
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அரசியல் பேச்சால் காப்பான் படத்திற்கு பெரிய அளவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பெரிய அளவில் செய்தியாகி உள்ளது.

இதன் மூலம் படத்திற்கு இந்த விழா பெரிய அளவில் விளம்பரத்தை தேடி தந்துவிட்டது எனலாம்.. நடிகர் விஜய் இதில் பேசிய விஷயங்கள், அரசியல் கருத்துக்கள் பல்வேறு தரப்பிலும் வைரலாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த விழாவால் தற்போது காப்பான் படத்தின் புரொமோஷன் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று காப்பான் படம் வெளியானது. நேற்று பிகில் படத்தின் ஆடியோ வெளியானது.

விஜயின் பேச்சால் நேற்று இணையம் முழுக்க எல்லோரும் பிகில் குறித்துதான் பேசினார்கள். விஜய் ரசிகர்கள், கமல் ரசிகர்கள் என்று எல்லோரும் பிகில் குறித்து மட்டும்தான் பேசினார்கள். யாருமே காப்பான் குறித்து பேசவில்லை.
இதனால் காப்பான் படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்களின் கவனத்தை பிகில் படம் திசைமாற்றிவிட்டது. இன்று காப்பான் படம் வெளியாகிறது என்பதே பலருக்கும் தெரியாத சூழலில் படத்தின் விளம்பரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே காப்பான் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் பெரிய அளவில் மக்களை ஈர்த்ததாகத் தெரியவில்லை. படத்தின் ரிவ்யூக்களும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் தற்போது பிகில் பட விழாவில் விஜயின் அரசியல் பேச்சு காப்பான் படத்திற்கு செக் வைத்து இருப்பதாக காப்பான் படக்குழு கவலை அடைந்துள்ளதாம்.