடுக்க ஏற்கனவே இயக்குநர் விஜய் தன்னிடம் அனுமதி வாங்கியுள்ளதாக தீபக் தெரிவித்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எடுப்பதாகவும் கதையை திரித்து எடுக்கமாட்டேன் என இயக்குநர் விஜய் உறுதி அளித்துள்ளதாகவும் தீபக் தெரிவித்துள்ளார்.

jayalalithaa 1 1 - 2026

தற்போது இயக்குநர் கவுதம் வாசுதேவ மேனனின் குயின் என்ற வெப்சீரிஸ் அத்தையின் வாழ்க்கை வரலாறு எனக் கேள்விபட்டிருப்பதாகக் கூறிய தீபக், ஜெயலலிதாவின் வாழ்க்கையை பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு என்ன தெரியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

எங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img